Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது
B. கனிமொழி கட்டுரை எழுதினாள்
C. கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்
D. கனிமொழி கட்டுரை எழுதுவாள்
Answer : B.
# தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கயல்விழி தேர்வுக்கு படித்தாள்
B. கயல்விழி தேர்வுக்குப படி
C. கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
D. கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்
Answer : A.
# சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
A. கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
B. புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
C. பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
D. சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
Answer : D.
# வயல் – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. இடப்பெயர்
B. காலப்பெயர்
C. பண்புப்பெயர்
D. பொருட்பெயர்
Answer : A.
# படி – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.
A. படிக்கும்
B. படியும்
C. படிப்பதற்கு
D. படித்து
Answer : D.
# இகழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. இகழ்தல்
B. இகழு
C. இகழும்
D. இகழ்வார்
Answer : D.
# உழு – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. உழுதார்
B. உழுது
C. உழுத
D. உழுதல்
Answer : A.
# அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A. தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
B. தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
C. தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
D. தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
Answer : B.
# Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.
A. முதல்வர்
B. கொள்கை
C. அதிகாரி
D. நோக்கம்
Answer : B.