இந்த வார ராசிபலன் 01/02/2018 முதல் 07/02/2018 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் செல்வச் சேர்க்கை உண்டாகும். மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்து நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.

பெற்றொர் வழியில் சிக்கல்கள் அகலும். வீடு, மனை முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு, அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். அரசியல்வாதிகளுக்கு, உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனநிம்மதி உண்டாகும். உதவி கேட்டு வருபவர்களுக்குத் தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பு உருவாகலாம். ஆடை, ஆபரணச் செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். வர வேண்டிய பணபாக்கி வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தினர் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிருப்தியைத் தரும். விருந்தினர் வருகை இருக்கும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு, உங்களது ஆலோசனைகளை அனைவரும் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினருக்கு, போட்டிகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, செய்யும் காரியங்களிலிருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சலைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். ராகு சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாகச் செய்வது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியத் தடை அகலும். ஏற்றுமதி, இறக்குமதி  விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாகப் பேச்சுக்கு வருவார்கள். பெண்களுக்குப் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையினருக்கு வரவேண்டிய பணபாக்கி வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சுலபமான காரியம் கூடச் சற்று தாமதமாகலாம். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் முயற்சிகளுக்கேற்ற வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். நல்லதா? கெட்டதா? என்று யோசித்து எந்தக் காரியத்தையும் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். தொழில் தொடர்பாகப் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரவு இருக்கும். உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கும். வீட்டில் நல்ல தருணங்கள் வாய்க்கும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  கலைத் துறையினருக்கு வெளியூர்ப் பயணம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: நரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேசப் பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்படும்.

எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன்களைத் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனத்தில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் கேந்திரம் பெற்றிருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாகப் புரிந்து கொள்ள நேரலாம்; கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பங்குதாரர்களுக்குள் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குத் திடீர் பயணம் நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் ஆசைகள் மனத்தில் தோன்றும். அரசியல்வாதிகளுக்குக் காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். உற்சாகம் உண்டாகும். புதிய வர்த்தக  ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் உற்சாகமாகக் காணப்படுவார்கள்.

சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள், எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  பேச்சுத் திறமை கை கொடுக்கும். தொழில், வியாபாரம் மிதமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். பேச்சுத் திறமையால் மேலிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் ஏதாவது குறை கூறுவார்கள்.

அனுசரித்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள், கல்வியில் வெற்றிபெறக் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள், மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதுரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். மாணவர்கள், கல்வியில் முன்னேறத் திட்டமிட்டுச் செயலாற்றுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: : திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்குத் தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்தில் துணிச்சல் உண்டாகும். எதையும் வேகமாகச் செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளைக் கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளைச் செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம்.

மேலிடத்தின் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறலாம். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களிடம் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் இருக்கும். கலைத் துறையினருக்கு, அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தின் பேச்சால் தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.  மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் தொடர்பாகப் பயணங்கள் செல்ல நேரலாம்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் அலுவலகத்தில் அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்திலிருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மோதல்கள் குறையும்.  பெண்களுக்குக் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

இந்த வார ராசிபலன் 30/11/2017 முதல் 06/12/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றிபெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வர வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வர வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம்.

பெண்கள், புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள், சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்:  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் வரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு  எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தென்மேற்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 6ல் மறைந்திருந்தாலும் சூரியனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையையும் குழந்தைகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்கள், எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பணக் கஷ்டம் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிரச்சினைகளைப் பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள், நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள் எதையும் புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் புதனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தை தருவதாலும் ராசியாதிபதி சூரியன் சனி சாரம் பெற்று இருப்பதாலும் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனைத் தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பீர்கள்.

பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாகப் பேசிப் பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசிச் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாகப் பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களைப் படித்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ இலைகளால் பூஜித்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோதைரியம் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றிபெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.

கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் மீதான அன்பு அதிகரிக்கும். பெண்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் புதிய வேலைகளைத் தொடங்க முடியும். மாணவர்கள், எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியைப் பற்றிய கவலை குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட  எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் விரயஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் சுபச் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையைச்  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மனத் தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு  தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவசமாதிக்குச் சென்று வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில், வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாகச்  செய்து முடிப்பீர்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் புகழ், கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் மற்றவர்களுக்குக் கைகொடுக்கும். சுயமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையைப் புகுத்துவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும்.

உறவினர்கள், நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். பெண்கள், அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியவாதிகளுக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்கள், சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை. மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி குரு சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். பாக்கியஸ்தான கிரகக் கூட்டணியால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள், எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

இந்த வார ராசிபலன் 16/11/2017 முதல் 22/11/2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 16/11/2017 முதல் 22/11/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியை எட்டாம் பார்வையால் பார்ப்பதன் மூலம் மன திடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்துச் சனியால் வீண்குழப்பம் ஏற்படலாம். தனஸ்தானத்தை சூரியன் – புதன் – சனி ஆகியோர் பார்ப்பதன் மூலம் பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதிலும், பரிந்து பேசும்போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது.  வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். தம்பதிகளிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்கள் கல்வியில் அதிகம் சிரத்தையெடுத்துப் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வணங்கவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தேவகுருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். முயற்சிகள் வெற்றி தரும். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். ராசியை சனி பார்ப்பதால் திடீர் கோபம் ஏற்பட்டு நீங்கும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கவும். பங்குதாரர்களிடம் பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் சிலரது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். பெண்கள் மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.  அரசியல்வாதிகள் சிறிய வேலையையும் முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசி பழகவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்கவும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ரண ருண ஸ்தானத்தில் வக்கிரம் பெறுகிறார். சிறிது தடைகள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கலாம். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் நன்மை தரும். தொலைதூரத் தகவல்கள் சாதகமாக இருக்கும். வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். பணியாளர்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்குப் பண வரவு இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடவும்.

 கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் அனுகூலமான சஞ்சாரம் செய்கிறார். தனவாக்கு அதிபதி சூரியன் பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கு மாறுகிறார். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தைச் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கைக்  கண்டு பிறருக்குப் பொறாமை உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். வீடு, மனை, வாகனம் தொடர்பான விவகாரங்களில் சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த பணிகள் நிறைவடையும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும். பெண்களுக்குக் காரிய தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் வீண் சச்சரவுகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனைத் தரிசித்து பஞ்ச முக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்திற்கு குருவின் சாரம் பெற்று புதன்- சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மிளிரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனியின் பார்வை ராசியில் விழுவதால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் பார்வை விழுவதன் மூலம் நிறைவான லாபம் வரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது.

மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். சகோதரர் வழியில் பிரச்சினைகள் அகலும். உறவினர்கள், நண்பர்களால் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்குச் சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்குப் புகழும், கவுரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வியை பற்றிய சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் தைரிய ராசியில் சூரியன், சனியுடன் இணைந்து செவ்வாய் வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாகப் பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ அறிவு அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: துளசியைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். ராசியில் தேவகுருவின் சஞ்சாரம் இருக்கிறது. விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது. எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மனநிறைவு காண்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு காரியம் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

மேலதிகாரிகளின் அழுத்தம் அகலும். குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் திருப்தி தரும். பெண்களுக்குச் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் புதன், சனி இருக்கிறார்கள். ராசிக்குத் தொழில் அதிபதி சூரியன் வருகிறார். ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் சூரியனின் இருப்பு பலவகையான யோகத்தை தரும். துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு சந்தோஷமான மன நிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். கலைத்துறையினர் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை செவ்வாய் பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். காரியச் சுணக்கம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பாடுபட வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

மேலிடத்திலிருந்து இனிப்பான செய்தி வரும். கேதுவின் சஞ்சாரத்தால் குடும்பத்திலிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் அனுசரணையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கினால் மன அமைதி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியுடன் சூரியன், புதன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். ராசிநாதன் சனியின் சஞ்சாரம் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரப் பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் வெளிப்படும்.

மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய விஷயங்களை அறியும் ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வினாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை குரு பார்க்கிறார். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். புதிய வீடு, வாகனம் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி சூரியன், புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும். பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

மேலிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பாக பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்கள் அகலும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்குச் செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு,  வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: சனிக்கிழமையன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறை யும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்துக்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருக்கவும். இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.

பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்லவும். சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்குக் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது மனக்குழப்பத்தைப் போக்கும்.

இந்த வார ராசிபலன் 19/10/2017 முதல் 25/10/2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 19/10/2017 முதல் 25/10/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் – செவ்வாய் – புதன் – குரு ஆகியோர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எண்ணிய காரியங்களைத் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு  நன்றாக இருக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.

பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. பெண்கள் சில முக்கியமான காரியங்களைக் கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். கலைத்துறையினருக்கு மனதைரியம் குறையும். அரசியல்வாதிகளுக்கு மனக்கவலை குறையும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 2, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி கவசம் படித்து வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். பாராட்டுகள் கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள்.

ஆனாலும் எடுத்த காரியங்களில் இழுபறி நீடிக்கும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பது நல்ல அம்சமாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். பெண்களுக்குப் பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 6, 9

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் அனைத்து விதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். வீண் அலைச்சல் குறையும். திட்டங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். வருமானம் சேரும். புதிய முயற்சிகள்  கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியைக்  கவனிக்க வேண்டியிருக்கும்.

மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் செலவும் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். கலைத்துறையினர் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசியல்வாதிகளின் சாதுரியம் வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய மாற்றம் கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பொருளாதாரப் பிரச்சினைகள் அகலும். ஆடம்பரப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். பெண்கள் அடுத்தவரைப் பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 1, 2, 6

பரிகாரம்: சிவன் கோயிலில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பலம் குன்றி காணப்படுவதால் வீண் அலைச்சல், காரியத் தடை ஏற்படலாம். ஆனாலும் மற்ற கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மனக்குழப்பமும் நீங்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். சக ஊழியர்கள் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்வதுடன் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மனசஞ்சலம், தேவையற்ற செலவு அகலும். வியாபாரம், தொழிலில் தேவையற்ற செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொருளாதார மேம்பாடு உண்டாகும். புதிய பொறுப்புகளை ஏற்கும் போது கவனம் தேவை.

