2015 டிசம்பர் மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2015 December Madha Rasipalan

0
243
astrology forecast | ராசிபலன்
Click Image Below And Get Our App For Free

2015 டிசம்பர் 1 முதல் 31 வரை

– நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

 மேஷம்:

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல்செவ்வாயும்  ராகுவும் 8-ல் புதனும்  உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை  உயரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். அலௌவலகப்  பணிக்ளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும்கிடைக்கும்.  ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பயணத்தின்  மூலம் முக்கியமான காரியம் நிறைவெறும்க்.

8-ல் சூரியனும் சனியும் உலவுவதால் மனத்தில் ஏதேனும் சஞ்சலம் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை. உழைப்பு  அதிகரிக்கவே செய்யும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வீண்பழி சுமத்தப்பட நேரலாம்; எச்சரிக்கை  தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அல்லது. வியாபாரிகளுக்கு புத பலத்தால் முன்னேறறம்  உண்டாகும். மாணவர்களது நிலை உயரும். 16-ஆம் தேதி முதல் தந்தை நலம் சீராகும். தொலைதூரத் தொடர்பு  பயன்படும். புனித யாத்திரை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

23-ஆம் தேதி முதல் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது  நல்லது. வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். 26-ஆம் தேதி முதல் தகவல் தொடர்பு  இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். சொந்தத் தொழில் லாபம் தரும். குரு உபதேசம்  சிலருக்கு மாதப்பின்பகுதியில் கிடைக்கும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும்.

Click Image Below And Get Our App For Free

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு. ..

எண்கள்: 3, 4, 5, 6, 9.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான மன நிலை அமையும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகி இருப்பது அவசியமாகும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை. கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் விஷயத்தில் விழிப்புத் தேவை. செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் அதிக அக்கறை செலுத்தினால் மட்ய்டுமே வளர்ச்சி காண முடியும்.

எதிலும் அலட்சியப்போக்கு இடம் தரலாகாது. மாதப் பின்பகுதியில் உஷ்ண சம்பந்ந்தமான உபாதைகள் ஏற்படும். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. வியாபாரிகளுக்கு 6-ஆம் தேதி முதல் முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். மாணவர்களுக்கு திறமைக்குரிய வளர்ச்சி தெரியவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் உழைப்பு அதிகரிக்கும். அந்த அளவுக்குப் பயன் இராமல் போகும்.

23-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். 25-ஆம் தேதி  முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறி சனியுடன் கூடுவதால் வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். முக்கியமான உறவினரையோ, நண்பரையோ விட்டுப் பிரிய வேண்டிவரும்.

ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 10, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசை: வடமேற்கு.

எண்: 7.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியன், புதன், சனி ஆகியோரும் 10-ல் கேதுவும உலவுவதால் மன உற்சாகம்  பெருகும். முக்கியமான எண்ணங்களில் சில இப்போது நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள்,  அலங்ஹ்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும்.  கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும்.  உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பொதுநலப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.  வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும்; எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு கிடைக்கும். 3-ல் குருவும், 4-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் நண்பர்களே விரோதிகள் ஆவார்கள் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது.

பயணத்தின்போதும், விளையாட்டில்போதும், இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கவனம் தேவை. சிறு விபத்துக்கு  ஆட்பட நேரலாம். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் பணிபுரிவது நல்லது.  பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். மாதப் பின்பகுதியில் மக்கள் நலனில்  அக்கறை தேவைப்படும்.

மிருகசீரிஷம், புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

கடகம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாய், ராகு ஆகியொரும் 4-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். பண  நடமாட்டம் திருதிகரமாக இருந்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். மனத்தில் உற்சாகம்  கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு  அதிகமாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.  பேச்சில் திறமை கூடும்.

உத்தியொகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞினீயர்களுக்கு  செழிப்புக் கூடும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள்  சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைத்துவரும். மக்களால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். கணவன்  மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பயணத்தால் ஒரு எண்ணம்  நிறைவேறும்.

மாதப் பின்பகுதியில் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். நிர்வாகத்திறமை கூடும். அரசு உதவி  கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். மேலதிகாரிகளின்  பாராட்டுக்களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.  துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும்.

புனர்பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு..

