இந்த வார ராசிபலன் 30/11/2017 முதல் 06/12/2017 வரை | Weekly Astrology Forecast

0
75
astrology forecast | ராசிபலன்
Click Image Below And Get Our App For Free

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றிபெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வர வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வர வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம்.

பெண்கள், புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள், சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

Click Image Below And Get Our App For Free

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்:  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் வரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு  எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தென்மேற்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 6ல் மறைந்திருந்தாலும் சூரியனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையையும் குழந்தைகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்கள், எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பணக் கஷ்டம் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிரச்சினைகளைப் பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள், நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள் எதையும் புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் புதனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தை தருவதாலும் ராசியாதிபதி சூரியன் சனி சாரம் பெற்று இருப்பதாலும் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனைத் தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பீர்கள்.

பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாகப் பேசிப் பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசிச் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாகப் பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களைப் படித்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ இலைகளால் பூஜித்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோதைரியம் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றிபெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.

கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் மீதான அன்பு அதிகரிக்கும். பெண்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் புதிய வேலைகளைத் தொடங்க முடியும். மாணவர்கள், எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியைப் பற்றிய கவலை குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட  எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் விரயஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் சுபச் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையைச்  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மனத் தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு  தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவசமாதிக்குச் சென்று வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில், வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாகச்  செய்து முடிப்பீர்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் புகழ், கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் மற்றவர்களுக்குக் கைகொடுக்கும். சுயமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையைப் புகுத்துவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும்.

உறவினர்கள், நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். பெண்கள், அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியவாதிகளுக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்கள், சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை. மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி குரு சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். பாக்கியஸ்தான கிரகக் கூட்டணியால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள், எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply