- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில் காலியாக உள்ள 375 சயின்டிஸ்ட், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 375
பணி: Scientist / Engineer
தகுதி: 65 சதவீத மதிப்பெண்களுடன் Electronics/Mechanical/Computer Science போன்ற பொறியியல் பாடப்பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100
வயது வரம்பு: 18 – 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ.100ஐ விண்ணப்பக் கட்டணமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2016
மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news