341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
346. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் – 30
349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார்
354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் – செய்குத் தம்பிப் பாவலர்
355. சதுரகராதி ஆசிரியர் – வீரமாமுனிவர்
356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் – கவிஞர் தமிழழகன்
357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் – வச்சிர நந்தி சங்கம்
359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
Tamil GK For Government Exams – 0106
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free