குடும்பத்திலிருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிடுவது நன்மை தரும். பெண்களுக்குக் கடன் பிரச்சினைகள் குறையும். கலைத்துறையினரின் பிரச்சினைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மனதிற்கினிய சந்தோஷமான காரியங்கள் நடக்கும். மாணவர்கள் வீண் விவாதங்களைத் தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர மனதில் இருந்த கலக்கம் நீங்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்துச் செய்யவும். மனம் நிலை கொள்ளாமல் இருக்கும்.. புதிய முயற்சிகளை சிரத்தையுடன் செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசும் சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய உக்திகளைக் கையாண்டு முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த திட்டங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 6

பரிகாரம்: தினமும் அம்மனை வணங்கி சுமங்கலி பூஜை செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். சுப விரையம் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் வருமானமும் இருக்கும்.

எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 6, 9

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

 தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யத் தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு  லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினர் எதையும் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டுப் பயன்பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் முன்னோர்களையும், குலதெய்வத்தையும் வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத் திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அறிவுத்திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். அரசியல்வாதிகளுக்குக் கடின உழைப்பு வெற்றியைத் தேடித்தரும். மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்:  தினமும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடை நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்து வந்த தாமதபோக்கு நீங்கும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கலைத்துறையினர் உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை  செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விச் செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 5, 9

பரிகாரம்: தினமும் வினாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் பூமி, வாகனத்தால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.

சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். கலைத்துறையினரின் வாக்கு வன்மையால் எல்லாம் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனுக்கு பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கடன்   பாக்கிகள் தாமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்கள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருக்கவும். கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருக்கவும்.  மாணவர்களுக்கு வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீக்கிப் படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 9

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபாடு வர ஆரோக்கியத்தில் மேம்பாடு கிடைக்கும்

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையிருப்பு இருக்கும். வேளை தவறிச் சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். குரு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் விருத்தியடையும். மகிழ்ச்சியை உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனத்தில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு காரியங்களில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதலாக உழைக்க  வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் கருடாழ்வாரை வழிபட்டு வர நன்மையான பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவதாலும் குருபார்வையாலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒரு சில காரியங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் உடனிருப்பவர்களிடம்  கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிரும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். மாணவர்களுக்குப் பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்திப் படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: தினமும் ஐயப்பனை வழிபட்டு வர  ஆரோக்கியம் மேம்படும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே பாம்பு கிரகங்களில் ஒன்றான ராகுவின் சஞ்சாரம் இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தேங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகக்  காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வார்கள்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாகப் பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்களுக்குக் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு மனக்குழப்பம் தீரும்.  அரசியல்வாதிகள் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4

பரிகாரம்: தினமும் ஆதிபராசக்தியை 11 முறை வலம் வரத் தொழில் மாற்றம் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்தக் காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனின் செவ்வாய் பாதசஞ்சாரம் சின்ன விஷயத்துக்குக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல்  ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். பெண்களுக்கு திடீர் கோபம் உண்டாகலாம். நிதானமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மேலிடம் கனிவாக இருக்கும். மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதன் மூலம் பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். தெளிவான  சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

ராசியில் இருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு. விளையாட்டு, பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலிருக்கும் தேவகுருவால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். வியாபாரத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றிப் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்குக் காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பணிகளுக்குத்  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவி கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: தினமும் ஆண்டாளை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைத்தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையும் பேசவேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், செலவினத்தைச் சந்திப்பார்கள்.

மற்றவருக்காக வீண்பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருக்கவும். பெண்களின் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும். அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அம்மனை வழிபட உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் ஊழியர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்பழி ஏற்படலாம். கலைத்துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனை வழிபட தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பார்ப்பதன் மூலம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணமும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பச் செலவுகள் கூடும்.

குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் போராட வேண்டும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளை

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்: தினமும் காவல் தெய்வத்தை வழிபட நன்மையான பலன்கள் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் தனகாரகன் குருவால் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்துக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்குப் புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்குக் கலைக்காரகன் சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் அருகம்புல் படைத்து விநாயகரை வழிபடத் தடைகள் அனைத்தும் விலகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் அவரின் பார்வையால் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தால் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் புதிய பதவி கிடைக்கும்.

அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.  மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வழிபட மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்.

 

இந்த வார ராசிபலன் 07/09/2017 முதல் 13/09/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம்

இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்களில் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். வெளியூர் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.

மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்கள் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எல்லோரையும் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம்

இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்

இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். ராசியை குரு பார்ப்பதால் எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். எதிர்ப்புகள்  விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். பெண்களுக்கு மனக்கவலை நீங்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 3, 5

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

கடகம்

இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

சிம்மம்

இந்த வாரம் ராசியை சனியைப் பார்த்தாலும் ராசியிலேயே ராசிநாதன் ஆட்சியாக இருப்பதன் மூலம் எடுக்கும் முயற்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள்  அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும்.

பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு  கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

துலாம்

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் கேந்திரம் பெற்றிருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம்.

மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் சிவப்பு

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

இந்த வாரம் ஏழரை சனியின் பிடியில் இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் உட்பட ஏனைய கிரகங்களின் சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.

சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவாபு

எண்கள்: 6, 9

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

தனுசு

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள்.

சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 3, 6

பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

மகரம்

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகள் செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு , வடகிழக்கு

நிறங்கள்: நீலம், அடர்மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.

கும்பம்

இந்த வாரம் குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம்.

குடும்பாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீனம்

இந்த வாரம் ராசிநாதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.  பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், பச்சை

எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.

2017 செப்டம்பர் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2017 SEPTEMBER Madha Rasipalan

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் தொழில் லாபாதிபதி சனி தன வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. ஆனாலும் மாத தொடக்கத்தில் ராசியைப் பார்க்கும் குருவால் மனம் அமைதி பெறும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள்  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 25 – 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18 – 19

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எந்த கடினமான சூழ்நிலையையும் தனது சாதுர்யமான பேச்சால் சமாளிக்கும் ரிஷப ராசியினரே  இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். ஏழாமிடத்தில் சஞ்சாரம் செய்யும் சனியால் மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் குருவிற்கு கேந்திரம் பெறுவதால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும்.

ரோகிணி:
இந்த மாதம் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 1 – 2 – 27 – 28 – 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20 – 21 – 22

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தனது நிதானமான போக்கினால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வித்தை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி புதன் கேதுவுடன் திரிகோண சஞ்சாரம் பெறுவது வீண் அலைச்சலை தரும்.  உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

திருவாதிரை:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3 – 4 – 30

அதிர்ஷ்ட தினங்கள்:  23 – 24

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

தனது பாசமான நடவடிக்கைகளால் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே  இந்த மாதம் ராசியில் இருக்கும் ராகுவால் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். ராசிக்கு இரண்டில் தனாதிபதி சூரியன் ஆட்சியாக அமர்ந்திருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும்.
எதிர்ப்புகள் குறையும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம்  அதிகரிக் கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பூசம்:
இந்த மாதம் புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.  கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.

ஆயில்யம்:
இந்த மாதம் சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடையிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 5 – 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25 – 26

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

எதையும்  தாங்கும் இதயம் என்பதுக்கேற்றார் போல் எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சியாக இருக்கிறார். வீண் மனக் கவலை நீங்கும். தனாதிபதி புதனும் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். பணவரத்து இருக்கும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வெறுப்பு கோபம் அகலும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு ஒன்பதமிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் குருவிற்கு கேந்திரம் பெறுவதால் மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

மகம்:
இந்த மாதம் சுறுசுறுப்பு குறையும். யோகா செய்வதால் அந்த குறைபாடு நீங்கும். மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். டீவி போன்ற இனங்களில் மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள்.

பூரம்:
இந்த மாதம் வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும்.  ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள்.  மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும். ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அதன்மூலம் சாதனைகளை துணிந்து செய்வீர்கள். மாணவர்களுக்கு
உற்சாகமான நாள். வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 7 – 8 – 9

அதிர்ஷ்ட தினங்கள்: 1 – 2 – 27 – 28 – 29

பரிகாரம்:  அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் ராசியில் ஆட்சி உச்சமாக சஞ்சாரம் செய்கிறார். தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்களை நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தன வாக்கு வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.  பெரிய கடன்களிலிருந்து விடுபட உதவும் மாதமிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது.

அஸ்தம்:
இந்த மாதம் பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும்.  நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.  குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை  ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 10 – 11

அதிர்ஷ்ட தினங்கள்: 3 – 4 – 30

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.  அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.  வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

சுவாதி:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்வது  நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது  நன்மைதரும்.   வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் ஆன்மிக எண்ணம்  ஏற்படும்.  விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை  காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல்  பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12 – 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5 – 6

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம்.  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும்.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. உடலநலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக  நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்   ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து  செல்வது நல்லது.

அனுஷம்:
இந்த மாதம் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

கேட்டை:
இந்த மாதம் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 14 – 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7 – 8 – 9

பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

கலைத்துறையினருக்கு ராசியில் சனி  இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது.  மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.

பூராடம்:
இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 16 – 17

அதிர்ஷ்ட தினங்கள்: 10 – 11

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக  இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.

திருவோணம்:
இந்த மாதம் பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 18 – 19

அதிர்ஷ்ட தினங்கள்: 12 – 13

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.  தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும்.

