இந்த வார ராசிபலன் 25-05-2017 முதல் 31-05-2017 வரை | Weekly Astrology Forecast

0
205
Share on Facebook
Tweet on Twitter

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 6-ல் உள்ள குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். 2-ல் சூரியனும் 8-ல் சனியும் இருப்பதால் வீண்வம்பு வேண்டாம். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபட்டால் பயன் பெறலாம். 26-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறுவதால் மனோபலம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 3, 6, 7.‎

பரிகாரம்: ஆதரவற்றவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகரிக்கும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கூடிவரும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். சகோதரிகளாலும், மனைவியாலும், நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் 4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் திருமாலையும் வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் புதனும் சஞ்சரிப்பதால் புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். உழைப்பு வீண்போகாது. வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். தாய்மாமனால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள்.

செய்தொழிலில் சீரான முன்னேற்றத்தைக் காணலாம். 26-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 27-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பச்சை, புகை நிறம். l எண்கள்: 4, 5, 8.

பரிகாரம்: பித்ருக்கடன் ஆற்றுவது அவசியமாகும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். தோற்றப் பொலிவு கூடும். அறிவாற்றல் பளிச்சிடும். செயல் திறமை வெளிப்படும். அரசுப் பணிகள் எளிதில் நிறைவேறும். நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசுக் காரியம் இப்போது நிறைவேறும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

பொறியாளர்கள் நோக்கம் ஈடேறும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். தந்தையால் நலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 26, 30.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. செய்தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். நிலபுலங்கள் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நல்லவர்கள் நலம் பல புரிவார்கள். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டுகொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களால் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29 (முற்பகல்).

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: நாகர் வழிபாடு நலம் தரும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

அறிவாற்றல் பளிச்சிடும். தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். தியானம், யோகா, ஜோதிடத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். எதிர்ப்புக்கள் விலகும். மனத்தில் தெளிவு பிறக்கும். பேச்சாற்றல் கூடும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடத்துக்கு மாறுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி பெற வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை. l எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்: ராகு, குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பண வரவு சீராகவே இருந்துவரும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இனங்கள் ஓரளவு லாபம் தரும். சூரியனும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்சினைகள் சூழும். அரசுப் பணிகளில் அதிக கவனம் தேவை. அரசியல்வாதிகள் புதிய கொள்கைகளை இந்த நேரத்தில் வெளியிடலாகாது. எரிபொருள், மின்சாரம், கூரிய பொருட்களால் விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. மனக்குழப்பம் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடத்துக்கு மாறுவதும் சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29, 30.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம். l எண்கள்: 3, 4.

பரிகாரம்: சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது நல்லது. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள்கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும்.

உத்தியோகஸ்தர்களது நிலைஉயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடத்துக்கு மாறுவது குறை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உடன்பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 29 (பிற்பகல்), 30.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வெண்மை. l எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி காண்பீர்கள். வழக்குகளிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுகமும் சந்தோஷமும் கூடும்.

அரசியல் வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கொடுக்கல் வாங்கல், ஊக வணிகம் லாபம் தரும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். தகவல் தொடர்பு பயன்படும். கலைத் துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

தொழிலாளர்கள் விவசாயிகள் எண்ணங்கள் நிறைவேறும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்துக்கு மாறுவதால் இயந்திரப் பணிகள் லாபம் தரும். விளையாட்டு, இசை, போட்டி ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். 27-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை. l எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: சிவ வழிபாடு செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். அலைச்சல் சற்று அதிகமாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் சோர்வு ஏற்படும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். பேச்சில் இனிமை கூடும். முகப்பொலிவு உண்டாகும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். ஆடவர்களுக்குப் பெண்களால் நலம் உண்டாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. மக்களால் பிரச்சினைகள் சூழும். 27-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்துக்கு மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை. l எண்கள்: 6, 8.

பரிகாரம்: நாகரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் சூரியனும் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் மூலம் வருவாய் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.

கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னெற்றமான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகள் அடங்குவார்கள். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 27, 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6, 9. l பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது.

SHARE
Facebook
Twitter
Previous articleகட்டப்பஞ்சாயத்து செய்கிறார் பிரதமர் மோடி : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
Next articleமதுக்கடை மூடக்கோரும் வழக்கில் ஆட்சியருக்கு உத்தரவு: உயர்நீதிமன்ற கிளை

Leave a Reply