கார்த்திகை மாத ராசி பலன்கள் | Karthigai Month Rasi Palan

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும், குழந்தைகளால் சங்கடங்கள் நேரிடலாம். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும், எதிரிகளை வெல்வீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு திடீர் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் இருந்து பண வரவு உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை 14ம் தேதிக்குப் பிறகு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சீரடையும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும், பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை, வெளியூர் பயணம் உண்டாகும்.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், அப்பாவின் தொழிலில் ஈடுபாடு உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி உண்டாகும், வீடு மனை நிலம் வகைகளில் தன வரவு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய்மாமனுடன் விவாதம் வேண்டாம், 20ம் தேதிக்குப் பிறகு வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், படிப்பில் கவனம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்,14ம் தேதிக்குப் பிறகு வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும், பூர்வீக வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும், பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் 20ம் தேதிக்கு பிறகு கல்வியில் மேன்மை உண்டாகும்.. குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பணியிடத்தில் இடமாற்றம் உண்டாகும், வெளியூர் பயணம் செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் 14ம் தேதிக்குப் பிறகு குழந்தைகளின் கல்விநிலை சீரடையும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பதில் ஊக்கம் உண்டாகும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மற்றும் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் வெற்றி கிடைக்கும், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், சகோதரர்களால் சந்தோஷம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு ஷேர்மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் 14ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கேளிக்கை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், தொழிலில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களாலும் பக்கத்து வீட்டுக்காரர்களாலும் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும், ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும், அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவியினால் பண வரவு அதிகரிக்கும், பேச்சில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 20ம் தேதிக்குப் பிறகு புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் அனைவரிடமும் நட்புறவு சிறக்கும், மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் 14ம் தேதிக்குப் பிறகு சகோதரியின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் மேம்படும், படிப்பில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப ஒற்றுமையில் கவனம் தேவை வீண் விவாதத்தைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் பண வரவு அதிகரிக்கும்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் எதிர் பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகமாகும் தலையில் நோய் உண்டாகலாம். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பிறகு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபமங்கள தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிகமாக செலவுகள் செய்வீர்கள். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 14ம் தேதிக்குப் பிறகு பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் வெளியூர் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும் உடலில் அசதி அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும், தன லாபம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடு செய்வீர்கள் மருத்துவ செலவுகள் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழிலில் மேன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் தொடர்புகள் தன வரவை பெருக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும் 14ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதற்க்கமான பேச்சைத் தவிர்க்கவும் விவசாயம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய வகை இயந்திரங்களில் முதலீடு செய்வீர்கள் மருத்துவ செலவுகள் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எடுத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும் நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பிறகு வியாபார நிலை சீரடையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வேகம் உண்டாகும் உண்டாகும் தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் யோகம் உண்டாகும் 14ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப் பளு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரசாயனத் தொழில் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும் புதிய இயந்திரம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 20ம் தேதிக்குப் பிறகு கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செய்யும் நிலை உண்டாகும் பரம்பரை சொத்தி சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 14ம் தேதிக்குப் பிறகு குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கையிருப்பு கரையும் வீண் செலவுகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் அபிவிருத்தி உண்டாகும் உணவு வகைகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் வீடு பராமரிப்பு செய்யும் நிலை.

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும் கோதுமை வியாபாரம் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூர பயணம் உண்டாகும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சார்ந்த படிப்புகளில் முன்னேற்றம் உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருள் அதிகரிக்கும் 14ம் தேதிக்குப் பிறகு மனைவியால் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பவை எல்லாம் எளிதில் நிறைவேறும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் வயிற்றில் வேதனை தோன்றும் நிலை உருவாகலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம் பக்கத்தார் உதவி செய்வார்கள் சிறு தூர வெளியூர் பயணம் உண்டாகும்.

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும், மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழிலில் பண வரவு அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்பு சிறப்படையும் 20ம் தேதிக்குப் பிறகு ஒப்பந்தத் தொழில் மேன்மையடையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவும் வங்கிச் சேமிப்பும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பணவரவு உண்டாகும் 14ம் தேதிக்குப் பிறகு குல தெய்வ அருளினால் புதிய சாதனை செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக எடுக்கும் செயல்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும் தொழில் நிலையும் சிறப்பாக இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பொதுவான நற்பலன்கள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் நன்மை உண்டாகும், பிதுராஜ்ஜித சொத்துகள் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் நிலபுலன் வகைகளில் பண வரவு அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் 20ம் தேதிக்குப் பிறகு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கையாளுதலில் கவனம் தேவை குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் 14ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வயதில் பெரியவர்களால் நன்மை உண்டாகும் குல தெய்வ வழிபாடு சிறக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.