சதயம்:
இந்த மாதம் குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 20 – 21 – 22

அதிர்ஷ்ட தினங்கள்: 14 – 15

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;  தேய்பிறை: செவ்வாய், வியாழன்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசிஅன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள்.  மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

ரேவதி:
இந்த மாதம் வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.  வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23 – 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16 – 17

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி

இந்த வார ராசிபலன் 31/08/2017 முதல் 06/09/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். அஷ்டமத்தில் சனி இருப்பதால் திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அலுவலக வேலைகள் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையில்லாத படபடப்பு ஏற்படலாம். மாணவர்களுக்குக்  கல்வியில் மேன்மை அடையக் கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கலைத்துறையினர் எந்தக் காரியத்திலும் திட்டமிடுதல் அவசியம். அரசியல்துறையினர் முடிவெடுக்கும் போது ஆலோசனை அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பழுப்பு | எண்கள்: 1, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் சிவனுக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றம் தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குத் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் கவலை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பாக அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். அலுவலகத்தில் பொருட்களைக் கவனமாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்குக் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் குறையக் கூடும். விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நிகழும் குரு மாற்றம் உங்களுக்குச் சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயண வாய்ப்புகள் உண்டு. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பாராட்டும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்துறையினருக்குப் புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களைக் கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்கத் திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில், வியாபாரம், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். மேலிடத்துடன் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பெரியோர்களின் நேசம் கிடைக்கும். மாணவர்களின்  புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்:  வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4

பரிகாரம்: திங்களன்று அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் வேலைகளைத் திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள், உதவி கேட்டு நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். திடீர் செலவு உண்டாகலாம். கலைத்துறையினருக்குப் பணவரத்து கூடும். அரசியல்வாதிகள் கோபத்தைத் தவிர்க்கவும். சில்லறைச் சண்டைகள் வரலாம். மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாகப் பழகவேண்டும். கல்வியில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 6, 9

பரிகாரம்:  தினமும் சிவனை திருவாசகம் சொல்லி வணங்கப் பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பேச்சில் இனிமை அதிகரிக்கும்.  தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்கள் நிதானமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் அவசரம் கூடாது. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  புதன்கிழமை அன்று பெருமாளுக்கு பாலபிஷேகம் செய்து வணங்கக் கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசிக்கு மாறவிருக்கும் தேவகுருவால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தித்தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். கலைத்துறையினருக்கு சந்தோஷம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சினை தீரும். மனநிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீடு, மனை, வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனம் மகிழும்படி எல்லாம் நடந்து முடியும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும்.

நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  கலைத்துறையினருக்குப் பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். மாணவர்களுக்குக்  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாகப் படிப்பீர்கள்.வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 6, 9

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்திற்கு மாறுவதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற போகிறீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் உங்களை ஆலோசனை கேட்க நாடி வருவார்கள். பெண்கள் கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கலைத்துறையினருக்குச் சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். ராசியில் கேதுவின் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களைச் செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

 அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் நீடித்த காரியத் தடங்கல்கள் நீங்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தால் லாபமும் பெருமையும் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.

பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு  மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்கள் மற்றவர்களுக்கான பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குக் கவலைகள் அகலும். அரசியல்துறையினருக்கு உடைமைகளில் கவனம் தேவை. மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: சனிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில், வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்குத் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு கொண்டைக் கடலையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

இந்த வார ராசிபலன் 24-08-2017 முதல் 30-08-20177 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 24-08-2017 முதல் 30-08-20177 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். பெண்களுக்குக் காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்குப் பணவரத்து கூடும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். ஆசிரியர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதனின் மூலம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபார விரிவாக்கம் பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை குறையும். உயர்நிலை உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊழியர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். ஆடைகள், அணிகலன்கள் சேரும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.   அரசியல்வாதிகளின் செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் மஞ்சள் எண்கள்: 3, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வலம் வரப் பொருளாதார நிலை ஓங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்றுத் தாமதமாகலாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். எதிர்கால சேமிப்பு குறித்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்குப் பண உதவி சற்றுத் தாமதமாக கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். தலைமையுடன் ஆச்சரியச் சந்திப்பு நிகழலாம். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்ருக்களை வணங்கிவிட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கவும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் இழுபறிக்குப் பின்னர் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெற்றோரின் சொல்லை மீற வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் எண்கள்: 2, 3

பரிகாரம்: திங்களன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் வரும். மனோதிடம் உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் ஆட்சி சஞ்சாரத்தால் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். மனம் சஞ்சலமற்று அமைதியாகக் காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தலைக்கு மேல் நெருக்கடிகள் வந்தாலும் பதற்றம் வேண்டாம். காத்திருந்தால் பலன் உண்டு.  உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். பெண்கள் தைரியமாக எதையும் செய்வார்கள். கலைத்துறையினர் நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு விபரீதமான எண்ணம் தோன்றலாம். எச்சரிக்கை தேவை.  மாணவர்களுக்குப் பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.  உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவரை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் தங்கள் செயல்திட்டங்களைப் பற்றிக் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களின் பேச்சாற்றலால் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். நிதானமாக இருங்கள். தெளிவு உண்டு.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். பெண்கள் எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பும் அதுதொடர்பாக தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், பெரியோரின் ஆசிர்வாதத்தைப் பெறவும். கலைத்துறையினர் நிதானமாக எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் எதிர்காலக் கல்வி பற்றி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கல்விக்கடன் குறித்த நல்ல தகவல் வந்துசேரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம் எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும். பித்ரு வழிபாடு சிறப்பு தரும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும்.  கலைத்துறையினருக்கு செயல்திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு  எதிராகச் சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

பொது இடத்தில் பேசும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் உல்லாசமும் இருக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்குச் செயல்திறன் அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஊழியர்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். பெற்றோர் வகையில் ஆறுதல் உண்டு. பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கணவன் வழி உறவினர்களிடம் செல்வாக்கு ஏற்படும்.  கலைத்துறையினருக்கு காரிய வெற்றி ஏற்படும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் எண்கள்: 3, 9

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பைரவரைத் தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கிக் காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கிப் பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில், வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். தயங்காமல் ஏற்றுக்கொள்ளவும்.

சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத்துறையினர் மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு  முன்கோபம் குறையும். ஆலய வழிபாடு ஆக்கம் தரும்.  மாணவர்களுக்குப் பாதியில் நின்ற கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு எண்கள்: 1, 3

பரிகாரம்: வியாழன்று ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். நிதானமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் சிரத்தையாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.

உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் நிதானமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கணவர் வழி உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல்வாதிகள், அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர்கள், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், அடர் சிவப்பு எண்கள்: 5, 6

பரிகாரம்: சனியன்று கிருஷ்ண பகவானைப் பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். கெட்டக் கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், பதற்றமும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும்.  பெண்கள் யாரையும் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. பெரிய ஒப்பந்தங்களுக்கான சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாத் தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த சந்திப்பு கிட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.

இந்த வார ராசிபலன் 17-08-2017 முதல் 23-08-2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 17-08-2017 முதல் 23-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் தெம்பு  உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்  வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களைத் திட்டமிட்டுச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.  வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி  காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமாகும். கலைத்துறையினருக்குப் பணவரத்து  இருக்கும். அரசியல்துறையினருக்குப் புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  வீண்கவலையைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் திசைகள்:

கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று அரளி மலரை அர்ப்பணித்து வணங்கவும். நல்ல மனநிலை நிலவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் கருத்துக்கு  மற்றவர்களிடம்  வரவேற்பு இருக்கும். தனாதிபதி புதனால் பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனத்தில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள்  குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த  பிரச்சினைகள் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.  மனகசப்பு மாறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி உண்டாகும்.  பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகளை  மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று பெருமாளுக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வணங்கி வலம் வர சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதுரியமாகப் பேசி முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம்  காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால்  எல்லாவற்றையும்  திறம்படச் செய்து முடித்துப் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். மேலிடத்தின் கரிசனப் பார்வை உங்கள் மீது விழும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். பெண்களுக்குச் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். கலைத்துறையினர் வீண்பயத்தைத் தவிர்ப்பது நல்லது.  மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். அரசியல்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். கல்விப் பயணம் செல்ல வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று நவக்கிரகத்தில் இருக்கும் புதனை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவி  செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.  தொழில், வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாகச் செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள்.

கோபத்தைக் குறைத்து இனிமையாகப் பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். பெண்கள், அடுத்தவர்களுக்கு உதவி  செய்யும்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்துறையினர் அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. மாணவர்களுக்குப் பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து அம்மனுக்கு வேப்பிலை மாலை கட்டி அர்ப்பணித்து வணங்க நல்ல மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம்  திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப்  பெறுவீர்கள்.

பெண்களுக்குத் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்குப் புத்தித் தெளிவு உண்டாகும்.  அரசியல் துறையினருக்கு  எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.  மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன்  நிதானமாகப் பேசி பழகுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து சிவனுக்கு வில்வ இலை அர்ப்பணித்து வணங்க மனத்தில் தெம்பு ஏற்படும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எடுக்கும் முயற்சிகளில்  நன்மை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடச் சற்று நிதானமாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்துச் செல்வார். உறவினர்கள் வருகை இருக்கும். வழக்குகளில் நிதானப் போக்கு  காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு கவலைகள் நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றைக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஏதேனும் காவல் தெய்வத்தை வணங்கக் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சால் மேல் அதிகாரிகளைக் கவர்ந்துவிடுவார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாகச் சம்பவங்கள் நடக்கலாம்.

உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்குப் பயணம் மூலம் லாபம் கிடைக்கக்கூடும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்துப் பார்ப்பது நல்லது. பாடங்களைப்  படிப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்க மனதில் தைரியம் ஏற்படும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே  நடக்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்களுக்குத் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பணவரத்து கூடும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து முருகனை வணங்க காரியத் தடைகள் நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். பூமி தொடர்பான பிரச்சினைகளில் இழுபறியான நிலை காணப்படும். வழக்குகளில் சுணக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வர வேண்டிய பணம் கைக்குக் கிடைக்கத் தாமதமாகலாம். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.

நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசியல்வாதிகள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு மனத் தெம்பும் மகிழ்ச்சியும் தரும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: வியாழன்று நவக்கிரக் குருவை வணங்கப் பொருளாதாரத்தில் மந்த நிலை மாறும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் மேம்படும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்துத் தடைபட்டாலும் வந்து சேரும். வியாபாரப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனமாகச் செய்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்குக் கோபம், படபடப்பு குறையும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். மாணவர்களுக்கு  உயர்கல்வி படிப்பவர்களுக்குத் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனியன்று அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்று வெண்ணெய் சாற்றி வர நன்மைகள் ஏற்படும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் உறுதி காணப்படும். கலைத்துறையினருக்கு அதிக அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மன உறுதி ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வர பணவரவில் திருப்தி இருக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்துவிடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நட்பின் மூலம் நன்மைகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களைப் படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வலம் வருவதன் மூலம் மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

இந்த வார ராசிபலன் 10-08-2017 முதல் 16-08-2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 10-08-2017 முதல் 16-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம்

இந்த வாரம் வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.

எண்கள்: 1, 6

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம்

இந்த வாரம் தேவையற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடக்கும். சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்படும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த இறுக்க நிலை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வ்டமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 5, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

மிதுனம்

இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.

புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று அம்மனை வழிபடுவது நன்மை தரும்.

கடகம்

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல நிலை மாறும். தருமசிந்தனை உண்டாகும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக  மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து அம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

சிம்மம்

இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

கன்னி

இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.

சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதி உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு அரசாங்கம் மூலம் சாதகமான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்

எண்கள்: 2, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஸ்ரீஐயப்பனை வணங்கி வர தடங்கல்கள் அகலும்.

துலாம்

இந்த வாரம் வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு  பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை  படிப்பது நல்லது. ஆசிரியர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீகாளியம்மனை வணங்கி வலம் வந்தால் தொழிலில் ஏற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த வாரம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும்.  அரசியல்துறையினருக்கு பேச்சில் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 9

பரிகாரம்: செவ்வாயன்று விரதம் இருந்து முருகனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.

தனுசு

இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.

உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு  பயணங்கள் செல்ல நேரலாம். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்துறையினருக்கு நிலுவையில் உள்ள பணம் வரும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை

எண்கள்: 3, 5

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாளை வணங்க வாழ்வு வளம் பெறும்.

மகரம்

இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்.

எண்கள்: 2, 5

பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம்

எண்கள்: 6, 9

பரிகாரம்: தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

மீனம்

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம்.

எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். மாணவர்களுக்கு  கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக ஆலோசனைகள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வலம் வருவதன் மூலம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த வார ராசிபலன் 03-08-2017 முதல் 09-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டிவரும். பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம்.

கணவன், மனைவி மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றிபெறும் நம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல் துறையினருக்குப் பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டுப் பணிகளுக்காகக் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டும். சுபச்செலவுகள் குடும்பத்தில் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 9.
பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் செய்யப்போகும் காரியங்களுக்குத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் வந்து நீங்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். வியாபாரச் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

சிலருக்குப் புதிய பதவிகளோ கூடுதல் பொறுப்புகளோ கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: திங்கள்கிழமையில் சந்திரனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்திருந்த உதவிகள் வந்துசேரும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 9.
பரிகாரம்: பெருமாளைப் புதன்கிழமையன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்திசாதுரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள்.

மேலிடத்துடன் இருந்துவந்த கருத்துமோதல்கள் மறையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்குப் புத்திசாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள். கலைத் துறையினர், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு இருந்துவந்த சுணக்க நிலை மாறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 9.
பரிகாரம்: அம்மனை வணங்கி வரக் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணரும் வாரம் இது. இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வரும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்துமோதல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், கல்வியில் வெற்றிபெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். கலைத் துறையினர் லாபம் பெறுவார்கள். அரசியல் துறையினருக்கு மனோபலம் கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. முடிவெடுக்காமல் இருந்த விஷயங்களுக்கு எதிர்பாராத வகையில் தீர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பப் பிரச்சினை தீரும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். பணவகையில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள், மிகக் கவனமாகப் பாடங்களைப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெற முயல்வீர்கள். கலைத் துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.
எண்கள்: 2, 5.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி ஆலயத்துக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடத் துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கிச் சுமுகமான நிலை காணப்படும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வகையில் இனிமையான சம்பவங்கள் நேரும். மாணவர்களுக்குப் பாடங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். கலைத் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியலில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளை.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: சனிக்கிழமையன்று விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கிப் பின்னர் சரியாகும்.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு அனைத்துக் காரியங்களிலும் தடைநீங்கிச் சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கலைத் துறையினர் மற்றவர்களிடம் கருத்துகளைப் பரிமாறும் முன்பு பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மவுனமாய் இருத்தல் நன்று. அரசியலில் இருப்பவர்கள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம்பெறும் வகைகள் ஏற்படும். பகை விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் நேரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகவும். பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது.

மேலிடத்திலிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இருக்கும். பெண்கள் சேமிப்புகளில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளவும். கலைத் துறையினருக்குக் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: குலதெய்வத்தைப் பெற்றோருடன் சேர்ந்து சென்று பூஜித்து வரவும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் செய்யத் திட்டமிட்டிருந்த காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுச் சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் உரிய நேரத்தில் வந்துசேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனமாகச் செய்வது நல்லது. குடும்பத்தினரிடம் எதிர்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்குக் கோபம், படபடப்பு குறையும். மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பவர்களுக்கும் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். படிப்பில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கலைத் துறையினருக்கு மன வருத்தம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபமான பேச்சும் படபடப்பும் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கிப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. கலைத் துறையினர் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
எண்கள்: 5, 6.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
பரிகாரம்: நவகிரகத்தில் சனியை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற பதற்றம் இருக்கும். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். வாராக் கடன்கள் வசூலாகும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

நிதானத்துடன் கடந்தால் எதிர்காலத்தில் அதற்குரிய பலனைக் காணலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களை படித்து முடிப்பது என்ற கவலை உண்டாகும். கலைத் துறையினர் எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு யோகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமை: வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.
இந்த வார ராசிபலன் 20-7-2017 முதல் 26-7-2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 20-7-2017 முதல் 26-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல்நலம் பெறும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் மனதுக்கு சந்தோஷமான தீர்வைத் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்ந்த வகையில் சில தடைகள் வந்நது விலகும். அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்கள், ஆடம்பரச் செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச்செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்குத் தேவையான பணம் நிறைந்த வகையில் கிடைக்கும். தொழிலதிபர்கள், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். அறைகலன்களை உற்பத்தி செய்பவர்கள் விற்பனை மூலம் மேன்மை பெறுவார்கள். பெண்கள் பணிகளில் மேன்மை பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 6, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அரசு, தனியார் வங்கிகளின் உதவிகளைப் பெற்று வீட்டை வசதிக்கேற்ப மாறுதல் செய்வீர்கள். பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள், பொருட்களைக் குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். தொழிலில் ஏற்பட்ட நிலுவைக் கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்குச் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடுதல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். சினிமா, நாடகம், தொலைக்காட்சிக் கலைஞர்கள், தங்கள் திறனை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, வெளிர் பச்சை.

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரைச் சாற்றி வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். உங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்கள் காரணமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையால் அனுகூலங்கள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தங்கநகைகள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபடும் தொழிலதிபர்கள் நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து நிறைவான வகையில் சந்தாண பாக்கியம் அடையலாம். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.

அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்

எண்கள்: 5,6

பரிகாரம்: புதன்கிழமை அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் தோன்றும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், அரசுத்துறைகளில் உயர்பதவியில் இருப்பவர்கள் குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாகி மீள்வார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மந்தநிலை ஏற்படும். கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பைக் கொண்டே முன்னேற முடியும். வெளியுலகப் பிரச்சினைகள் உங்களைத் துன்பப்படுத்தினாலும் குடும்பத்தினர் தகுந்த முறையில் ஆதரித்து உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

எண்கள்: 2,3,6

நிறங்கள்: வெள்ளை, ரோஸ்

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றவும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத் தரும். வீடு, மனை, வாகனங்கள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தவும் வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தைகள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். அரசு,தனியார் துறையினருக்கு வேலை சார்ந்த பயணங்கள் உண்டு. மனத்தில் புதிய உற்சாகம் கிடைக்கும். பணவரவு நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சேமித்த பணத்தை குடும்பத்தின் சுபச் செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். கலைத்துறையினர் திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். மாயாஜால நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விக்கு உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

எண்கள்: 1,3,9

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஒன்பது முறை வலம் வரவும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் நிகழும். அலைச்சலான சூழ்நிலைகள் உண்டு. உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். வீடு, மனை, வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகளை சிக்கலின்றி செய்யலாம். குழந்தைகள் வகையில் அனுகூலம் உண்டு. புதிய சிந்தனைகள் உருவாகும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கூடுதலாக முயற்சிக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

எண்கள்: 1,3,5

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வரவும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு தீயைப் போலச் சுடலாம். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழைத் தக்க வைக்க முடியும். வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டுத் தகுந்த பலனைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய்க் கிடைத்த பணத்தால் மங்கலக் காரியங்களைச் செய்துமுடிப்பீர்கள். அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கைச்சேமிப்பை குடும்பச் செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். கலைத்துறையினர் சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். தந்தை-மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2,6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று குல தெய்வ பூஜையில் ஈடுபடுங்கள். பித்ருக்களை வணங்குங்கள்.

