# திருத்தொண்டர் திருவந்தாதி யார் பாடியது
நம்பியாண்டார் நம்பி
# சேக்கிழார் இயற்பெயர் என்ன
அருண்மொழித் தேவர்
# நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்
நாதமுனிகள்
# திருமழிசை யாழ்வார் இயற்பெயர் யாது
பக்திசாரர்
# கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்
சீத்தலைச்சாத்தனார்
# மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர்
கேளாய் என்று கூறும் நூல் எது
மணிமேகலை
# நரி விருத்தம் யார் பாடிய நூல்
திருத்தக்கதேவர்
# கம்பரை ஆதரித்த வள்ளல் யார்
சடையப்பவள்ளல்
# நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்
குணவீரபண்டிதர்
# நளவெண்பா இயற்றியவர் யார்
புகழேந்திப்புலவர்
# நன்னூல் யாரால் எழுதப் பெற்றது
பவணந்திமுனிவர்
# ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது யார்
சிந்தாதேவி
# சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்ளது.
# புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் எது
பன்னிருபடலம்
# யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்
அமிதசாகரர்
# தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது
பொய்யா மொழிப் புலவர்
# பெண்களின் பருவங்கள் எத்தனை
ஏழு
# மூவருலா பாடியவர் யார்
ஒட்டக்கூத்தர்
# கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை
18
# சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது
1975