
General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# 1 டஜன் என்றால் – 12 பொருட்கள்
# 1 குரோசு என்றால் – 12 டஜன் (144 பொருட்கள்)
# 1 ஸ்கோர் என்றால்- 20 பொருட்கள்
# ஒரு வருடத்தில் மொத்தம் – 365 நாட்கள்
# லீப் வருடத்தில் மொத்தம் – 366 நாட்கள்
# நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் – லீப் வருடம்
# 100 சதுர மீட்டர் என்பது – 1 ஆர்
# ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
# நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
# மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
# நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
# நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
# தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
# எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
# சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
# கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
# உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
# புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
# விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
# வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
# முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
# கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
# இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
# லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
# S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
# இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
# ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
# ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? – 0.24
# 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? – லிம்
# விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? – மதிப்பெண்
# இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3