விருச்சிக ராசி வாசகர்களே

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் வரும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை மேன்மை தரும். தொழிலதிபர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். குழந்தைப்பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீடு, வாகன வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு ஏற்றமான காலம் இது. புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்திற்குப் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்குள்ளாவார்கள். தைரியத்தை இழக்க வேண்டாம். தோழிகள் சந்திப்பு ஆறுதலைத் தரும். தொலைக்காட்சி, சினிமா தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஏற்றம் காணலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் மூன்று முறை வலம் வரவும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். குழந்தைகளின் தவறான சேர்க்கை கவலை தரும். விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். சிலரது குறுக்கீடுகளால் குடும்பத்தில் மனக்கசப்புகள் தோன்றிப் பின்னர் சீராகும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்கடிகளுக்குள்ளாகி புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். அரசு, தனியார் வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் ஊழியர்களின் நடத்தையால் மனவருத்தத்திற்குள்ளாவார்கள். தொழிலதிபர்களுக்கு சுணக்கம் ஏற்படும். வேலையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் முன்னேற்றம் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பயணங்கள் வேண்டாம். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பார்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகளை அடையலாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1,3

பரிகாரம்: ஞாயிறு அல்லது வியாழக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். மனிதாபிமான உதவிகளால் அந்தஸ்தும் புகழும் ஏற்படும். பெண்களிடம் கணவர்கள் அன்பாக இருப்பார்கள். பிறமொழி பேசுபவர்கள் உதவி செய்வார்கள். பறிகொடுத்தப் பொருட்கள் மீண்டும் திரும்ப வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். நற்பெயர் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: சனிக்கிழமை அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்குச் சூட்டவும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்விகச் சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். வேலைகளைத் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி விற்பனை செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள் பணப்புழக்கம் தங்குதடையின்றி இருக்கும். உங்கள் நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வெற்றி பெறுவீர்கள். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். பாராட்டுகளும், கவுரவமும் கிடைக்கும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகாரிகளாலும் இடப்படும் கட்டளைகளைக் கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். எந்தச் சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், சனி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் கீர்த்தியும் ஏற்படும். வீடு, மனை, வாகனங்களின் பராமரிப்புப் பணிகளைத் தள்ளிப்போடவும். உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வீணான பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான பலன்களைக் காணலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேசப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரைப் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகளுக்காகச் சிரமப்பட வேண்டிவரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 2, 3, 9

பரிகாரம்: வியாழன் அன்று அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

இந்த வார ராசிபலன் 29-6-2017 முதல் 05-7-2017 வரை | Weekly Astrology Forecast

இந்த வார ராசிபலன் 29-6-2017 முதல் 05-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம்:

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்புக் கூடும். ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் ராகுவும், 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் பாதிக்கும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. .

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு. .

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்..

எண்கள்: 1, 5, 6, 7, 9.‎

பரிகாரம்: குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி,, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ராசியிலேயே இருப்பது சிறப்பாகும். குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 10-ல் உலவும் கேது நலம் புரிவார். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் கைக்கு கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதாலும், 3-ல் புதன் உலவுவதாலும் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூன் 30, ஜூலை 3, 5. . . .

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: வன துர்கைவை வழிபடவும்.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பயணத்தினால் முக்கியமான எண்ணம் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலன்கள் ஓரளவு லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5. .

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. .

நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.

கடகம்:

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. இதர கிரகங்கள் சாதகமாக இல்லை. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கல் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. பொருளாதாரப் பிர்சனைகள் ஏற்படும். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் குறைவு. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தாராலும், தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும். தொழில் ரீதியாக இட மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .

திசை: தென் கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, வான் நீலம். .

எண்: 6..

பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபட்வும்.

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை கூடும். செயலில் வேகம் பிறக்கும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; விளையாட்டு, விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். முக வசீகரம் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். 4-ல் சனி இருப்பதாலும், 12-ல் புதன் உலவுவதாலும் நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: துர்கையையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

கன்னி:

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். பண நடமாட்டம் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடல் வாணிபம், லாபம் தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். முயற்சி பலிதமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

துலாம்:

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 10- புதனும் 11-ல் ராகுவும், உலவுவது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, விஞ்ஞானம், பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும். ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள் கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழிலை மேம்படுத்தச் செலவு செய்வீர்கள். தொல் பொருட்கள், லாபம் தரும். 12-ல் குருவும் 5-ல் கேதுவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். பெரியவர்கள், சாதுக்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அலுவலகப் பணியாளர்ட்கள் பொறுப்புடன் கடமையாற்றிவருவது அவசியமாகும் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூலை 3, 5.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு., தென்கிழக்கு. .

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 4, 5, 6. .

பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். .

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பயணத்தின் மூலம் அனுகூலம் ஏறபடும். புதியவர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். மக்களால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். 8-ல் செவ்வாயும் சூரியனும் இருப்பதாலும், ஜன்ம ராசியில் சனி உலவுவதாலும் உடல் நலனில் கவனம் தேவை. சிறு விபத்துக்கு ஆளாக் நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. யோசித்து ஈடுபடவும். எரிபொருட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவறைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புத் தேவை. விளையாட்டு, விநோதங்களின்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு. .

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் முருகனையும் வழிபடவும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களிருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் அக்தி பிறக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்ப நலம் சிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எழுத்தளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். 6-ல் சுக்கிரனும் 78-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்குப் பிரச்னைகள் சூழும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. பொருளாதார நிலை ஏற்றம்-இறக்கமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

மகரம்:

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6–ல் சூரியனும் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும் நேரமிது. திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பண நடமாட்டம் திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களால் பெற்றோருக்கும், பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசியல், நிர்வாகம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 1, 3, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.

கும்பம்:

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும் நிலபுலன்கள் சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும் சமுதால நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் சூரியனும் செவ்வாயும் 8-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். புதியவர்களிடம் விழிப்புடன் இருப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 3, 5. .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு. .

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: ராகு, கேது, குரு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

மீனம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பண வரவு திருப்தி தரும். கலைஞானம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதியஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வாரப் பின்பகுதியில் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல் கூடாது. 4-ல் சூரியனும், செவ்வாயும் உலவுவதாலும், 9-ல் சனி இருப்பதாலும் பெற்றோர் நலம் கவனைக்கப்பட வேண்டிவரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 5.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்

எண்கள்: , 3, 4,, 6.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்யஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.

இந்த வார ராசிபலன் 22-6-2017 முதல் 28-6-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சீராகும். தோற்றப்பொலிவு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். போட்டிகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும். இசைக் கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். l நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். அரசு உதவி பெற வாய்ப்புக்கூடிவரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் லாபம் இருக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். ராகு 5-லும், குரு 6-லும் உலவுவதால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். சனி 8-ல் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புகூடாது. நல்லவர்களின் நட்பை நாடிப் பெற்று, அவர்களின் ஆலோசனைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7, 9.‎

பரிகாரம்: புதனுக்கும், சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். திருமாலையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பேச்சில் திறமை வெளிப்படும். கண்டிப்பும் கறாரும் கூட இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். 4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தெய்வானுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. . .

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: செவ்வாய்க்கும் முருகனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பது நல்லது. 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மதிப்பு உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். உழைப்பு வீண்போகாது. பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஆடவர்களுக்கு பெண்களால் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. 9-ல் கேது இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். குரு 4-ல் இருந்தாலும் 10-ம் இடத்தைப் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெண்சாம்பல்.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி கிரகங்கள் சாதகமாக உலவவில்லை. சந்திரன் மட்டுமே ஓரளவு நலம் புரிவார். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கு துன்பங்களும் துயரங்களும் அதிகரிக்கும். இறை வழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழுமையாக ஈடுபடுவது நல்லது. பெரியவர்கள், ஆன்மிகவாதிகள், ஞானிகள் ஆகியோரது நல்லாசிகளைப் பெறுவதன் மூலம் சங்கடங்கள் குறைய வாய்ப்புண்டு. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கடல் வாணிபம் செய்பவர்களுக்கெல்லாம் அளவோடு நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஜலப் பொருட்களால் லாபம் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. அரசாங்கம் மற்றும் உடன்பிறந்தவர்கள் மூலம் பிரச்சினைகள் சூழும். கண், கால் சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தொழிலில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். சகிப்புத் தன்மையும் பொறுமையும் அவசியம் தேவைப்படும் நேரமிது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 23, 26, 28. .

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: குல தெய்வ வழிபாடு நலம் தரும். நவக்கிரக வழிபாடு செய்வது சிறப்பாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் ஆதாயம் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 23, 25,.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும்,. தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தந்தையால் நலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து,, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும். திரவப் பொருட்களால் லாபம் பெற வாய்ப்பு கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன்,, பச்சை.

எண்கள்: 1, 6, 6, 7, 8, 9.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் உலவும் ராகு நலம் புரியும் நிலையில் இருக்கிறார். 9-ல் உலவும் புதனும் அளவோடு உதவுவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. ராசிநாதன் சுக்கிரன் 7-ல் இருந்தாலும் ராசியைப் பார்ப்பது நல்லது. இதனால் உங்கள் மதிப்பு உயரும். உடல் நலம் கவனிப்பின் பேரில் சீராகவே இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். வாரப் பின்பகுதியில் தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. 5-ல் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதியால் அவதி ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 26, 28.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை .

எண்கள்: 4, 5.

பரிகாரம்: குருவையும் கேதுவையும் தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் அவற்றைச் சமாளிக்கும் புத்திசாலித்தனம் அமையும். சூரியனும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் அரசுப் பணிகளில் விழிப்பு தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. பொறுமை அவசியம் தேவை. உடலில் காயம்பட நேரலாம். மின்சாரம், எரிபொருள், கட்டடப் பொருள், வெடிப்பொருள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 26, 28. .

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வ்டக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், பச்சை

எண்கள்: 3, 4, 5.

பரிகாரம்: சூரியன், செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. திருமுருகனை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகமாகும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் பிரச்சினைகள் சற்று அதிகரிக்கும். மனத்தில் சலனம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், உழைப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடணர்ந்து கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 28.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பளிச்சிடும். மனத்தில் தெளிவும் தன்னபிக்கையும் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி பெற வாய்ப்பு உண்டாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனச் சொத்துக்க்ள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்களின் சந்திப்பும் ஆதரவும் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் பாதுகாப்பும் தேவை. கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செலவுகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது. கணபதியையும், துர்க்கையையும் வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்த சகோதரிகள் நலம் புரிவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். குரு 8-ல் இருப்பதால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கருவூலப் பணிகளில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, , 6, 8.

பரிகாரம்: அஷ்டமத்தில் உலவும் குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும். நாக பூஜை செய்யவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். மனத்தில் துணிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகள் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். குருவருளால் திருவருள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சூரியனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்.

