Tamil GK For Government Exams – 0068

0
905
Share on Facebook
Tweet on Twitter

6ம் வகுப்பு அறிவியல் – முதல் பருவம் :

உயிரியல்

( தாவரங்களின் உலகம் & உணவு முறைகள் )

21. தர்பூசணியில் உள்ள நீரின் சதவீதம்….? 99%

22. பாலில் உள்ள நீரின் சதவீதம்….? 87%

23. முட்டையில் உள்ள நீரின் சதவீதம்…? 73%

24. ஒரு ரொட்டித் துண்டில் உள்ள நீரின் சதவீதம்….? 25%

25. உருளைக் கிழங்கில் உள்ள நீரின் சதவீதம்…? 75%

26. புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்….?

குவார்ஷியோர்கர் (1-5 வயது குழந்தைகள் ) & மராஸ்மஸ்

27. அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்….? முன் கழுத்து கழலை

28. மாலைக்கண் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது….? வைட்டமின் A

29. பெரி-பெரி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது….? வைட்டமின் B

30. ஸ்கர்வி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது….? வைட்டமின் C

31. ரிக்கெட்ஸ் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது….? வைட்டமின் D

32. மலட்டுத் தன்மை எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது…?
வைட்டமின் E

33. சூரிய ஒளியின் உதவியுடன் தோளில் உருவாகும் வைட்டமின்….?
வைட்டமின் D

34. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின்….?
வைட்டமின் C

35. அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு….?சரிவிகித உணவு

36. தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தானேதயாரித்துக்கொள்ளுதல்…? தற்சார்பு ஊட்டமுறை ( பசுந்தாவரங்கள், யூக்ளினா)

37. உணவுக்காக பிற உயிரினங்களை சார்ந்து வாழ்தல்…? பிற சார்புஊட்டமுறை

38. பிற தாவரங்களை பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத்தேவையான உணவைப் பெறுவது….? ஒட்டுண்ணி உணவூட்டம்
(கஸ்க்யூட்டா)

39. கஸ்க்யூட்டா தாவரத்திற்கு ஊர்ப் புறங்களில் வழங்கப்படும் பெயர்கள்…?அம்மையார் கூந்தல் / சடதாரி / தங்கக்கொடி

40. புற ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு….? பேன், அட்டைப்பூச்சி

41. அக ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு…?
உருளைப்புழு ( மனிதன் & விலங்குகளின் குடல் பகுதியில் வாழும் )

42. சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு….? காளான்

43. நெப்பந்தஸ், டிரோசீரா, யூட்ரிகுலேரியா போன்றவை….? பூச்சி உண்ணும்தாவரங்கள்

44. உடல் பருமன் குறியீடு
(B M I )= எடை(கிகி)/ உயரம் (மீ^2)

Leave a Reply