Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
# திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
# ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
# கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்
# ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
# ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
# ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
# முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்… மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
# ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
# பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
# ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
# இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
# மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
# ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
# ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
# ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
# போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர்(Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
# அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை ’1001 அரேபிய இரவுகள்’ நூலில் உள்ள கதைகள்.
# தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
# நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட்
# 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
# `லிட்டில் கார்ப்பொரல்’ என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்
# வாசனைப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
# பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
# இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).
# யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
# நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
# உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.