இந்த வார ராசி பலன் 11-02-2016 முதல் 17-02-2016 வரை
மேஷ ராசி வாசகர்களே
சூரியன், புதன், குரு, சுக்கிரன், கேது, ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை சிறக்கும். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வர்வேற்பு கூடும்.
சுப காரியச் செலவுகள் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். முக்கியமான நபர்கள் உதவி புரிவார்கள். 8-ல் சனி உலவுவதால் எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1,3, 5, 6, 7.
பரிகாரம்: ராகு, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே,
செவ்வாய், சுக்கிரன் கேது, ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். நிலபுலன்கள் வாங்குவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வார பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும்,சிக்கனம் தேவை. 13-ம் தேதி முதல் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றிக் கிடைக்கும். மக்களால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் ஓரளவு நலம் உண்டாகும்.கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே,
புதன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் தொலைதூர பயணத்தின் மூலம் நலம் உண்டாகும். பொருளாதார நிலை வளர்ச்சி பெறும். குடும்பத்தில் நல்ல காரியம் நிகழும். திரவப் பொருட்கள் லாபம் தரும். பிற மொழி, மதத்தவரால் அனுகூலம் உண்டாகும். கருப்பு, கருநீலப் பொருட்கள் லாபம் தரும். மக்களாலும் தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்படும்.
வியாபரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். 13-ம் தேதி முதல் கலைஞர்களுக்கு பிரச்சனைகள் விலகும். பொது நல பணிகளில் உள்ளவர்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். பூமியிலிருந்து வெளிப் படும் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள் பிப்ரவரி 11, 12.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கருநீலம், கறுப்பு, பச்சை.
எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: குருப் ப்ரீதி செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை வழி உறவினருக்கும் உதவுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே,
குரு ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். தெய்வானுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பணப் பெருக்கம் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் ஆக்கம் தரும். நிலபுலன்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இராது. சகிப்புத் தன்மை தேவை. கூட்டுத் தொழிலில் கவனம் அவசியம். பங்குதாரர்களை நம்பி ஏமாற வேண்டாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. வார பின் பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் லாபம் வரும். தந்தை நலனில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11 (பிற்பகல்), 12, 17 (பகல்).
திசை: வடகிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம்.
எண்: 3.
பரிகாரம்: நவகிரகங்களையும் வழிப்படுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே,
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது நிலை அனுகூலமாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றிக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். இயந்திரப் பணியாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களின் எண்ணம் நிறைவேறும்.
எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் இனங்கள் லாபம் தரும். 4-ல் சனி இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கலாம். தாய் நலனில் கவனம் தேவை. 13-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்துக்கும், சூரியன் 7-ம் இடத்துக்கும் மாறுவது ஏற்றமல்ல. வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், தொழில் பங்குதாரர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 14, 17.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: நாக பூஜை செய்யுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
கன்னி ராசி வாசகர்களே,
சுக்கிரன் சனி, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு கூடும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.
மக்களால் செலவுகள் ஏற்படும். 2-ல் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் அமைதி குறையலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும் உடன் பணிபுரிபவர்களாலும் சங்கடங்கள் ஏற்படலாம். 13-ம் தேதி முதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். அரசு உதவி கிடைக்கும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். பயணத்தின் போதும் இயந்திரங்களில் பணி புரியும் போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி: 11, 12, 17.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், மெரூன்
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், குரு, ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. முருகனை வழிபடுங்கள்.
துலாம் ராசி வாசகர்களே,
புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். சாதுக்கள், மகான்கள், பெரியவர்கள் ஆகியோரது ஆசி கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். பொருள் வரவு திருப்தி தரும். திடீர் அதிரஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம்,விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு வேண்டாம். வார பின்பகுதியில் எதிலும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடக்கு. நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம், பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 54, 5, 6.
பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கூட்டாளிகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவி புரிவார்கள். செய்துவரும் தொழில் விருத்தி அடையும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
நண்பர்கள், உறவினர்களால் சில இடர்பாடுகள் ஏற்படலாம். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சோர்வுக்கு இடம் தராமல் கடுமையாகப் பாடுபட்டால் பயன் பெறலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், கால், பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். 13-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடத்துக்கு மாறுவது உகந்ததல்ல. வீண் அலைச்சல் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் பாதிக்கப்பட நேரலாம். தொழில் சீராக நடந்துவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17 (பகல்).
திசைகள்: தென்மேற்கு,, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: திருமுருகனை வழிபடுங்கள். சனீஸ்வரருக்குப் பிரீதி செய்து கொள்ளுங்கள்.
தனுசு ராசி வாசகர்களே,
உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும், 3-ல் கேதுவும், 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் பரிசுகளையும் விருதுகளையும் பெறுவார்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை பளிச்சிடும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். பெண்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்துக்கும் சூரியன் 3-ம் இடத்துக்கும் மாறுவது நல்லது. பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக்கியப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன், பொன் நிறம்.. .
எண்கள்: 3, 6, 6, 7. 9.
பரிகாரம்: கால் ஊனமுள்ளவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும்.
நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சுப காரிய செலவுகள் ஏற்படும். வாழ்க்கை வசதிகள் கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். மக்கள் நலனில் கவனம் தேவை. 13-ம்ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவது சிறப்பல்ல. முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிறருக்கு தாராளமாக உதவி செய்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11, 12, 17.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு செய்யுங்கள். குருவுக்குப் ப்ரீதி செய்து கொள்வதும் நல்லது.
கும்ப ராசி வாசகர்களே,
குரு, சுக்கிரன், சனி ஆகியோர் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். குடும்ப நலம் சிறப்பாக இருந்து வரும். சுப காரியங்கள் நிகழும். விருந்து உபச்சாரங்களில் கலந்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். முயற்சி வீண் போகாது. சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும்.
சூரியனும் புதனும் அனுகூலமாக உலவாததால், தந்தை நலனில் கவனம் தேவை. அரசுப் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உஷ்ணாதிக்கம் கூடும். கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 11,12,17.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம். நீலம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் வாசியுங்கள். நாகேஸ்வரரை வழிபடுங்கள்.
மீன ராசி வாசகர்களே,
சூரியன், புதன், ராகு ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் அரசாங்கத்தாரால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். நிறுவன நிர்வாகத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் லாபம் கிடைக்கும்.
எழுத்தாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 13-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவது உகந்ததல்ல. சுக்கிரன் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது. அரசுப் பணிகளில் எச்சரிக்கை தேவை. கண் உபத்திரவம் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். பெண்களுக்கு முக்கியமான எண்ணம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 11 (பிற்பகல்), 12, 17.
திசைகள்: வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5.
பரிகாரம்: குருவுக்கும் செவ்வாய்க்கும் அர்ச்சனை செய்வது நல்லது. விநாயகரை வழிபட்ட பின்பு எந்தக் காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. பெரியவர்களிடம் பணிவோடு நடந்துகொள்வது நல்லது.