இந்த வார ராசிபலன் 01-06-2017 முதல் 07-06-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் வழக்குகளிலும் நல்ல திருப்பம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 5-ல் ராகுவும் 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 0.‎ | பரிகாரம்: குருப் பிரீதி செய்து கொள்ளவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நல்லவர்கள் நலம் புரிவார்கள். அலைச்சல் வீண்போகாது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். ஆசிரியர்கள், மத போதகர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் ஆகியோர் போற்றப்படுவார்கள். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். வேத விற்பன்னர்களுக்கு செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புகள் கூடிவரும். மந்திர சித்தி சிலருக்குக் கிட்டும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சுப செலவுகள் செய்ய வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7. l பரிகாரம்: துர்க்கையை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நலமும் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். போக்குவரத்து, பயணம் சம்பந்தமான தொழில் லாபம் தரும். தோல் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். பெண் குழந்தைகளாலும் மனைவியாலும் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 9-ல் கேதுவும் 12-ல் சூரியனும் புதனும் உலவுவதால் தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உடலில் காயம்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், கறுப்பு. l எண்கள்: 4, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் திருமாலையும் வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன் புதன் ஆகியோர் உலவுவது சிறப்பாகும். இதர கிரகங்கள் கோசாரப்படி சிறப்பாக இல்லை. இதனால் எதிலும் விசேடமான வளர்ச்சியைக் காண முடியாமல் போகும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். பெரியவர்கள், தனவந்தர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. பயணத்தின்போதும் விளையாட்டின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5. l பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். முகப்பொலிவு கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தருமப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் பல உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கடன் தொந்தரவு குறையும். பிரச்சினைகள் எளிதில் தீரும். செய்தொழில் விருத்தி அடையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 9. l பரிகாரம்: துர்க்கைக்கு ஏற்றி வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. அலைச்சல் சற்று அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் பெற வாய்ப்புகள் கூடிவரும். குடும்ப நலம் சீராகவே இருக்கும். எதிரிகள் அடங்குவார்கள்.

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் நற்பெயர் பெறுவார்கள். ஆன்மிக வாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைத் துறையினருக்குப் பிரச்சினைகள் தீரும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். தருமப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், கருஞ்சிவப்பு.

எண்கள்: 6, 7, 8, 9. l பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபடவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. வியாபார முன்னேற்றத்திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் சனியும் 8-ல் சூரியனும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் சங்கடங்கள் சூழும். உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். 7-ல் சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் உலவுவதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை.

எண்கள்: 4, 5. l பரிகாரம்: பெரியவர்களை வணங்கி வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனியும், 9-ல் செவ்வாயும் உலவுவதால் உடல் நலம் ஒருநாளைப் போல் மறுநாளிருக்காது. அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண்வம்பு, வழக்குகள் வந்து சேரும்; எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் தொல்லைகள் சூழும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். குரு பலம் இருப்பதால் பண வரவு சீராக இருந்துவரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும் ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4. l பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் உலவுவது நல்லது. தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் நாட்டம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வாய்ப்பு கூடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் இனிதே நிறைவேறும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 1, 5, 6, 7. l பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். 3-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தெய்வப் பணிகள் ஈடேறும். தரும குணம் வெளிப்படும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுவீர்கள். நிலம், மனை, வீடு, வாகனம் முதலிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். மனத்தில் துணிவு கூடும். கலைத் துறை ஊக்கம் தரும். உடன்பிறந்த சகோதரிகள் உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. குடும்ப நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 5, 6.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6, 8. l பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வெளிநாட்டுத் தொடர்பால் நலம் உண்டாகும். பயணம் பயன்படும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும்.

இந்த வார ராசிபலன் 25-05-2017 முதல் 31-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 6-ல் உள்ள குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். 2-ல் சூரியனும் 8-ல் சனியும் இருப்பதால் வீண்வம்பு வேண்டாம். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபட்டால் பயன் பெறலாம். 26-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறுவதால் மனோபலம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 3, 6, 7.‎

பரிகாரம்: ஆதரவற்றவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகரிக்கும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கூடிவரும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். சகோதரிகளாலும், மனைவியாலும், நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் 4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் திருமாலையும் வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் புதனும் சஞ்சரிப்பதால் புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். உழைப்பு வீண்போகாது. வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். தாய்மாமனால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள்.

செய்தொழிலில் சீரான முன்னேற்றத்தைக் காணலாம். 26-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 27-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பச்சை, புகை நிறம். l எண்கள்: 4, 5, 8.

பரிகாரம்: பித்ருக்கடன் ஆற்றுவது அவசியமாகும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். தோற்றப் பொலிவு கூடும். அறிவாற்றல் பளிச்சிடும். செயல் திறமை வெளிப்படும். அரசுப் பணிகள் எளிதில் நிறைவேறும். நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசுக் காரியம் இப்போது நிறைவேறும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

பொறியாளர்கள் நோக்கம் ஈடேறும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். தந்தையால் நலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 26, 30.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. செய்தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். நிலபுலங்கள் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நல்லவர்கள் நலம் பல புரிவார்கள். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டுகொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களால் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29 (முற்பகல்).

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: நாகர் வழிபாடு நலம் தரும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

அறிவாற்றல் பளிச்சிடும். தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். தியானம், யோகா, ஜோதிடத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். எதிர்ப்புக்கள் விலகும். மனத்தில் தெளிவு பிறக்கும். பேச்சாற்றல் கூடும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடத்துக்கு மாறுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி பெற வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை. l எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்: ராகு, குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பண வரவு சீராகவே இருந்துவரும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இனங்கள் ஓரளவு லாபம் தரும். சூரியனும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்சினைகள் சூழும். அரசுப் பணிகளில் அதிக கவனம் தேவை. அரசியல்வாதிகள் புதிய கொள்கைகளை இந்த நேரத்தில் வெளியிடலாகாது. எரிபொருள், மின்சாரம், கூரிய பொருட்களால் விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. மனக்குழப்பம் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடத்துக்கு மாறுவதும் சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம். l எண்கள்: 3, 4.

பரிகாரம்: சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது நல்லது. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள்கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும்.

உத்தியோகஸ்தர்களது நிலைஉயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடத்துக்கு மாறுவது குறை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உடன்பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29 (பிற்பகல்), 30.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வெண்மை. l எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி காண்பீர்கள். வழக்குகளிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுகமும் சந்தோஷமும் கூடும்.

அரசியல் வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கொடுக்கல் வாங்கல், ஊக வணிகம் லாபம் தரும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். தகவல் தொடர்பு பயன்படும். கலைத் துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

தொழிலாளர்கள் விவசாயிகள் எண்ணங்கள் நிறைவேறும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்துக்கு மாறுவதால் இயந்திரப் பணிகள் லாபம் தரும். விளையாட்டு, இசை, போட்டி ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். 27-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை. l எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: சிவ வழிபாடு செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். அலைச்சல் சற்று அதிகமாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் சோர்வு ஏற்படும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். பேச்சில் இனிமை கூடும். முகப்பொலிவு உண்டாகும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். ஆடவர்களுக்குப் பெண்களால் நலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. மக்களால் பிரச்சினைகள் சூழும். 27-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்துக்கு மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை. l எண்கள்: 6, 8.

பரிகாரம்: நாகரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் சூரியனும் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் மூலம் வருவாய் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.

கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னெற்றமான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகள் அடங்குவார்கள். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6, 9. l பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது.

இந்த வார ராசிபலன் 11-05-2017 முதல் 17-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் ஓரளவு நலம் புரிவார். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். 12, 13 தேதிகள் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. அதன் பிறகு தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பெற்றோராலும் மக்களாலும் நலம் உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிலபுலங்களால் ஓரளவு வருவாய் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செவ்வாய் 2-லும், சனி 8-லும் அமர்ந்து பரஸ்பரம் பார்த்துக் கொள்வதால் குடும்பத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 17.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 3, 6, 7.‎

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. .

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பெண்களால் ஆடவர்களுக்கு நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் போதும், விளையாட்டின்போதும் பாதுகாப்பு தேவை. புதனின் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 17.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: ஸ்ரீ மகாவிஷ்ணுவை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சூரியனும் புதனும் சஞ்சரிப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். மக்களால் நலம் உண்டாகும். ஊகவணிகம் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நல்லவர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.

அயல்நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகள் லாபம் தரும். 12-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போது பாதுகாப்பு நடவடிக்கை தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் அங்காரகனையும் வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியன் புதன் ஆகியோரும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் லாபம் கிடைக்கும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். முக்கியமான பொறுப்புகளும் பதவிகளும் பெற வாய்ப்புக் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள்.

வழக்கில் வெற்றி கிட்டும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் பழகுவார்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். 15-ம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் பண வரவு மேலும் கூடும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் ஆதாயம் கிடைக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மேலதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் உங்களைப் பாராட்டுவதுடன் ஆதரவாகவும் இருப்பார்கள். 5-ல் சனி இருப்பதால் மக்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. நல்ல தகவல் வந்து சேரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் அளவோடு நலம் புரிவார்கள். குடும்ப நலம் சிறக்கும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களால் அளவோடு வருவாய் கிடைத்துவரும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் உலவுவதால் இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் சமாளித்து வருவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: துர்க்கைக்கும் விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல்புதனும் உலவுவது நல்லது. குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் நலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியே இருப்பார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவாததால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். அரசுக் காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்: கருமாரி அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். எடுத்த காரியங்களில் அரும்பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும். வீண்வம்பு கூடாது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் மன அமைதி குறையும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் பங்குதாரர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் பிரிவினைக்கு ஆளாகாமல் தப்பலாம்.

இயந்திரங்கள், எரிபொருட்கள், ஆயுதங்கள், மின் சாதனங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு அவசியமாகும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வீண் ஆடம்பரம் கூடாது. வியாபாரிகள், கலைஞர்கள், தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. சங்கடங்கள் மேலும் அதிகரிக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். சுபச் செலவுகள் மேற்கொள்ள வேண்டிவரும். அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். அதற்கான பயனும் கிடைக்கும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையில் வருவாய் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். ஊகவணிகம், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனியும் 4-ல் கேதுவும் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபடவும். ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பண வரவு அதிகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடுகூடும். புதிய பதவிகள் வந்து சேரும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். பிரச்னைகள் எளிதில் தீரும். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை அதிகமாகும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் லாபம் தரும். ,

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 17.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். தெய்வப் பணிகள் நிறைவேறும். உழைப்பாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

பொது நலப்பணியாளர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். இல்லறம் சிறக்கும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. விஷ பயம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 17.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம குணம் வெளிப்படும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். மதிப்பு உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் இனிமை தவழும். முக வசீகரம் கூடும். பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.