எண்கள்: 3, 4, 6, 9.

 சிம்மம்:

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும்.  வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.  உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மன உற்சாகம் பெருகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். சினிமா,  நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். மாணவர்கள் தங்கள் தகுதிக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும்.  மக்களாலும், வாழ்க்கைத்துணைவரால்ம் அனுகூலம் உண்டாகும். மாதப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். முக்கியஸ்தர்களின் தொடர்பு நலம் தரும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது நல்லது. எதிலும் வேகம் கூடாது. விவேகம் அவசியமாகும்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில்  பணிபுரியும்போதும், மின்சாதனங்களின் பக்கம் நெருங்கும்போதும், விளையாட்டில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். 23-ஆம் தேதி முதல் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் லாபம் தரும். மன உறுதி அதிகரிக்கும்.

25-ஆம் தேதி முதல் கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.  பழைய நண்பர்களது சந்திப்பு நிகழும். 26-ஆம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும்; கவனம் தேவை.

பூர  நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 21, 25, 27, 28, 30.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

எண்கள்: 5, 6.

கன்னி:

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியன், சனி ஆகியோரும் உலவுவது நல்லது.  முக வசீகரம் கூடும். பண  நடமாட்டம் சற்று கூடவே செய்யும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களிடம் அன்புடன் பேசிப் பழகுவார்கள். விருந்து,  உபசாரங்களில் ஈடுபாஉ உண்டாகும். பேச்சில் திறமை கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். ஆடை,  அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கணவன் மனைவி உறவு  நிலை சீராகும்.

அரசியல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நிர்வாகிகளுக்கு வரவேற்பு கூடும்.  உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை தொடர்ந்து இருந்துவரும்.  விவசாயிகளுக்கு வருவாய் கூடும். 6-ஆம் தேதி  முதல் வியாபாஅரிகளுக்கு மந்தநிலை விலகும். மாணவர்களது நிலைமையில் அபிவிருத்தி தெரியவரும். 16-ஆம் தேதி முதல் அலைச்சல் சற்று அதிகரிக்கும். பழைய சொத்துக்களை  விற்கவேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.

23-ஆம் தேதி முதல் குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். வீண்வம்பு வேண்டாம். 25-ஆம் தேதி முதல்  உடன்பிறந்தவர்களால் நலம் கூடப் பெறலாம். 26-ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் சற்று அதிகரிக்கும்.  மக்களால் ஓருரு காரியங்கள் நிறைவேறும்.சுபச் செலவுகள் அதிகமாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும்; எச்சரிக்கை  தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

ஹஸ்தம், சித்திரை  நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் சற்று கூடும்,

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20 (பகல்), 25, 27, 28, 30.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 8.

துலாம்:

உங்கள் ராசியில் சுக்கிரனும் 6-ல் கேதுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. மனத்துக்கினிய சம்பவக்னகள் வாழ்க்கையில் நிகழும். புஇதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். கலைஞானம் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். தோற்றப்பொலிவு கூடும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சி உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும்.

ஆன்மிகப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். எதிர்ப்புக்கள் குறையும். 12-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. எரிபொருள், மின்சாரம், ஆயுதம், வெடிப்பொருள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை.

6-ஆம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 16-ஆம் தேதி முதல் அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடும். உடன்பிறந்தவகளால்ம், முக்கியஸ்தர்களாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.26-ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும். மாணவர்களது திறமை வெளிப்படும். புதிய சொத்துக்கள் சிலருக்கு சேரும்.

சித்திரை, விசாக  நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.. .

எண்கள்: 3, 6, 7.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் கூடியிருப்பது நல்லது. சுக்கிரனும் அனுகூலமாக  உலவுகிறார். இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். செயலில் வேகம் பிறக்கும். இயந்தி டிரப்பணிகள் லாபம் கொண்டுவரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பமோ, சாதக்மான தீர்ப்போ கிடைக்கும். விளையாட்டி வொநோதங்களில் வெற்றி காணலாம். போட்டிகளிலும் பந்தயங்களிலும் கூட வெற்றி கிடைக்கும்.

பயணம் சார்ந்த தொழில் அதிக லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடம்பர, அழகான பொருட்களின் சேர்க்கை நிகழும். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துக்களின் சேர்க்கை நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். 6-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும்.

