இந்த வார ராசிபலன் 19-01-2017 முதல் 25-01-2017 வரை | Weekly astrology forecast

0
403
Share on Facebook
Tweet on Twitter

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு நண்பராவார்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தொழில் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் சந்திரன், சனியோடு கூடி 8-ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால் மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதி: ஜனவரி 19.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 7, 9.‎

பரிகாரம்: 8-ல் உள்ள சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. அனுமனை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். போட்டிகளில் வெற்றி கிட்டும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நிலபுலங்கள் லாபம் தரும். செந்நிறப்பொருட்களாலும் ஜலப்பொருட்களாலும் ஆதாயம் கிடைக்கும். குரு 6-ல் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 9.

பரிகாரம்: ராகுவையும் குருவையும் வழிபடுவது நல்லது. துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 5-ல் குருவும் 6-ல் சனியும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். புத்திசாலித்தனமும் செயல் திறமையும் பளிச்சிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். சூரியன் 8- லும் கேது 9-லும் இருப்பதால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசுப்பணிகளில் விழிப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 6, 8.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் புதனும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 4-ல் உலவும் குருவும் 9-ல் உலவும் செவ்வாயும் ஓரளவு நலம் புரிவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியமாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மக்களால் மன அமைதி குறையும்.

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். நிலம், மனை, வீடு, வாகனங்களால் அளவோடு வருவாய் கிடைத்துவரும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகம் பாடுபட வேண்டிவரும். மறதியால் அவதிப்பட நேரலாம். மார்பு, வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: நாகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 6-ல் உலவுவது ஒன்றே சிறப்பாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். குடும்ப நலனில் கவனம் செலுத்தவும். பொருள் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். அக்கம்பக்கத்தாராலும் உடன்பணிபுரிபவர்களாலும் பிரச்சினைகள் சூழும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்றவற்றால் பிரச்சினைகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கில் ஈடுபட வேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும்.

பழைய சொத்துக்களை விற்கவும் நேரலாம். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம் என்பதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. அரசுப்பணிகளில் வளர்ச்சி காண வழிபிறக்கும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசியல்வாதிகள் ஓரளவு நலம் பெறுவார்கள். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசை: கிழக்கு.

நிறம்: ஆரஞ்சு.

எண்: 1.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 4-ல் புதனும் 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்ப நலம் சிறப்பாக இருந்துவரும். சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். கடன் தொல்லை குறையும். பொது நலப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், வங்கிப் பணியாளர்கள், சேமிப்பு நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும்.

வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 6-ல் சுக்கிரனும் 7-ல் செவ்வாயும் உலவுவதால் கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும். பெண்களால் பிரச்சினைகள் சூழும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. மாதர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 7, 8.

பரிகாரம்: துர்க்கைக்கும் சுப்பிரமணியருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துவருவது நல்லது. ஸ்ரீ சூக்தம் சொல்வதும் கேட்பதும் சிறப்பாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைக் கொடுப்பது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பணவரவு சீராக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு கூடிவரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். ஜலப்பொருட்களால் வருவாய் கிடைக்கும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். தலை, கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (இரவு), 23.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: திருமாலையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். போக்குவரத்து இனங்களால் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

மாதர்களது எண்ணம் ஈடேறும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. தாய் நலனிலும் அக்கறை தேவைப்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலும் கூடும். ஜல சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குரு 12-ல் இருப்பதால் மக்களால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (பகல்), 23.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: குரு, சனி, கேது ஆகியோருக்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் கேதுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பொன்னும் பொருளும் சேரும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும்.

12-ல் சனி உலவுவதால் வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதி: ஜனவரி 19.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். உழைப்பு வீண்போகாது. கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைத்துவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஜன்ம ராசியில் சூரியன் உலவுவதால் உஷ்ணாதிக்கம் அதிகமாகும்.

உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதாலும், 12-ல் புதன் உலவுவதாலும் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்பு தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19, 23.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு.

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: நாக பூஜை செய்யவும். விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 10-ல் சனியும் 11-ல் புதனும் உலவுவது நல்லது. தோற்றப்பொலிவு கூடும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூரப் பயணமும் புனிதப் பயணமும் மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். சமுதாய நலப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மக்களால் நலம் உண்டாகும்.

பண நடமாட்டம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சூரியன், செவ்வாய், ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும் என்றாலும் குருபலத்தால் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (இரவு), 23.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. புதியவர்களின் தொடர்பு பயன்படும். பயணத்தால் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு கிடைக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.

ஜன்ம ராசியில் செவ்வாயும் 8-ல் குருவும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் பொறுப்புடன் காரியமாற்றிவருவது அவசியமாகும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள் என்பதால் பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. விளையாட்டு விநோதங்களிலும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 19 (பகல்), 23.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.

SHARE
Facebook
Twitter
Previous articleTamil GK For Government Exams – 0030
Next articleTamil GK For Government Exams – 0031
goa

Leave a Reply