 
                   
                  Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
#  தே – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
                  A. தேம்புதல்
                  B. தேடுதல்
                  C. இறைவன்
                  D. அரசன்
                  Answer : C.
#  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
                  A. நொறுங்கு, பண்ணை, பனி, நரை
                  B. நரை, பனி, நொறுங்கு, பண்ணை
                  C. நரை, நொறுங்கு, பண்ணை, பனி
                  D. பனி, நரை, நொறுங்கு, பண்ணை
                  Answer : C.
 
                    #  எதிர்ச்சொல் தருக : அகலாது
                  A. மறையாது
                  B. விலகாது
                  C. அணுகாது
                  D. பிறழாது
                  Answer : C.
#  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
                  A. வெட்சித்திணை
                  B. வஞ்சித்திணை
                  C. தும்பைத்திணை
                  D. குறிஞ்சித்திணை
                  Answer : D.
#  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு – மறுப்பு
                  A. தந்தம் – எதிர்ப்பு
                  B. சேவல் – எதிர்ப்பு
                  C. மன்னன் – உறக்கம்
                  D. குதிரை – எதிர்ப்பு
                  Answer : A.
#  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – களை
                  A. ஆண்மான் – அகற்று
                  B. ஆடல் – வண்ணம்
                  C. பாடல் – ஓசை
                  D. வெளிச்சம் – இருள்
                  Answer : A.
#  எந்தை – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. வினைச்சொல்
                  B. மரூஉச்சொல்
                  C. பெயர்ச்சொல்
                  D. உரிச்சொல்
                  Answer : B.
#  பிரித்து எழுதுக :அரும்பொருள்
                  A. அருமை + பொருள்
                  B. அரும் + பொருள்
                  C. அரு + பொருள்
                  D. அ + பொருள்
                  Answer : A.
#  முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
                  A. நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
                  B. ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
                  C. ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
                  D. ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
                  Answer : D.
