Tamil General Knowledge Questions And Answers 084

0
438
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

# பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் – கிரிட்டினிசம்

# இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது – கார்பன் மோனாக்ஸைடு

# இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் – ஹிருடின்

# கார்பஸ் லூட்டியம் சுரப்பது – ரிலாக்சின்

# பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் – விரால்

# செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது – டயலைசர்

# சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25 சதவீதம்

# மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி
-எஸ்.ஏ. பகுதி

# சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்

# சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்

# இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி
ஹீமோகுளோபின்

# இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் – கீட்டோன்கள்

# 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் – இன்சுலின்

# மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா
எர்சினியா பெஸ்டிஸ்

# கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்

# வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து
கார்போ பியுரன்

# மாலத்தீயான் என்பது – பூச்சிக்கொல்லி

# ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு – இலை

# தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா

# கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – லைக்கன்கள்

# கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் – சவுக்கு

# இலைத் தொழில் தண்டு – சப்பாத்தி

# குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

# குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு

# குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி
சுந்தரி அம்மையார்

# குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

# இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

# இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

# பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்

# இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்

Leave a Reply