 
                   
                  Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
#  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
                  A. பாரதியார் பாடிய நூல்கள் யாவை?
                  B. பாரதியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
                  C. தேசியக் கவியா பாரதியார்?
                  D. பாரதியாரின் பெற்றோர் யார்?
                  Answer : B.
#  மா – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
                  A. சிறிய
                  B. குறுகிய
                  C. பெரிய
                  D. அம்மா
                  Answer : C.
 
                    #  வருகின்றனன் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
                  A. வா
                  B. வரும்
                  C. வந்த
                  D. வந்து
                  Answer : A.
#  தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
                  A. பிறவினை வாக்கியம்
                  B. செயப்பாட்டு வினை வாக்கியம்
                  C. தன்வினை வாக்கியம்
                  D. செய்வினை வாக்கியம்
                  Answer : B.
#  வெரூஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. ஆகு பெயர்
                  B. அளபெடை
                  C. முற்றெச்சம்
                  D. ஈற்றுப்போலி
                  Answer : B.
#  பிரித்து எழுதுக : முத்தமிழ்
                  A. முத்து + தமிழ்
                  B. மு + தமிழ்
                  C. மூன்று + தமிழ்
                  D. மும்மை + தமிழ்
                  Answer : C.
#  பிரித்து எழுதுக : பாடாண் திணை
                  A. பா + டாண் + திணை
                  B. பாடா + திணை
                  C. பாடு + ஆண் + திணை
                  D. பாடாண் + திணை
                  Answer : C.
#  பொருந்தாத் தொடரைத் தேர்க :
                  A. வாடகை – குடிக்கூலி
                  B. பந்தயம் – பணயம்
                  C. தெம்பு – ஊக்கம்
                  D. வாடிக்கை – ஒழுங்கு
                  Answer : C.
#  நீர்வேலி – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
                  A. பண்புத்தொகை
                  B. உருவகம்
                  C. வினைத்தொகை
                  D. உவமைத்தொகை
                  Answer : B.
