2016 ஏப்ரல் மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2016 April Madha Rasipalan

2016 ஏப்ரல் மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2016 April Madha Rasipalan

ஏப்ரல் மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

1எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே! இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் மூலம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.

சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும்,  மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை  கூடும்.

கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. உற்சாகமாக இருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு நல்ல பெயர் ஏற்படும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

அசுபதி:

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை:

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24 – 25 – 26

அதிர்ஷ்ட தினங்கள்: 9 – 10 – 11

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு

தேய்பிறை: சூரியன், சுக்கிரன், குரு

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

2எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய ரிஷப ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரனுடன் புதன் சேருவது மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால்  நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

கார்த்திகை:

இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகினி:

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1 – 27 – 28

அதிர்ஷ்ட தினங்கள்: 12 – 13

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சுக்ரன், குரு

தேய்பிறை: சூரியன், சுக்ரன், குரு

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

3அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும்  மிதுன ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி புதன் சஞ்சாரம் மூலம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களி டம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராகு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்:  புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 2 – 3 – 29 – 30

அதிர்ஷ்ட தினங்கள்: 14 – 15 – 16 – 17

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சந்திரன், புதன், சுக்ரன்

தேய்பிறை: புதன், குரு

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

4எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே இந்த மாதம் தனாதிபதி சூரியன் மூலம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள்  தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர்பூசம்:

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூசம்:

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

ஆயில்யம்:

இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 4 – 5

அதிர்ஷ்ட தினங்கள்: 18 – 19 – 20

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சந்திரன், குரு

தேய்பிறை: சந்திரன், புதன், சுக்ரன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

5பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் சிம்மராசியினரே உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்க்கும். இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.

சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.

கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  வீண்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மகம்:

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பூரம்:

இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம்:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6 – 7

அதிர்ஷ்ட தினங்கள்: 21 – 22

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், குரு

தேய்பிறை: சூரியன், செவ்வாய், குரு

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

6வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை  அனுபவமாக  எடுத்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே!  இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். தொல்லைகள் தீரும்.  வீண்கவலைகள்  ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.  எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள்  வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு  செயல்படுவதை  தவிர்ப்பது நல்லது.  மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன்  அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

உத்திரம்:

இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவலகள் வந்து சேரும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

சித்திரை:

இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8 – 9

அதிர்ஷ்ட தினங்கள்: 23 – 24

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சந்திரன், சுக்ரன், குரு

தேய்பிறை: புதன், சுக்ரன்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

7வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், தயங்காத துலா ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன்  சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும்.

அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவு படுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.  உத்தியோகத்தில் இருப்பவர் கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டு வீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

சித்திரை:

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

ஸ்வாதி:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

விசாகம்:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 10 – 11

அதிர்ஷ்ட தினங்கள்: 25 – 26

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: புதன், குரு, சுக்ரன்

தேய்பிறை: சுக்ரன், குரு

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

8விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசியினரே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  ராதியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும்.  அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.  எதிர்ப்புகள் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

விசாகம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

அனுஷம்:

இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

கேட்டை:

இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12 – 13 -14

அதிர்ஷ்ட தினங்கள்: 27 – 28 – 29

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு

தேய்பிறை: புதன், சுக்ரன்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

9திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் தனுசு ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசியாதிபதி குருவின் நட்பு வீட்டின் சஞ்சாரம் பலவித நற்பலன்களை அளிக்கும்.

சூரியன் சஞ்சாரம் துணிச்சலாக எதிலும் ஈடுபடச் செய்யும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.

மூலம்:

இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பூராடம்:

இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

உத்திராடம்:

இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15 – 16

அதிர்ஷ்ட தினங்கள்: 1 – 2

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு

தேய்பிறை: சந்திரன், சுக்ரன், குரு

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

10பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மகர ராசியினரே  இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தனஸ்தானத்தின் குரு பார்வையால் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும்.

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

உத்திராடம்:

இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

திருவோணம்:

இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

அவிட்டம்:

இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 17 – 18

அதிர்ஷ்ட தினங்கள்: 2 – 3

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சந்திரன், செவ்வாய், சனி

தேய்பிறை: குரு, சுக்ரன்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

11வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்பராசியினரே இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியில் இருக்கும் கேதுவால் திடீர் மனக்குழப்பம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

அவிட்டம்:

இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

சதயம்:

இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

பூரட்டாதி:

இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

சந்திராஷ்டம தினங்கள்: 19 -20 – 21

அதிர்ஷ்ட தினங்கள்: 4 – 5 – 6

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், சுக்ரன், சனி

தேய்பிறை: குரு, சுக்ரன்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

12எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் மீன ராசியினரே இந்த மாதம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.

கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பூரட்டாதி:

இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

ரேவதி:

இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22 – 23

அதிர்ஷ்ட தினங்கள்: 7 – 8

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: சூரியன், குரு, சுக்ரன்

தேய்பிறை: புதன், குரு, சுக்ரன்

Posted on Categories English Month AstrologyTags Angila Madha Rasipalan, Angila Rasipalan, Leave a comment on 2016 ஏப்ரல் மாத ராசிபலன் | Angila Madha Rasipalan | 2016 April Madha Rasipalan
இந்த வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். நிர்வாகத் திறமை கூடும். முக்கியமானவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.

உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பொருளாதாரத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். தம்பதிகளிடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் சந்திரன், சனியுடன் கூடி 8-ல் உலவும் நிலை அமைவதால் சுகம் குறையும். தாய் நலம் கவனிக்க வேண்டிவரும். நிம்மதி குறையும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. ஜலம் நிறைந்துள்ள இடங்களிலும் வழுக்கும் இடங்களிலும் செல்லும்போது பாதுகாப்பு தேவை. தியானம், யோகாவில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: ராகு, குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் செவ்வாயும், 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மக்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும், ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பட்டங்களும் கிடைக்கும். நண்பர்கள் உடனிருப்பார்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மந்திர சித்தி சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறைகளில் வருவாய் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தெற்கு. வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.பொன் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பயணத்தின் மூலம் காரியம் நிறைவேறும். புதியவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 4-ல் குருவும், 5-ல் செவ்வாயும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சனி பலத்தால் உழைப்பு வீண்போகாது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீரான வளர்ச்சி தெரியவரும். 7-ல் புதனும் சுக்கிரனும் இருப்பதால் தம்பதியினரிடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் விழிப்பு தேவை. தண்டனை, அபராதம் நேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், கறுப்பு.

எண்கள்: 4, 8.

பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் சொல்வதும் கேட்பதும் நல்லது. முருகனை வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே!

கோசாரப்படி பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக உலவாததால் குடும்ப நலம் பாதிக்கும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை. பொய் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் தொல்லை அதிகமாகும். செய்தொழிலில் கவனம் தேவை.

புதிய துறைகளில் ஈடுபட இந்த நேரம் சிறப்பானதாகாது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை,சிற்பம், ஓவியம், தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தம்பதியினரிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைபடும். ஜாதகத்தில் நல்ல யோக பலம் உள்ள தசை, புக்தி நடப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அதிர்ஷ்டமான தேதி: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசை: வடக்கு.

நிறங்கள்: பச்சை. ரோஜா நிறம்.

எண்: 5.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் செவ்வாயும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நல்லவர்கள் உதவி புரிவார்கள். கொடுத்த வாக்கு காப்பாற்றப்படும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வப் பணிகள் கைகூடும். சாது தரிசனம் கிடைக்கும்.

இயந்திரங்கள், எரிபொருள், மின் சாதனங்கள், வெடிபொருட்கள், கட்டடப் பொருட்கள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். அலைச்சல் வீண்போகாது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பரம்பரையாகச் செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகத் திறமையாலும் செயல் திறமையாலும் சாதனை பல ஆற்றுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வான்நீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 6..9.

