அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்கள்

0
1384
Share on Facebook
Tweet on Twitter

 

அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்கள்: –

 

windows-xp-tips-and-tricks

 

 

  • அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்களில் அறிவுக்கூர்மை தொடர்பான சூத்திரங்கள் (Formulaes) மற்றும் முறைகளை (Methods) நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்,  ஏனனெனில் இத்தேர்வில் அறிவுக்கூர்மை மற்றும் திறனறிதல் தொடர்பாக 25 கேள்விகள் கேட்கப்பட உள்ளன

 

அறிவுக் கூர்மைப் பகுதி

 

  • கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளிவிவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப் பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டு வட்டி- பரப்பளவு-கன அளவு- நேரம் மற்றும் வேலை-தர்க்க அறிவு-புதிர்கள்- பகடை தொடர்பானவை- படம் தொடர்பான தர்க்க அறிவு – எண் முறை தொடர்பானவை- முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.
  • குறிப்பு : 6 லிருந்து 10 வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுவதுமாக படியுங்கள் ஏனென்றால் சில வினாக்களுக்கு உங்களுக்கு விடை தெரியாமல் இருக்கலாம். அப்போது அவ்வகையான வினாக்களுக்கு தவறான விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியும் எனவே அனைத்து தவறான பதில்களைத் தவிர்த்து அக்கேள்விக்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.

 

  • படிக்கவேண்டிய புத்தகங்கள்

 

  • பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்

 

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை

 

  • டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில், 100 பொது அறிவு கேள்விகளில் 25 கேள்விகள் திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்காவது சரியாக விடையளிப்பது அவசியமாகும்.
  • எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கன அளவு, தர்க்கவியல், புதிர், பகடை, எண் மற்றும் எழுத்துக்களின் தொடர் வரிசையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
  • கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதாலும், நேரத்தை விழுங்கும் கேள்விகள் என்பதாலும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி குறித்து அச்சம் நிலவுகிறது. உண்மையில் மற்ற பாடங்களை விட இந்த பகுதி எளிமையானதாகும். முறையாக கற்பதோடு, தொடர் பயிற்சி எடுத்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு கேள்விக்கு குறைந்தபட்சம் 30 வினாடிகள் முதல் அதிக பட்சம் 1 நிமிடத்துக்குள் விடைகாண முயற்சிக்க வேண்டும்.
  • மற்ற பாடங்கள் போல் அல்லாமல், இப்பகுதிக்கு தொடர் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 2012 முதல் TNPSC தேர்வு களில் கேட்கப்பட்ட திறனறிதல் பகுதி கேள்விகளை போட்டுப் பழக வேண்டும். பயிற்சியின்போது தவறான விடை கிடைத்தாலும் கூட அது ஒருவகையில் நல்லதேயாகும். அந்த தவறு தேர்வின்போது வராமல் பார்த்துக் கொள்ள பயிற்சி உதவும்.
  • இலக்கியம், கலை என எந்த புலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு வரை படித்த கணிதமே இந்த பகுதிக்கு போதுமானது ஆகும்.
  • இங்கு வினா-விடைகளோடு விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு விடைத்தாள்கள் மற்றும் மாதிரி விடைத்தாள்களில் பயிற்சி பெறலாம்.
  • கணிதம் கற்பித்தல், இந்திய கணிதவியலார் மற்றும் அவர்களது புத்தகங்கள், வெளிநாட்டு கணிதவியலாரின் பங்குகள் மற்றும் அவர்களது புத்தகங்கள், பாடக்குறிப்பு,  கற்பித்தல் துணைக்கருவிகள்,  நவீன உளவியல் அறிஞர்களின்  கூற்றுகள் மற்றும் தேற்றங்கள்-
  • எடுத்துக்காட்டாக பியாஜே,  மாஸ்லோ, கேக்னி ஆகியோரது கூற்றுகள், தொடக்கநிலை மற்றும்  நடுநிலை வகுப்புகளில் கணிதம் கற்பித்தலின் குறிக்கோள்கள், கற்பிக்கும் முறைகள் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள், புதுவிதச்சோதனை முறைகள் ஆகியவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும்.

 

  • எண்ணியல்
  • அடுக்குக்குறி விதிகள்,
  • BODMAS  விதிகள்,
  • மீ.பொ.வ. மற்றும் மீ.சி.ம.,
  • பின்னங்கள்,
  • வர்க்க மூலம் மற்றும் கணமூலம்
  • , இயற்கணிதம்
  • , விகிதம்,
  • விகித சமம்,
  • நேர்விகிதம்,
  • எதிர்விகிதம்,
  • மெட்ரிக் அளவைகள்,
  • வாழ்வியல் கணிதம்,
  • தனிவட்டி,
  • கூட்டுவட்டி,
  • அளவைகள்,
  • நாட்காட்டி,
  • கடிகாரம்,
  • வடிவியல்,
  • மையப்போக்கு அளவைகள் -சராசரி, இடைநிலை, அளவு, முகடு மற்றும் வீச்சு,
  • பரப்பளவு மற்றும் சுற்றளவில் ஏற்படும் மாற்ற சதவீதங்கள்,
  • ஆயத்தொலை வடிவியல்- இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
  • வரைபடங்கள், நிகழ்தகவு ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • போட்டித்தேர்வு வினாக்கள் தொகுப்பு உள்ள QUANTITATIVE APTITUDE  புத்தகங்கள் மூலமாக மேற்கண்ட பாடப்பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களை தயார்செய்து கொண்டால் கணிதப் பாடப் பகுதியில் மதிப்பெண்களையும்  கண்டிப்பாக பெறமுடியும்,
  • மேலும்QUANTITATIVE APTITUDE  பகுதிக்கு தயாரிக்கப்பட்ட வினா வங்கிகளையும் பயன்படுத்தலாம். வினாத்தாள் வடிவமைப்பு வினா வகைகள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு, நாம் முழுமதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.”

 


TAMIL VIDEOS



MATHS VIDEOS



Online Test



DAILY CURRENT AFFAIRS



MONTHLY CURRENT AFFAIRS



EXAM STUDY MATERIALS



GOVERNMENT EXAM

 

 

 

 

 

 

 

 

The post அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்கள் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.

Source: storiesintamil.in

  • TAGS
  • Exam Tips
SHARE
Facebook
Twitter
Previous articleஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
Next articleமார்க் குறைந்தாலும் மார்க்கமுண்டு விரிந்திருக்கும் கல்வி வாய்ப்புகள்
goa

Leave a Reply