கணிதம், எழுத்து, வியாபாரம், போன்ற இனங்களால் வருவாய் கூடும். 16-ஆம் தேதி முதல் செல்வ நிலையில் அதிக வளர்ச்சி காண வழிபிறக்கும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20, 21, 27, 28, 30.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு. .

எண்கள்: 4, 6. 9.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் கூடியிருப்பது நல்லது. சுக்கிரனும் அனுகூலமாக  உலவுகிறார். இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். செயலில் வேகம் பிறக்கும். இயந்தி டிரப்பணிகள் லாபம் கொண்டுவரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பமோ, சாதக்மான தீர்ப்போ கிடைக்கும். விளையாட்டி வொநோதங்களில் வெற்றி காணலாம். போட்டிகளிலும் பந்தயங்களிலும் கூட வெற்றி கிடைக்கும்.

பயணம் சார்ந்த தொழில் அதிக லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடம்பர, அழகான பொருட்களின் சேர்க்கை நிகழும். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துக்களின் சேர்க்கை நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். 6-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும்.

கணிதம், எழுத்து, வியாபாரம், போன்ற இனங்களால் வருவாய் கூடும். 16-ஆம் தேதி முதல் செல்வ நிலையில் அதிக வளர்ச்சி காண வழிபிறக்கும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 7, 15, 20, 21, 27, 28, 30.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு. .

எண்கள்: 4, 6. 9.

மகரம்:

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் சூரியன், புதன், சனி ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் 10-ல்  உலவினாலும் கூட நலம் புரிவார். மனத்தில் உற்சாகம் பெருகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜப,  ஹோமம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். உழைப்பும்  திறமையும் வீண்போகாமல் இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். தந்தையால் நலம் பெருகும். வாழ்க்கைத்துணை நலம் சீராகும்.

அரசாங்கப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். தொழிலாளர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கல் லாபம் தரும். பழைய பொருட்களாலும் கூட இப்போது லாபம் கிடைக்கும். . 6-ஆம் தேதி முதல் புதனும், 16-ஆம் தேதி முதல் சூரியனும் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கண், நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசாங்கத்தாரால் செலவுகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும்.

23-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவதால் இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களாலும் ஆதாயம் கிடைக்கும். மனத்துணிவு அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். 25-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் லாபம், அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகிகளும் கூடிவரும். 26-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

திருவோணம், அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 6, 7, 15, 20, 21, 25, 27, 28.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

கும்பம்:

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும்  அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மன மகிழ்ச்சி கூடும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.

பெண்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்,. செய்து வரும் தொழிலில்  விருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பிரச்னைகள் குறையும். தந்தையால் அனுகூலம் ஏற்படும்க். அரசு உதவி கிடைக்கும். நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். நல்ல இடத்துக்கு மாறுதல் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். கூட்டாகத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகமாகும்.

8-ல் செவ்வாய்ம் ராகுவும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக வேண்டிவரும்; எச்சரிக்கை தேவை. பிற மொழி, மத, இனக்காரகளிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 23-ஆம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். சங்கடங்கள் குறையும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். அவர்களது பிரச்னைகளும் குறையும்.

மிருகசீரிஷம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 7, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 3, 5, 6, 8.

 மீனம்:

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன் உலவுவ்து ஒன்றே சிறப்பாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால் எதிலும் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும்  குறையும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். எதிர்ப்புக்கள் சற்று வலுக்கும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பேசிப் பழகவேண்ட்யாம். எடுத்த காரியங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். அலட்சியம் கூடாது.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். 6-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கும் கணிதத்துறையினருக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும். மாணவர்களது நிலை உயரும். 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் புதிய பதவிகளும் பட்டங்களும் சிலருக்கி கிடைக்கும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.  முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக வேண்டிவரும். எரிபொருள், கூரிய ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை.

வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். பொருளாதார நிலை  சாதாரணமாகவே காணப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எணணி ஏமாற வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. எதிலும் யோசித்து நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும்.

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் சற்று கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: டிசம்பர் 2, 6, 15, 20, 21, 25, 27, 28, 30.

திசைகள்: தென்கிழக்கு

எண்: 6.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply