ரிஷபம்: 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

0
961
Click Image Below And Get Our App For Free

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வருடம் பிறப்ப தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்தஸ்து உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 6-ல் மறைந்து இருப்பதால், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். விலையுயர்ந்த பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், போட்டி, பொறாமைகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 13.3.19 முதல் வீண் அலைச்சல், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருக்கும் பூர்வீகச் சொத்தில் அதீத கவனம் செலுத்தவும்.

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். கடந்தகால இழப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

Click Image Below And Get Our App For Free

13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும் ராகு 2-லும் அமர்வதால், மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக்கொள்வது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத் தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. 31.8.18 முதல் 1.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.கணவன் – மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 9-ல் இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பாதிப் பணம் தந்து பதிவு செய்யாமல் இருந்த சொத்தை, மீதிப் பணம் தந்து பதிவு செய்து கொள்வீர்கள். சகோதரர்களுடன் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தை சிலநேரங்களில் கோபப் பட்டாலும், நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

அஷ்டமத்தில் சனிபகவான் தொடர் வதால், வியாபாரத்தில் புதியவர்களை நம்பிக் கடன் தரவேண்டாம். ஆடி, ஐப்பசி மாதங்களில் பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும். வர்த்தக சங்கத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றவேண்டிய நிலை ஏற்படும். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகப் பணியின் காரணமாக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். ஆனாலும், உத்தியோகத்தில் நீடிப்பது பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வந்து சேரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடின உழைப் பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம் 

தஞ்சை மாவட்டம், மணலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை, ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று வழிபட்டு வாருங்கள். நோய்கள் நீங்கும்; நன்மைகள் பெருகும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply