கும்பம்: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

0
1672
Click Image Below And Get Our App For Free

அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால், பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

3.10.2018 வரை குரு 9-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலைப்பளு குறையும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி லாப வீட்டில் வந்து அமர்வதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் யோகம், பணவரவு உண்டு.

Click Image Below And Get Our App For Free

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 12-ம் வீட்டில் நிற்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ல் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவர்.

13.2.2019  முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலம் சரியாகும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் வரக்கூடும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.

9.6.2018 முதல் 4.7.2018 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், சின்னச்சின்ன வாகன விபத்துகள் வரும் என்பதால், கவனமாக பயணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக் கெல்லாம் சண்டை வரும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகளைச் செய்யுங்கள். அதிக வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வரும். கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். சித்திரை, ஆடி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்யவேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளைப் பகைக்கவேண்டாம். மாசி மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், விடாமுயற்சி யாலும் கடும் உழைப்பாலும் உங்களுக்கு முன்னேற் றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம் 

 தர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply