மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,
வருட ஆரம்பம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிறப்பதால், வேலைகளைப் போராடி முடிக்கவேண்டியது வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் துரத்தும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் திருமணத்தை முன்னிட்டு கடன் ஏற்படக்கூடும்.
14.4.18 முதல் 12.2.19 வரை ராகு 12-லும் கேது 6-லும் தொடர்வதால், நீண்டகாலமாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டா கும். விழாக்கள், விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்தி ருப்பதால், சில வேலைகளை இரண்டு மூன்று முறை போராடித்தான் முடிக்க வேண்டியிருக்கும். பேச்சால் பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, கவனம் தேவை. 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 4-ல் அமர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழிச் சொத்தைப் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். மற்றவர்களின் ஆலோசனையை அப்படியே ஏற்காமல், சிந்தித்து முடிவு செய்வது நல்லது. சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று தீர விசாரிக்கவும்.
ஆனால், 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 5-ல் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்லதொரு வேலையும் அமையும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 5-ல் நீடிப்பதால், தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர் பான முயற்சிகள் தாமதமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.
25.2.19 முதல் 21.3.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், கணவன்-மனைவிக்கிடையில், வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும்; பொறுமை அவசியம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைக்கு அலர்ஜி போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 6-ல் சேர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
வியாபாரத்தில். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். பங்குனி மாதத்தில் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத் திலிருந்து புதிய பங்குதாரர் வர வாய்ப்பு இருக்கிறது. உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வைகாசி மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் பிற்பகுதி உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.
பரிகாரம்
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி எனும் ஊரில் அருளும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.