

ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 72 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் திடீரென மாயமாகிவிட்டதால் புலனாய்வு அமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ISIS தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தல் மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட புகாரில் நாடு முழுவதும் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் அண்மையில் பதிவு செய்துள்ள ஒரு வழக்கில், தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூரை சேர்ந்த ஹாஜா பக்ரூதின், ஹாஜா மொய்தின், சென்னையை சேர்ந்த ஷாகுல் ஹமீத், அன்சார் மீரான், முகமது தப்ரிஸ், நெல்லையை சேர்ந்த மசூத் அசாருதின், நாகையை சேர்ந்த சாதிக் பாட்சா, கரூரை சேர்ந்த மொகமத் சையத் அபுதாகிர் ஆகியோருடன் தெலுங்கானாவை சேர்ந்த ஜலில் என்பவரது பெயரும் FIR-ல் இடம் பெற்றுள்ளது. அண்மையில் கர்நாடகாவில் இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவவன் கைது செய்யப்பட்ட போது, இவர்கள் 9 பேர் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. இந்த 9 பேரும் தலைமறைவாகிவிட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருவதாக தேசிய புலனாய்வு பிரிவின் முூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவர்களில் பக்ருதின் மற்றும் அவரது குடும்பத்ஙதினர் 6 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தனர். 2013-ம் ஆண்டு சிரியா சென்று விட்டு இந்தியா திரும்பிய பின்னர் பக்ருதின் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.
Source: Dinakaran