அரசுப்பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் போற்றுவார்கள். புதன் 3-ல் இருப்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் உலவுவதால் தன் நலனிலும், வாழ்க்கைத்துணைவரின் நலனிலும் அக்கறை தேவைப்படும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14. .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 8.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். திரவப்பொருட்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கனிந்துவரும். நண்பர்களும், உறவினர்களும் உதவுவார்கள். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபடுவீர்கள்.

உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான ஒரு காரியம் நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறன் மேம்படும். முக்கியப் பதவிகள் தேடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு, பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

இந்த வார ராசிபலன் 04-05-2017 முதல் 10-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்களைச் சமாளித்து வருவீர்கள். தம்பதியர் உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. தொழிலதிபர்கள் புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. ஆன்மிகப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தெளிவு பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 3, 6, 7.‎ l பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் புதன், சுக்கிரனும் உலவுவது நல்லது. முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். ஊகவணிகம் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களும் உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. மக்கள் நலம் சீராகும். மக்களால் அனுகூலமும் உண்டாகும்.

எதிர்ப்புக்கள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், ஆன்மிகவாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களின் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7. l பரிகாரம்: சூரியனுக்கும் துர்க்கைக்கும் நெய் விளக்கேற்றி பூக்களால் அர்ச்சிக்கவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும், அதனால் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிய முன்வருவார்கள். மக்கள் நலம் சீராகும். உழைப்பு வீண்போகாது.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். அரசுப்பணியாளர்களது எண்ணம் ஈடேறும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் ஆதரவாகச் செயல்படுவார்கள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜிதச் சொத்துக்களைப் பெற வாய்ப்பு கூடிவரும். புதிய பதவி, பட்டங்கள் இப்போது கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 8. l பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். கணபதிக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். சுப காரியங்கள் நிகழும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். மனத்தில் துணிவு கூடும்.

தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டிகள், பந்தயங்கள், வழக்கு, வியாஜ்ஜியங்கள், விளையாட்டுகளில் வெற்றிபெற வாய்ப்பு கூடிவரும். அரசுக் காரியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: திருவக்கரை வக்கிர காளியை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். கடன் தொல்லை குறையும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பொறியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். 8-ம் தேதி முதல் தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. மனத்தில் துணிவு கூடும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். இதர கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் அலைச்சல் கூடும். கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும்.

பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் திருப்தி தரும். 8-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களது நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன். l எண்கள்: 7, 8.

பரிகாரம்: துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முழுக் கறுப்பு உளுந்து தானம் செய்யலாம்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 11-ல் ராகுவும், உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். தோல் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். புதியவர்களின் சேர்க்கை நலம் தரும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். 2-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.

சண்டை, சச்சரவுகள் கூடும். கண், வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சிறு விபத்துக்கு ஆளாக நேரிடலாம்; எச்சரிக்கை. 6-ல் சுக்கிரனும் 7-ல் சூரியனும் இருப்பதால் தம்பதியினரிடையே சலசலப்புக்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5, 10. l திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை. l எண்கள்: 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. தொலைதூரப் பயணம் நலம் தரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்புறவு கிடைக்கும். அதனால் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும்.

மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். செய்தொழில் லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8. l திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: சனிப்பிரீதி செய்து கொள்ளவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசுப்பணிகள் நிறைவேறும். காடு, மலை, வனாந்தரங்களில் சுற்றித் திரிவதற்கும், பயன்பெறுவதற்கும் வாய்ப்பு உண்டாகும். மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வரவேற்பு கூடும். நிர்வாகிகள் வளர்ச்சி காண்பார்கள்.

எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். ஊகவணிகத் துறைகள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும். கலைஞர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். முயற்சி வீண்போகாது. நல்ல தகவல் வந்து சேரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்குரிய பயனைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 8-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 6, 8.

பரிகாரம்: நாகலிங்கேஸ்வரரை வழிபடவும். துர்க்கை கவசம் படிப்பது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் இனிமை கூடும். தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்கள் வருவாய் கூடப் பெறுவார்கள். அரசியல் ஈடுபாடு பயன்படும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உழைப்பு வீண்போகாது. கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் லாபமோ கிடைத்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5 (பிற்பகல்), 10.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு, பச்சை. l எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும்.

பண நடமாட்டம் அதிகமாகும். கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். 8-ம் தேதி முதல் புதன் 2-ம் மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8. l திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: ருத்ர ஜபம் மற்றும் காயத்ரி ஜபம் செய்வது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 11-ல் ராகுவும், உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். தோல் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். புதியவர்களின் சேர்க்கை நலம் தரும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். 2-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.

சண்டை, சச்சரவுகள் கூடும். கண், வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சிறு விபத்துக்கு ஆளாக நேரிடலாம்; எச்சரிக்கை. 6-ல் சுக்கிரனும் 7-ல் சூரியனும் இருப்பதால் தம்பதியினரிடையே சலசலப்புக்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5, 10. l திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை. l எண்கள்: 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. தொலைதூரப் பயணம் நலம் தரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்புறவு கிடைக்கும். அதனால் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும்.

மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். செய்தொழில் லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8. l திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: சனிப்பிரீதி செய்து கொள்ளவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசுப்பணிகள் நிறைவேறும். காடு, மலை, வனாந்தரங்களில் சுற்றித் திரிவதற்கும், பயன்பெறுவதற்கும் வாய்ப்பு உண்டாகும். மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வரவேற்பு கூடும். நிர்வாகிகள் வளர்ச்சி காண்பார்கள்.

எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். ஊகவணிகத் துறைகள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும். கலைஞர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். முயற்சி வீண்போகாது. நல்ல தகவல் வந்து சேரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்குரிய பயனைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 8-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8, 10. l திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 6, 8.

பரிகாரம்: நாகலிங்கேஸ்வரரை வழிபடவும். துர்க்கை கவசம் படிப்பது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் இனிமை கூடும். தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்கள் வருவாய் கூடப் பெறுவார்கள். அரசியல் ஈடுபாடு பயன்படும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உழைப்பு வீண்போகாது. கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் லாபமோ கிடைத்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5 (பிற்பகல்), 10.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு, பச்சை. l எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும்.

பண நடமாட்டம் அதிகமாகும். கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். 8-ம் தேதி முதல் புதன் 2-ம் மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 7, 8. l திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: ருத்ர ஜபம் மற்றும் காயத்ரி ஜபம் செய்வது நல்லது.

இந்த வார ராசிபலன் 27-04-2017 முதல் 03-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் 5-ம் வீட்டில் உள்ளவன் என்பதால் ஓரளவு நலம் உண்டாகும். குரு 6-லும், சனி 8-லும் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். அதிகம் பாடுபட வேண்டிவரும். உடல் சோர்வு ஏற்படும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புக் கூடிவரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். எதிர்ப்புகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29. 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 1, 3, 6, 7.‎

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடலில் காயம்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுங்கள். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப் பொருட்களாலும் தகவல் தொடர்பு வகையிலும் ஆதாயம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7. l பரிகாரம்: துர்க்கையை வழிபடுங்கள்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புது முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நீங்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, தரகுத் துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். தோல் பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். திறமை வீண்போகாது. முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உதவி புரிவார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 8. l பரிகாரம்: திருமுருகனை வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு வார முன்பகுதியில் கூடிவரும். பெரியவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கு வருவாய் கூடும். நிலபுலங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். செந்நிறப் பொருட்கள், கட்டடப் பொருட்கள், மின்சாதனங்கள், எரி பொருட்கள் லாபம் தரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்ட தேதி: ஏப்ரல் 29.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுங்கள். ஹனுமன் சாலீஸா படியுங்கள்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். பேச்சில் இனிமையும் திறமையும் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். பண நடமாட்டம் அதிகமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், தளவாடங்கள், வெடிபொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அதிக நலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: சனிப் பிரீதி செய்துகொள்ளவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். கணவன், மனைவி இடையே சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். சூரியன் 8-ல் உலவுவதால் உடல் நலம் பாதிக்கும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கண் எரிச்சல், தலைவலி உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு அபராதம் கட்ட வேண்டிவரலாம். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். ஜலப் பொருட்கள் லாபம் தரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். நல்லவர்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டால் நலம் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன். l எண்கள்: 7, 8.

பரிகாரம்: சூரியனையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேற வழி பிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். 8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 7-ல் சூரியனும் 6-ல் சுக்கிரனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் பழகுவது அவசியமாகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை. l எண்கள்: 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுங்கள்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மதிப்பு உயரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். ஜன்ம ராசியில் சனியும் 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், உலவுவது நல்லது. மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் லாபம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 1, 5, 6, 7, 9. l பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. அலைச்சல் கூடினாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. புதன் 3-ல் இருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8. l பரிகாரம்: நாகேஸ்வரரையும் திருமாலையும் வழிபடுங்கள்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. முக்கியமான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நிலபுலங்களால் பயன் கிடைத்துவரும். குடும்ப நலம் திருப்தி தரும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்துகளிலும் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும், 8-ல் குருவும் இருப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு, பச்சை. l எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: நாகரை வழிபடுங்கள். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது நல்லாசிகளைப் பெறவேண்டும்.

மீன ராசி வாசகர்களே

ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் அடங்கும். போட்டிகளில் விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். உடல் நலம் சீராக இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அரசு மூலம் கேட்டிருந்த கடன் கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவுவார்கள். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுங்கள்.

