2016 ஜனவரி மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2016 JANUARY Madha Rasipalan

0
348
Share on Facebook
Tweet on Twitter

2016 ஜனவரி 1 முதல் 31 வரை

– நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மேஷம்:

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல் ராகுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் புதனும்  உலவுவது சிறப்பாகும்.  திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வெளிநாட்டு தொடர்பு பயன் படும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம்.

திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். மக்களாலும் மனைவியாலும் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசாங்க உதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில்வளர்ச்சி பெறும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும்.

கணவன் மனைவியிடையே சிறு சிறு சச்சரவு ஏற்பட்டு விலகும். உத்தியோகஸ்த்தர்களது நிலைமையில் அபிவிருத்தி தெரிய வரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் புதிய சொத்துக்கள் சேரும். 15-ஆம் தேதி முதல் ச்சூரியன் 10-ஆம் இடம் மாறுவதால் புதிய பதவிகளும் பட்டங்களும் பொறுப்புக்களும் வந்து  சேரும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆம் இடம் மாறுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். வாழ்க்கை துணைவரால் பாக்கியம்  சேரும். தொலைதூர தொடர்பு நலம் தரும். கேளிக்கை உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 30-ஆம் தேதி முதல் ராகு 5-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை. கேது 11-ஆம் இடம் மாறுவதால் மனத்துணிவு கூடும். பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும்

ஈடுபாடு அதிகமாகும். அறப்பணிகளில் நாட்டம் கூடும்.அஷ்டமத்தில் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். பிறருக்கு ஜாமீன் கொடுக்கல் ஆகாது. சனிப்ரிதீ செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 13, 15, 20, 24, 29.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு. ..

எண்கள்: 1, 3, 4, 5, 6. 

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் உலவுவது மிக சிறப்பாகும்.  எதிர்ப்புக்களை கடந்து வாழ்வில் முன்னேற்றம்  காண்பீர்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும்.  இயந்திர பணியாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களிலும் போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். 4-ல் குருவும் 8-ல் சூரியனும் இருப்பதால் நண்பர்கள் உறவினர்களால் மன அமைதி கெடும். முக்கியமானவர்களை விட்டு பிரிய நேரலாம்.உடல்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. பெற்றோர் நலனில் அக்கறை தேவைப் படும்.5-ல் ராகு இருப்பதால் மக்களின் நடத்தையில் கவனம் செலுத்தவும். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. அரசாங்கத்தாரால் பிரசனைகள் ஏற்படும். அரசு அபராதம் கட்ட வேண்டி வரும். 11-ல் கேது இருப்பதால் ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும்.

5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 8-ஆம் தேதி குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப் படும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாமல் போகும். பொய் சொல்லவும் நேரலாம். 15-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆம் இடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆம் இடம் மாறுவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைத்துறைஞர்களுக்கு மந்தநிலை விலகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். 30-ஆம் தேதி முதல் ராகு 4-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. வீண் அலைச்சல் ஏற்படும். சுகம் குறையும். கேது 10-ஆம் இடம்

மாறுவது நல்லது.காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசை: தெற்கு வடமேற்கு.

எண்கள்: 7, 9.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 6-ல்  சனியும் 8-ல் புதனும் 10-ல் கேதுவும் உலவுவதுசிறப்பாகும். உழைப்புக்கும் தகுதிக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். பிறரால் போற்றப்படுவீர்கள். தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். லாபமும் கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் ஆதாயம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு

வரவேற்பு கூடும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்து வருவீர்கள். குரு 3-லும், ராகு 4-லும், செவ்வாய் 5-லும், சுக்கிரன் 6-லும் இருப்பது சிறப்பாகாது. மக்கள் நலம் பாதிக்கும். பெண்களால் தொல்லைகள் சூழும். கெட்ட பெயரும் உண்டாகும். பிற மாதர் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. மனைவியாலும் சில பிரச்னைகள் ஏற்படவே செய்யும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும்.