பரிகாரம்: நாகரை வழிபடவும். ஹனுமன் சாலீஸா படிப்பது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் கேதுவும் உலவுவதால் நல்ல நண்பர்கள் அமைவார்கள். உறவினர்களால் நலம் உண்டு. நிலபுலங்கள் லாபம் தரும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நிலை உயரும். மாணவர்கள் தங்கள் நிலையில் வளர்ச்சி காண்பர். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும்.

உடன் பணிபுரிபவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புடன் இருக்கவும். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். தம்பதிகளுக்குள் உறவு நிலை சீராகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உள்ளவர்கள் தெளிவான பாதையைக் காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிக்ள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்க்கையையும், முருகனையும் வழிபடுவது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே!

சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. சிறு விபத்துக்கு வாய்ப்புண்டு. எச்சரிக்கை தேவை.

குழந்தைகள் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். தவறான தொடர்பை விட்டு விலகவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: குரு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் பணவரவு கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும்.

செய்தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் உண்டாகும். இடமாற்றமும், நிலை மாற்றமும் உண்டு. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். நிலபுலங்கள் விஷயத்தில் விழிப்புடன் ஈடுபடவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், மின் சாதனங்கள், செந்நிறப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

கலைத் துறையினருக்குச் செழிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வாரப் பின்பகுதியில் மனஅமைதி குறையும். வீண் செலவுகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. சிலர், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டிவரும். தந்தைநலனில் அக்கறை தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். பக்குவம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7. 9.

பரிகாரம்: விரயச் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசநாதன் சனி 11-ல் இருப்பது விசேடமாகும். செவ்வாய், குரு, சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

எடுத்த காரியங்கள் நிறைவேறும். சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வளர்ச்சி உண்டு. சமுதாய நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தம்பதியர் உறவு நிலை சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்களால் நலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. வீண் வம்பு வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: துர்க்கையையும், விநாயகரையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே!

புதன், சுக்கிரன், சனி ஆகியோர அனுகூலமாக உலவுவதால் வியாபார நுணுக்கம் தெரியவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, ஆதயமோ கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். குழந்தைகளால் செலவும் மன அமைதிக் குறைவும் உண்டாகும். அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: சூரியனையும் நாகரையும் வழிபடுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெற சந்தர்ப்பம் உருவாகும்.

அரசுப் பணியாளர்களது நிலை உயரும். விஞ்ஞானிகளும் ஆரய்ச்சியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும். எரிபொட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், இயந்திரங்கள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: திருமுருகனை வழிபடவும். கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

இந்த வார ராசிபலன் 18-12-2015 முதல் 24-12-2015 | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 18-12-2015 முதல் 24-12-2015 | Weekly astrology forecast

-நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி.

மேஷம்:

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுகிறார். குரு 5-ல் இருப்பது விசேடமாகும். 6-ல் உள்ள ராகுவும் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும உயரும் நேரமிது. உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். துணிச்சலா அ காரியங்களில் ஈடுபாடு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். முக்கியமான எண்ணங்கள் வாரப்பின்பகுதியில் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். புதிய ஆடைல் அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்களால் நலம் உண்டாகும்.

எதிர்ப்புக்கள் விலகும். 8-ல் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். வீண் பழி சுமத்தப்பட நேரலாம். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்புக்குரிய பயன் கிடைப்பது அரிதாகுன்ம். வேலையாட்களால் சங்கடங்கள் சூழும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 21, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு.. . 

எண்கள்: 3, 4, 9.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவதால் ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் கொண்டுவரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும்.

ஜோதிடர்களது நிலை உயரும். எலெக் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவுக்கு உதவி புரிவார்கள். எதிர்பாராத சுபச் செலவுகள் வந்து சேரும். இடமாற்றம் உண்டாகும். வாரப்பின்பகுதியில் பண வரவு சற்று கூடும். மக்களாலும், பெற்றோராலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மருத்துவச் செலவுகள் அதிகமாகும். கெட்ட எண்ணங்களுக்கும், கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது. அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மேலதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொண்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தலை, வயிறு சம்பந்ஹமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதி:  டிச20, 23. ம்பர்

திசைகள்: வடக்கு, வடமேற்கு ..

