இந்த வார ராசி பலன் 04-02-2016 முதல் 10-02-2016 வரை | Weekly astrology forecast

0
206
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசி பலன் 04-02-2016 முதல் 10-02-2016 வரை 

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தர்ம சிந்தனை வளரும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனத்தெளிவும் ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 10-மிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். 7-ம் தேதி முதல் குரு 5-மிடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். மன உற்சாகம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7. ‎

பரிகாரம்: ராகு, குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் செவ்வாயும், 8-ல் புதனும் சுக்கிரனும் ஆகியோரும் 10-ல் கேதுவும் உலவுவது விசேடமாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சொத்துகள் சேரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கையும் நிகழும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். 6-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதால் நற்காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். 7-ம் தேதி முதல் குரு 4-ம் இடம் மாறுவதால் அலைச்சல் அதிகமாகும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும் என்றாலும் சிறு சங்கடம் உண்டாகும். கணவன், மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 7,8, 10.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தெற்கு. தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதியாக துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் உள்ள ராகுவும், 6-ல் உலவும் சனியும் நலம் புரிவார்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். திறமை வீண் போகாது. 8-ல் சூரியன் இருப்பதால் உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், விஞ்ஞானம், பத்திரிகை போன்ற துறைகள் லாபம் தரும்.

7-ம் தேதி முதல் குரு 3-ம் இடம் சிறப்பாகாது. பொருளாதாரம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே சிறு சிறுப் பிரச்சினைகள் ஏற்படும். அனுசரித்துப் போவது நல்லது. தந்தை சேமித்த பொருட்களுக்கு சேதம் உண்டாகும். பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள் பிப்ரவரி 5, 10.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு.

நிறங்கள்: கருநீலம், கறுப்பு.

எண்கள்: 4, 8.

பரிகாரம்: சூரியனுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்து வரவும்.

கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி புதன் ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து ஈடுபடுவதே நல்லது. பிற கமொழி, மத, இனக்காரர்களால் தொல்லைகள் ஏற்படும். விஷ பயம் உண்டாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு நிலவி வரும். 6-ம் தேதி முதல் நிறுவன நிர்வாகத் துறையினருக்கு வளர்ச்சி தெரிய வரும்.

7-ம் தேதி முதல் குரு 2-ம் இடம் மாறுவதால் பணப் பிரச்சினைகள் குறையும். குடும்ப நலம் சீராகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கடன் உபத்திரவம் குறையத் தொடங்கும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8.

திசை: வடக்கு.

நிறங்கள்: பச்சை, ரோஜா நிறம்.

எண்: 5.

பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். மக்களால் நலம் உண்டாகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாரப் பின்பகுதியில் சந்திரன் கேதுவுடன் கூடி 7-ல் உலவும் நிலை அமைவதால் எதிர்ப்புகள் உண்டாகும்.

6-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். நிர்வாகத் திறமைக் கூடும். 7-ம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு இடமாறுவது சிறப்பாகாது. இடமாற்றம் உண்டாகும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: பொன்நிறம், சிவப்பு, வான்நீலம, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6,9.

பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் கேதுவும் உலவுவதால் பொதுப் பணிகளில் ஆர்வம் கூடும். நண்பர்கள் உதவுவார்கள். உறவினரால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்களது எண்ணங்கள் நிறைவேறும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். 7-ம் தேதி முதல் புதன் 5-மிடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 7-ம் தேதி முதல் குரு 12-மிடம் மாறுவது குறை. செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிக்ள்: பிப்ரவரி 5, 7, 8, 10.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும்.

துலாம் ராசி வாசகர்களே

சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களது எண்ணம் நிறைவேறும். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு வலுப்பெறும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 6-ம் தேதி முதல் புதன் 4-மிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். மாணவர்களது நிலை உயரும். 7-ம் தேதி முதல் குரு 11-மிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். எதிர்பாராத பொருள் சேரும். பேச்சில் இனிமை தவழும். வாரப் பின்பகுதியில் சந்திரன் கேதுவுடன் கூடி 4-ல் உலவும் நிலை அமைவதால் சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். 7-ம் தேதி முதல் குரு 10-மிடம் மாறுவதால் உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். ஜன்ம ராசியில் சனியும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 7, 8, 10.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். தந்தையால் நலம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடும் அதனால் மனத்தெளிவும் உண்டாகும். சனி 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 2-மிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். 7-ம் தேதி முதல் குரு 9-மிடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புத்திசாலித்தனமும் தொழில்நுட்பத் திறமையும் பளிச்சிடும். செயலில் வேகம் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7. 9.

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி லாப ஸ்தானத்தில் உலவுவது விசேடமாகும். செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் சிறுசிறி இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். 7-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது.

வியாபாரிகளும் மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 7-ம் தேதி முதல் குரு 8-மிடம் மாறி ராகுவுடன் கூடுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம்; வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்:, பிப்ரவரி 7, 8, 10.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: நாகர் வழிபாடு செய்யவும். சூரியனுக்கும் திருமாலுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் எடுத்த காரியங்களில் எப்போடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். முக்கியமான எண்ணங்களில் சில வார முன்பகுதியில் நிறைவேறும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

12-ல் சூரியன் இருப்பதால் அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. நிர்வாகப் பணியாளர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். தந்தை நலனில் கவனம் தேவை. ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொண்டு மற்ற்வர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 6-ம் தேதி முதல் புதன் 12-மிடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 7-ம் தேதி முதல் குரு 7-மிடம் மாறுவதால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். பண நடமாட்டம் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 10.

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6, 8 .

பரிகாரம் ஆதித்ய ஹ்ருதயம் வாசிக்கவும். நாகேஸ்வரரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களைப் புகழுவார்கள். அரசு உதவி கிடைக்கும்.

நிர்வாகத் திறமை வெளிப்படும். 6-ம் தேதிமுதல் புதன் 11-மிடம் மாருவதால் அரசியல், நிர்வாகம், விஞ்ஞானம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். 70–ம் தேதி முதல் குரு 6-மிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். எதிலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here