5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது நல்லது. பண வரவு அதிகரிக்கும். குடும்ப நலம் சீராகும். 15-ஆம் ததேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது குறை அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவதும் விசேடமாகாது. கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும். கூட்டாளிகளால் தொல்லைகள் சூழும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. தகவல் தொடர்பு சிறப்பாக இராது. வயிறு, கண்  சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 30-ஆம் தேதி முதல் ராகு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பிரச்னைகள் குறையும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கேது 9-ஆமிடம் மாறுவதால் தந்தை நலம் பாதிக்கும். தாய் வழி உறவிஒனர்கலால் தொல்லைகள் சூழும்.

மிருகசீரிஷம், புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் 1, 4, 6, 7 13, 15, 20, 24, 29. தேதிகள்: ஜனவரி

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

எண்கள்: 5, 7, 8.

கடகம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் ராகுவும் 5-ல் சுக்கிரனும் 60ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். பண நடம்சாட்டம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செழிப்புக் கூடும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிறுவன,

நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். கேளிக்கை, உல்லாசன்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரிகளுக்கும் மாணவர்களுக்கும் மந்த நிலை உண்டாகும்.

5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அதிகம் பாடுபட வேண்டிவரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவதாலும், 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெண்களால் சங்கடம் உண்டாகும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேரான வழியில் செல்வது நல்லது. சுகானுபவம் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிறச்னைகள் ஏற்படும். பிறரிடம்

கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. 30-ஆம் தேதி முதல் ராகு 2-ஆமிடத்துக்கும் கேது 8-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்ப நலனில் கவனம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். புனர்பூசம், ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 15, 20, 24, 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு..

எண்கள்: 1, 3, 4, 6.

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 4-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். வீர தீர பராக்கிரமாம் வெளிப்படும். போட்டிக்களில் வெற்றி கிடைக்கும். நிலபுலங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கேளிக்கை உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மாதர்களது நோக்கம்

நிறைவேறும். புதிய ஆடை அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். 2-ல் ராகும் 8-ல் கேதுவும் 4-ல் சபனியும் உலவுவதால் குடும்ப நலனில் அக்கறை தேவைப் படும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. ஏற்றுமதி இறக்குமதி இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டத்திற்கு ஆளாகாமால் தப்பலாம்.பேச்சில் நிதானம் தேவை. 5-ஆம் தேதி முதல் புதனும் 8-ஆம் தேதி முதல் குருவும் வக்கிரம் பெறுவதால் மாணவர்கள்,

வியாபாரிகள், உத்தியோகஸ்த்ர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.15- ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆம் இடம் மாறுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். மருத்துவர்களது நிலை உயரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆம் இடம் மாறுவதால் சுபிட்சம் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பெண்களாலும் மனைவியாலும் அனுகூலம் உண்டாகும். பரம்பரைத் தொழில் விருத்தி அடையும். புதிய ஆடை

அணிமணிகள் சேரும். உல்லாசபயணம் மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்டவாய்ப்புக்கள் கூடிவரும். 30-ஆம் தேதி முதல் ராகு ஜென்ம் ராசிக்கும் கேது 7-ஆம் இடத்திற்கும் மாறுவது சிறப்பாகாது.  வீண் அலைச்சல் அதிகமாகும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து பழகுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

மகம், பூர  நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7,13, 20, 29.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 9. 

கன்னி:

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் சனியும் உலவுவது விசேடமாகும். முயற்சிக்குரிய பயன் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் பயன் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான தகவல் வந்து சேரும். ஜலப் பொருட்களால் ஆதாயம் சேரும். தான, தருமப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 2-ல் செவ்வாயும் 4-ல்

சூரியனும் இருப்பதால் குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வீண் அலைச்சலை தவிர்க்கவும்.  நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவது நல்லது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பொதுநல பணியாளர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.  நண்பர்கள் உறவினர்களால் செலவுகள் ஏற்படும். மக்கள் நல முன்னேற்றத்திற்க்காகவும் செலவு செய்ய வேண்டிவரும்.

5-ஆம் தேதி முதல் புதனும் 8-ஆம் தேதி முதல் வக்கிரம் பெறுவது விசேடமாகும். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை உயரும். முக்கிய எண்ணங்கள் நிறைவேறும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. அரசுப் பணிகளில் கவனம் தேவை. 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆம் இடம் மாறுவதால் புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். சொத்துக்களால் வருமானமும் ககிடைக்கும். கேளிக்கை உல்லாசங்களில் அதிகம் ஈடுபாடும் அதிகமாகும். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உண்டாகும். வீட்டை அழகு படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். உயர் பதவிகள் சிலருக்கு கிடைக்கும். 30-ஆம் தேதி முதல் ராகு 12-ஆம் இடம் மாறுவது

சிறப்பாகாது. வீண்செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கேது6-ஆம் இடம் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் ஏற்படும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ஹஸ்தம், சித்திரை  நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு. 

எண்கள்: 5, 6, 8.

துலாம்:

சூரியன், புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது அனுகூலமான ச்ஞ்சாரத்தால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து உபச்சாரங்களில் கலந்துக் கொள்வீர்கள். நிர்வாகத்திறமை வெளிப்படும். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும்.கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த ஜகாரியங்கள் இப்பொழுது நிறைவேறும், தெய்வகாரியங்களில் ஈடுபாடு

உண்டாகும்.  சாதுக்கள்,மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். ஜென்ம ராசியில் செவ்வாயும் 12-ல் ராகுவும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கை தேவை. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.வீண்செலவுகளை தவிர்க்கவும்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படும்.உடன் பணிபுரிபவர்களிடம் சுமுகமாக பழகுவது நல்லது.

5-ஆம் தேதி முதல் புதன்வக்கிரநிலை பெறுவதால் வியாபாரத்தில் கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டு வினோதங்களை தவிர்க்கவும். கூரிய ஆயுதங்கள் மின்சாரம், எரிப்பொருள், வெடிப்பொருள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும் போதும் பயன் படுத்தும் போது பாதுகாப்பு தேவை. 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆம் இடம் மாறுவதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆம் இடம் மாறுவதால் போட்டிகளில் வெற்றிக் கிடைக்கும். 30-ஆம் தேதி முதல் ராகு

11-ஆம் இடம் மாறுவது விசேடமாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அயல் நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். 5-ல் கேது சங்கடங்களை உண்டு பண்ணுவார். மக்களால் பிரச்சனைகள் சூழூம். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதியால் அவதி உண்டாகும்.

சித்திரை, விசாக  நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13,15, 24, 29.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.. .

எண்கள்: 1, 3, 6, 7.

விருச்சிகம்:

உங்கள் ராசியில்  சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்ககையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். போக்குவரத்து இனங்களால் வருவாய் கூடும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஜன்ம ராசியில் சனி இருப்பதால் வேலைப்பளு அதிகமாகும். அலைச்சல் கூடவே செய்யும். மதிப்பு குறைவான காரியங்களில் ஈடுபட நேரும். 2-ல் சூரியனும் 12-ல் செவ்வாயும் இருப்பதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். 5-ஆம் தேதி முதல் புதனும் 8-ஆம் தேதி முதல் குருவும்  வக்கிரம் பெறுவதும் சிறப்பாகும். வியாபாரம் பெருகும். பண வரவு கூடும். மக்கள் நலம் சீராகும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும்.

முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை நிகழும். 30-ஆம் தேதி முதல் ராகு 10-ஆமிடம் மாறுவது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். கேது 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தாய் நலனில் அக்கரை தேவைப்படும்.

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு  .

எண்கள்: 4, 6.

தனுசு:

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 9-ல் குருவும், 10-ல் ராகுவும், 11-ல் செவ்வாயும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மக்களாலும், உற்றார், உறவினர்களாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். இயந்திரப்பணிகள் லாபம் கொண்டு வரும். இஞ்சினீயர்களது நிலை உயரும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். விருதுகளும்

பட்டங்களும், அரசு சன்மானமும் கிடைக்கும். வீர, தீர, பராக்கிரமம் கூடும். சாதனையாளராவீர்கள். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

5-ஆம் தேதி முதல் புதனும், 8-ஆம் தேதி முதல் குருவும் வக்கிரம் பெறுவது சிறப்பாகது. உத்தியோகஸ்தர்களும் வியாபாரிகளும், மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறினாஅலும் நலம் புரிவார். குடும்பத்தில் சுப  காரியங்கள் நிகழும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் திறமை கூடும். குடும்பத்தாரால் புகழப்படுவீர்கள். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்ட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது நல்லது. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி இடையே களிப்புறவு நீடிக்கும். கூட்டாளிகள் உதவுவார்கள். வாழ்வில் முனேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

4-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதா சிறுசிறு உபத்திரவங்கள் அவ்வப்போது ஏற்படும். வீண் அலைச்சல், செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. 30-ஆம் தேதி முதல் ராகு 9-ஆமிடத்துக்கும் கேது 3-ஆமிடஹ்த்துக்கும் மாறுவதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

பூராட  நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு. .

எண்கள்: 3, 4, 6. 9

மகரம்:

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மன மகிழ்ச்சி பெருகும். பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும். சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள். தோட்டங்கள், சுரங்ககள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்பள் லாபம் தரும். எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். செயலில் வேக்ம கூடும். எடுத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

இஞ்சினீயர்கள், இயந்திரப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். 5-ஆம் தேதி முதல் புதன் வக்கிழம் பெறுவது சிறப்பாகாது. வியாபரத்தில் அதிக கவனம் தேவை. 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது நல்லது. பண வரவு கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக்கூடிவரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தந்தை நலனில் அக்கரை செலுத்த வேண்டிவரும்.  18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுப காரியச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். மக்கள் நலனுக்காகச் சுபச் செலவுகலை மேற்கொள்வீர்கள். 30-ஆம்

தேதி முதல் ராகு 8-ஆமிடத்துக்கும் கேது 2-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்ப நலனில் அக்கறை தேவைப்படும். பேச்சிலும் உணவுப்பழ்க்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பயணத்தால் சங்கடங்கள் ஏற்படும். விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம் என்பதால் விழிப்புடன் இருப்பது நல்லது. திருவோணம், அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 1, 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: மேற்கு, தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 7, 8, 9.

கும்பம்:

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக்கூடிவரும்.  ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு மாத முன்பகுதியில் பதவி உயர்வும், இடமாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களைப் ப்ராட்டுவாஅர்கள். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். மதிப்பு உயரும். தொழிலாலர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்களது நிலை உயரும். பெரியவர்களது ஆசிகள் கிடைக்கும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிரிகள் அடங்குவார்கள்.

5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வீண் செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. 18-ஆம் தேதி  முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் மன மகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காஅரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு

அதிகரிக்கும். 30-ஆம் தேதி முதல் ராகு 7-ஆமிடத்துக்கும், கேது ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 4, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 8.

மீனம்:

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரநும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் உலவுவ்து சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசு ஆதரவு கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். முக்கியஸ்தர்களது சநந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாலர்களுக்கும் விசேடமான நன்மைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் நலம் பெருகும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும், 6-ல் குருவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை. அலைச்சல் அதிகமாகும். திடீர்க் கோபம் வரும். 8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. குடும்பத்தில்

உள்ளவர்களிடன் அன்போடு பழகவும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். தீ, மின்சாரம், ஆயுதம், வெடிப்பொருள் ஆகியவற்றின்  பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. 5-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் சுய தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது நல்லது. மக்கள் நலம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.

15-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள் விலகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித பொருட்களின் சேர்க்கை நிகழும். 18-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் உண்டாகும். 30-ஆம் தேதி முதல் ராகு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். பயணத்தாஅல் அனுகூலம் ஏற்படும். வாழ்க்கைத்துணை நலம் சீராகும். நூதன பொருட்களின் சேர்க்கை நிகழும். கேது 12-ஆமிடம் மாருவதால் ஞான

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் சற்று கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவர் 1, 6, 7, 13, 15, 20, 24, 29.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு

எண்கள்: 1, 5, 6. 

SHARE
Facebook
Twitter
Previous articleஇந்த வார ராசி பலன் 31-12-2015 முதல் 06-01-2016 | Weekly astrology forecast
Next articleTamil General Knowledge Questions And Answers 097
goa

Leave a Reply