பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப் பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.
இந்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
ஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் நல்ல விதமாக நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
5.7.2018 முதல் 1.8.2018 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவர். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.
14.4.2018 முதல் 12.2.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.
13.2.2019 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமையை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்கு களை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கை யாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக் கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், வசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதாக அமையும்.
பரிகாரம்
தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.