Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
                  A. கண்
                  B. இலை
                  C. காலை
                  D. பூ
                  Answer : C.
# காப்பாய் – இச் சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
                  A. கா
                  B. காப்பு
                  C. காப்ப
                  D. காக்க
                  Answer : A.
                    # பொருந்தாத சொல்லைக் கண்டறிக
                  A. தத்தை
                  B. மயில்
                  C. சுகம்
                  D. கிள்ளை
                  Answer : B.
# எந்தை – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. வினைச்சொல்
                  B. மரூஉச்சொல்
                  C. பெயர்ச்சொல்
                  D. உரிச்சொல்
                  Answer : B.
# திறன் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. ஈற்றுப்போலி
                  B. தொழிற்பெயர்
                  C. ஆகுபெயர்
                  D. வினையெச்சம்
                  Answer : A.
# கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே – இயைபுத் தொடையை தேர்க.
                  A. கயிலையெனும் – கனகமகா
                  B. வடமலை – தெற்குமலை
                  C. அம்மே – அம்மே
                  D. நிற்குமலை – மேருவென
                  Answer : C.
# தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
                  A. இளங்கோவடிகள்
                  B. திருத்தக்கத் தேவர்
                  C. நாதகுத்தனார்
                  D. சீத்தலைச் சாத்தனார்
                  Answer : D.
# இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
                  A. அண்மைச் சுட்டு
                  B. சேய்மைச் சுட்டு
                  C. சுட்டுத்திரிபு
                  D. வினா எழுத்து
                  Answer : A.
# அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
                  B. வினைமுற்று
                  C. அடுக்குத் தொடர்
                  D. பண்புத் தொகை
                  Answer : A.
# செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
                  A. பாரதிதாசன் அழகின் சிரிப்பை இயற்றினார்
                  B. நல்லவர்கள் என்றும் உயர்வர்
                  C. பாடம் என்னால் படிக்கப்பட்டது
                  D. ஊக்கமிலார் உயர்வடையார்
                  Answer : A.