இந்த வார ராசிபலன் 20-04-2017 முதல் 26-04-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் வக்கிர புதனும் உலவுவது நல்லது. குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார முன்பகுதியில் சந்திரபலமும் இருக்கிறது. இதனால் எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். நண்பர்கள் உதவுவார்கள். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் லாபம் தரும். மாணவர்களது நிலை உயரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். என்றாலும் அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 12-ல் நேர்கதியில் உலவும் நிலை அமைவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21. 24.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 1, 3, 6, 7.‎

பரிகாரம்: துர்க்கை அம்மனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது நல்லது. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களாலும், பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகவாதிகள் வரவேற்பு பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு செழிப்பு கூடும். மாதர்களது நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். இதர கிரகங்களில் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புக்கள் இருக்கும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உஷ்ணாதிக்கம் சம்பந்தமான தொந்தரவுகள் உண்டாகும். கூரிய ஆயுதங்கள், எரிபொருட்கள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7. l பரிகாரம்: ஆதித்தனை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதி சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 22-ம் தேதி முதல் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகள் வாரப் பின்பகுதியில் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 24.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6. l பரிகாரம்: மகா கணபதியை வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். மேலதிகாரிகள் உங்களைப் போற்றுவார்கள். சிவப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 21 (முற்பகல்), 24.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 8-ல் சுக்கிரனும் 9-ல் சூரியனும், 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. எதிரிகளின் கரம் வலுக்குறையும். பிரச்சினைகள் எளிதில் தீரும். குடும்ப நலம் சிறக்கும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். அரசுப்பணிகளில் அனுகூலமான போக்கு நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 4-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 21.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் உலவுவதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். 7-ல் புதனும் சுக்கிரனும் 8-ல் சூரியனும் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரால் சங்கடம் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தால் உபாதைகள் ஏற்படும். அரசியல்வாதிகளும், அரசுப்பணியாளர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதாலும், புதனும் சுக்கிரனும் ஒன்று சேர்வதாலும் தர்ம கர்மாதிபதி யோகம் அமைவதாலும் வாழ்க்கைத்துணை நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன்.

எண்கள்: 7, 8. l பரிகாரம்: சூரியனையும் குருவையும் வழிபடுவது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். 2-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். 6-ல் சுக்கிரனும் 7ல் சூரியனும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். பெண்களால் சங்கடம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 6-ல் உலவும் நிலை அமைவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகள் ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4. l பரிகாரம்: கணபதியையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும், 7-ல் செவ்வாயும் உலவுவதால் உடல் நலம் ஒருநாள் போல் மறுநால் இராது. அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் அசதி ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: விநாயகரை வழிபட்டு எதிலும் ஈடுபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி காண வாய்ப்பு கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், மனை, வாகனங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் அதிகம் கிடைக்கும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். பூர்விகத் தொழில் சிறப்பாக அமையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். பொருள்வரவு திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7, 9. l பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெரியவர்கள், தனவந்தர்கள் தொடர்பு பயன்படும்.

பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் மூலம் லாபம் கிடைத்து வரும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் 4-ல் சூரியனும் 5-ல் செவ்வாயும் உலவுவதால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை. | எண்கள்: 6, 8.

பரிகாரம்: 8-ல் உலவும் ராகுவுக்காக துர்க்கையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள், இழப்புகளைச் சந்திக்க வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். 23-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்; பேச்சாற்றல் கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 24.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 5, 6, 8.

பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. கணபதி, துர்க்கை ஜப, ஹோமம் செய்வதும் சிறப்பாகும்.

மீன ராசி வாசகர்களே

ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ ஆதாயமோ கிடைக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும் வழக்குகளிலும் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உருவாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் சேரும். மக்களால் எண்ணம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சூரியன், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக இல்லாததால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21 (முற்பகல்), 24.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 4, 6, 9. l பரிகாரம்: கணபதியையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.

இந்த வார ராசிபலன் -04-2017 முதல் 12-04-2017 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் -04-2017 முதல் 12-04-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புகள் விலகும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். போட்டிகள், பந்தயங்களில் வெற்றி கிட்டும். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதால் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும்.

11-ல் கேது உலவுவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். சாதுக்கள், மகான்களின் ஆசி கிட்டும். ஜன்ம ராசியில் புதனும் 8-ல் சனியும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். தலை, மறைமுக உறுப்புகளில் உபாதைகள் ஏற்படும். வியாபாரிகளும் தொழிலாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ராகு 5-லும், சூரியன் 12-லும் உலவுவதால் மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

‎நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை.

எண்கள்: 3, 6, 7, 9.‎ l பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது நல்லது. நல்லதொரு தகவல் வந்து சேரும். மனத்துக்கினிய சம்பவம் நிகழும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மக்கள் நலம் சீராக இருக்கும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். புதிய கொள்கைகளுக்கு வரவேற்பு கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.

அரசுப் பணியாளர்களது கோரிக்கை நிறைவேறும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். 4-ல் ராகுவும் 7-ல் சனியும், 12-ல் புதன், செவ்வாய் ஆகியோரும் உலவுவதால் மோசமான தொடர்புக்கு இடம் தரலாகாது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7. l பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் சூரியனும் 11-ல் புதன், செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்குகளிலும், போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மூலம் ஆதாயமும் கிடைக்கும். தந்தையால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10, 12 பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9. l பரிகாரம்: குருவையும், விநாயகரையும் வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் வக்கிர சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் புதனும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் அமைதி காணலாம். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்புறவு நலம் தரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் சாதகமாக அமையும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பிறரை நிர்வகிக்கும் ஆளுமை உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 5-ல் சனி உலவுவதால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. வயிறு, காது சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 9-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். தனவந்தர் சகாயம் பெறுவீர்கள். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

ராசிநாதன் சூரியன் 8-ல் உலவுவதாலும் 4-ல் சனி இருப்பதாலும் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகம் பாடுபட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 9. l பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழில்களில் வருவாய் கிடைக்கும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு அனுகூலமாக உலவாததால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.

கனவு, தொல்லை தரும். தூக்கம் கெடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. சிக்கன நடவடிக்கை தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். பதவியில் சறுக்கல் ஏற்படக் காரணம் உண்டு. பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10, 12 (பிற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 8. l பரிகாரம்: துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை அதிகமாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. பெரியவர்கள், மேலதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். ஆராய்ச்சியாளர்கள் புகழுடன் பொருளும் பெறுவார்கள்.

7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும். 8-ம் தேதி முதல் சனி வக்கிரம் பெறுவதால் உடல் நலனில் அக்கறை தேவைப்படும். 11-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடத்திற்கு மாறுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 8, 12 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4. l பரிகாரம்: கணபதியையும் சுப்பிரமணியரையும் வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுவது சிறப்பாகும். புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரும் நலம் புரிவார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும். நிலபுலன்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பொருளாதார நிலை உயரும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். 7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரத்தில் கவனம் தேவை. 8-ம் தேதி முதல் சனி வக்கிரம் பெறுவதால் உடல் நலம் பாதிக்கப்படும். 11-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடத்திற்கு மாறுவதால் எதிர்ப்புக்கள் சற்று கூடும். வாழ்க்கைத் துணைவராலும், கூட்டாளிகளாலும் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 4, 6, 9. l பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துவருவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் செவ்வாயும், 10-ல் வக்கிரமாக குருவும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் அடங்கிப் போவார்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு வாரப் பின்பகுதியில் கூடும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

செய்தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். 7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரிகளுக்கு நலம் உண்டாகும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 8-ம் தேதி முதல் சனி வக்கிரம் பெறுவதால் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கு திறமைக்குரிய பயன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10, 12 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7, 9. l பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ம் இடத்தில் இருப்பது விசேடமாகும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் சாதகமாகவே உலவுகிறார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். உடல் ஆரோக்கியம் சீராகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் சில வாரப் பின்பகுதியில் நிறைவேறும். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கு தென்படும்.

முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பண வரவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9 (பிற்பகல்), 10, 12 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், ஆரஞ்சு, வெண்மை.

எண்கள்: 1, 6, 8. l பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். பேச்சில் இனிமை கூடும். வசீகர சக்தி உண்டாகும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டி, பந்தயம், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். பிரச்சினைகள் எளிதில் தீரும்.

வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும். 8-ம் தேதி முதல் சனி வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. தொழிலில் அதிக கவனம் தேவை 11-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடத்திற்கு மாறுவதால் அலைச்சல் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 8, 12 (பிற்பகல்). . .

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9. l பரிகாரம்: நாக பூஜை செய்து வருவது நல்லது. மகா விஷ்ணுவை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். மனத்திற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஏற்றுமதி இறக்குமதி வகையில் லாபம் உண்டு. போக்குவரத்துச் சாதனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் தலைவலி, ஜுரம், மற்றும் உஷ்ண சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட்டு விலகும். 7-ம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் அதிக கவனம் தேவைப்படும். 8-ம் தேதி முதல் சனி வக்கிரம் பெறுவதால் அதிகம் பாடுபட்டு முன்னேற வேண்டிவரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். 11-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 9, 10.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 4, 5, 6. l பரிகாரம்: சூரியனை வழிபடவும்.

இந்த வார ராசிபலன் 30-03-2017 முதல் 05-04-2017 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 30-03-2017 முதல் 05-04-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் வலுப்பெற்றிருக்கிறார். குரு 6-ல் வக்கிரமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 12-ல் இருப்பதும் கோசாரப்படி சிறப்பாகும். உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகவே இருந்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். நூதனப் பொருட்சேர்க்கை நிகழும். பேச்சாற்றல் அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். சூரியன் 12-ல் இருப்பதாலும் 5-ல் ராகு உலவுவதாலும் மக்களாலும் தந்தையாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.

திசைகள்: தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை. l எண்கள்: 3, 6, 7, 9.‎

பரிகாரம்: சூரியனையும், சனியையும் வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றமும், நிலைமாற்றமும் உண்டாகும். வீடு மாற்றம் செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் உண்டாகும். மன அமைதியும் கெடும். ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமானவர்களின் தொடர்பு பயன்படும்.

உடல் நலம் சீராகும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். கலைஞர்கள், மாதர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகிகளுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 2, 5.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 3, 6, 7. l பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக சஞ்சரிப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். அரசுதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். மனத்தில் துணிவுகூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

எழுத்து, பத்திரிகை துறைகளில் வளர்ச்சி இருக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். போட்டி, பந்தயம், விளையாட்டு, வழக்கு ஆகியவற்றில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பொதுநலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2 (இரவு), 5.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9. l பரிகாரம்: கணபதியை வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் வக்கிர சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.

புதிய சொத்துக்களும் சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள்.