
நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கத்தில் டன் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி தொடர்ந்து எரிந்து வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்எல்சி முதல் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி பல்லாயிரம் டன் கணக்கில் மலை போல் குவித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிலக்கரி சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. இதனால் நிர்வாகத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. நிர்வாகம் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.சுரங்க பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் புகை மண்டலத்தால் முச்சு திணறல் ஏற்பட்டு வேலை செய்யமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாதம் முன்பு இரண்டாவது சுரங்கத்தில் இதே போல் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
Source: Dinakaran