மிதுனம்: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

0
896
Click Image Below And Get Our App For Free

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

உங்கள் ராசிக்கு 10-ல் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை உழைத்த உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு 5-ல் இருப்பதால், அறிஞர்களின் நட்பால் சில விஷயங் களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 6-ல் மறைவதால், வரவுக்கு அதிகமான செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்திலும் கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் ஏற்பட்டு நீங்கும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசாரத்தில் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகை களை வாங்குவீர்கள். தெய்வ நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள்.

Click Image Below And Get Our App For Free

2.1.19 முதல் 29.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.  வருடம் முழுவதும் சனிபகவான் 7-ம் வீட்டில் கண்டகச் சனியாகத் தொடர்கிறார். புதிய நண்பர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 8-ல் இருப்பதால், சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், வாகன பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் அமர்வதால், உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க் கவும். மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வியாபாரத்தில் சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங் களை நுணுக்கமாக கவனித்து, பெரிய முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்து வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள்.

ஹார்டுவேர், ஓட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். என்றாலும் கண்டகச் சனி தொடர்வதால், கூட்டுத் தொழிலைத் தவிர்ப் பது நல்லது. பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும். மூத்த அதிகாரி சில முக்கிய ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகளைத் திரும்பப் பெறுவீர்கள். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சமூகத்தில்  உங்களுக்குப் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் 

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளை, ஒரு சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply