இந்த வார ராசிபலன் 27-10-2016 முதல் 02-11-2016 வரை | Weekly astrology forecast

0
639
Share on Facebook
Tweet on Twitter
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன்  27-10-2016 முதல் 02-11-2016 வரை

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் அனுகூலமாக உலவுகிறார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். பொருளாதார நிலை உயரும். நிலபுலன்கள் சேரும். சொத்துகளால் வருவாயும் கிடைத்துவரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். பிரச்சினைகள் எளிதில் தீரும். செயலில் வேகம் கூடும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும்.

கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். இயந்திரப் பணியாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப்பணியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 5-ல் ராகுவும், 6-ல் குருவும் 7-ல் சூரியனும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். கணவன் மனைவி இடையே சிறு சச்சரவுகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30. | திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு. எண்கள்: 6, 7, 9.‎
பரிகாரம்: ராகு, குரு, சனி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல் சூரியனும் புதனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். அலைச்சலைத் தவிர்க்க இயலாது. மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். தெய்வப் பணிகள் நிறைவேறும். செல்வந்தர்களின் சகாயம் கிடைக்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். சுக்கிரனும் சனியும் 7-ல் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 7. பரிகாரம்: துர்க்கையை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது நல்லது. பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவிபுரிய முன்வருவார்கள். பயணத்தால் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி இறக்குமதி துறைகளால் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் நாட்டம் உண்டாகும்.

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளின் திறமை வீண்போகாது. இரும்பு, எஃகு, எண்ணெய் வகைகளால் வருவாய் கிடைக்கும். சுக்கிரன் 6-ல் இருப்பதால் கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்குச் சோதனைகள் சூழும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு. நிறங்கள்: புகை நிறம், பச்சை, கருநீலம்.
எண்கள்: 4, 5, 8. பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைக் கொடுக்கவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். தரகர்களும் கமிஷன் ஏஜண்டுகளும் வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.

பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. உடன்பணிபுரிபவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைபடும். சுபகாரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 5, 6.

பரிகாரம்: ராகு, கேது, குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பேச்சாளர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். முக வசீகரம் கூடும்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9. பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். 30-ம் தேதி முதல் நல்ல திருப்பம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பநலம் சிறக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள்.

கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஜன்ம ராசியில் குரு இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். 2-ல் சூரியன் பலம் குறைந்து இருப்பதால் அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. ராகு 12-ல் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன், பச்சை. எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: துர்க்கையை வழிபடவும்.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2-ல் இருக்கிறார். ராகு 11-ல் உலவுவது சிறப்பாகும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். இடமாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் சற்று கூடும். ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். புதன் ஜன்ம ராசியில் இருந்தாலும் தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். முக்கியமான காரியங்கள் நிறைவேற வாய்ப்பு கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். விருந்து, உபசாரங்களில் ஈடுபடுவீர்கள். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. ஊகவணிகத்தில் அதிக ஆதாயமிராது. மனக்குழப்பம் ஏற்படும். மறதியால் அவதிப்படுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், இளநீலம். எண்கள்: 4, 6.
பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் பலம் மிகுந்த செவ்வாயும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய முயற்சிகள் கைகூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நிலபுலன்கள் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆசிபுரிவதுடன் ஆதரவாகவும் இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். வார முன்பகுதி மிகச் சிறப்பாகவே அமையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 6, 9. பரிகாரம்: சூரியன், சனி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 11-ல் சூரியனும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது நல்லது. ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் லாபம் வரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு நலம் உண்டாகும். நவம்பர் 1,2 தேதிகளில் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை. இடமாற்றம், நிலைமாற்றம் ஏற்படும். மனதில் சலனம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7. பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் சுக்கிரனும் சனியும் உலவுவது சிறப்பாகும். புனித காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சாது தரிசனம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் பெற வாய்ப்பு கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைத்துவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 8. பரிகாரம்: விநாயகரையும், துர்க்கையையும் வழிபடவும். நாக வழிபாடு அவசியம்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சனி உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகைகளில் லாபம் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு அன்புடன் பழகவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் தொடர்பான காரியங்களில் அதிக கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். மக்களால் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். தொழில் ரீதியாக இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். தொழில் அதிபர்கள் புதிய துறைகளில் அதிக முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை. எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: நாக பூஜை செய்யவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் எதிர்ப்புகளின் கரம் வலுக் குறையும். வழக்குகளில் வெற்றி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பொருள்வரவு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 3, 4, 5, 6, 9. பரிகாரம்: சூரியனை வழிபடவும்.

Leave a Reply