
வேலூர் : வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை வனப்பகுதியில் 2வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. கடும் வரட்சி மற்றும் வெப்பம் காரணமாக நேற்று முன்தினம் பற்றி எரிந்த காட்டுத் தீ சுமார் 7கி.மீ. தூரத்திற்கு பரவி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர். தீயில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமானது. இதனிடையே ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று வனப்பகுதியில் தீ வைத்ததாக வனத்துறையினர் மூன்று பேரை கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Source: Dinakaran