கடகம் – Kadagam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0
38
Click Image Below And Get Our App For Free

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

சனிபகவான், 19.12.17 முதல் 26.12.29 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும்.

பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:  19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும்.

Click Image Below And Get Our App For Free

உங்களின் சுக – லாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர் களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்துகள் ஏற்படலாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தன ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத் திரம் முதல் பாதத்தில் செல்வதால், உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். பழைய பிரச்னைகளை நினைத்து வருந்துவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால்,  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும்.  புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.

இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும்.  கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

மாணவ – மாணவிகளே! முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும்,  பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply