Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# சுடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A. சுட்ட
B. சுடுதல்
C. சூடு
D. சுட்டான்
Answer : B.
# நில் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. நின்றார்
B. நின்று
C. நின்றவன்
D. நிற்றல்
Answer : C.
# அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A. துறைமுகம், தளிர், திரை, தாமரை, தீமை
B. தீமை, துறைமுகம், திரை, தளிர், தாமரை
C. தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
D. தாமரை, தீமை, துறைமுகம், தளிர், திரை
Answer : C.
# ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை – அளை
A. கூப்பிடு – தயிர்
B. நத்தை – சேறு
C. துன்பம் – சோறு
D. கடல் – பாம்புப்புற்று
Answer : D.
# பை – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. பச்சை
B. வெள்ளை
C. கருப்பு
D. நீலம்
Answer : A.
# போவாள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. போதல்
B. போ
C. போன
D. போகும்
Answer : B.
# உழைப்பால் வறுமை ஓடியது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A. தன்வினை வாக்கியம்
B. பிறவினை வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. செயப்பாட்டு வினை வாக்கியம்
Answer : A.
# மழை கண்ட பயிர் போல – உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. துன்பம்
B. வறுமை
C. அச்சம்
D. மலர்ச்சி
Answer : D.
# கொடுப்பதுஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
A. இன்னிசை அளபெடை
B. சொல்லிசை அளபெடை
C. செய்யுளிசை அளபெடை
D. ஒற்றளபெடை
Answer : A.