எண்கள்: 5, 7.

மிதுனம்:

உங்கள் ராசிக்கு  5-ல் சுக்கிரன் உலவுவது விசேடமாகும். சனி, கேது ஆகியோரும் சாதகமாக உலவுவதால் மன ம்கிழ்ச்சி கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பண நடமாட்டம் அதிகமாகும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கலைஞர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். பெண்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பெண் குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும்.

அறிவாற்றல் நிறைந்திருக்கும். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். பங்குவர்த்த்கம் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் சிறு சங்கடம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. நிலபுலங்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவைப்படும். நண்பர்களே விரோதிகளாவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும்.

திர்ஷ்டமான தேதி டிசம்பர் 20, 21.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு

எண்கள்: 6, 7, 8. 

கடகம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாயும் ராகு ஆகியோரும் 4-ல் சுக்கிரனும்  6-ல் சூரியனும் புதனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். எடுத்த காரியங்களைத் திறம்பட நிறைவேற்றுவீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய சொத்துக்கள் சேரும்.

சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் இப்ப்போது இனிது நிறைவேறும். பண நடமாட்டம் திருப்தி தரும். பிரச்னைகள் குறையும். ப் அயணத்தால் அனுகூலம் ஏற்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அதிகம் நலம் ஏற்படும்.

மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். வார முன்பகுதியில் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வாரப்பின்பகுதி சிறப்பாக அமையும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாருவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். மக்களால் செலவுகள் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:  டிசம்பர் 20, 21, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..தெற்கு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

சிம்மம்:

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பாகும். சூரியஞ்ம் புதனும் 5-ல் இருந்தாலும் கூட குருவின் பார்வையைப் பெறுவதால் ஓரளவு நலம் புரிவார்கள். வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். மனத்தில் ஏதேனும் பயம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை, சச்சஎரவுகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை.

எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உருவாகும். காரியத்தில் அரும்பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். மக்கள் நலம் சீராகும். வாழ்க்கைத்துணைவரால் ஓரளவு நலம் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள்,  வாகனங்கள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றின் பக்கம் ந்செருங்கும்போது பாதுகாப்புத் தேவை. 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவது விசேடமாகும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டடு, இசை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 21, 23.

திசைகள்: தென்கிழக்கு..வடக்கு, கிழக்கு. .

எண்கள்: 1, 5, 6..

கன்னி:

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சனியும் 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும். குடும்ப நலம் திருப்தி தரும். பண நடமாட்டம் கூடும். எதிர்பாராத பபொருட்சேர்க்கைக்கும் இடமுண்டு. பேச்சில் இனிமை கூடும். வசீகரச் சக்தி அதிகரிக்கும்.

பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களாலும், உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். வாரப் பின்பகுதியில் தெய்வப்பணிகளுலும், தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பெரியோரையும் அந்தணர்களையும் மதிப்பீர்கள். யாக, ஹோம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சூரியன், செவ்வாய், குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சில பிரச்னைகள் ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுஜ்ரியும்போதும் பாதுகாப்புத் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள் டிச. 18, 23.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு. .

எண்கள்: 5, 6, 8.

துலாம்: 

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே வலுத்திருருப்பது விசேடமாகும். சூரியன், குரு, கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வானுகூலமும் உண்டாகும்.

கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், அரசுப்பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் பெறுவதற்குரிய சந்தர்ப்பம் கனிந்துவரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரிகள், இயந்திரப்பணியாளர்கள், போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் சில பிரச்னைகள் ஏற்படும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. எதிலும் பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 20, 21.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 7.

விருச்சிகம்: 

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 11-ல் ராகுவுடன் இருக்கிறார். புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வேற்று மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும்.

வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலும், வர்த்தகமும் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புக்கள் கைக்கு வந்து சேரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பேச்சில் திறமை பளிச்சிடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஜன்மத்தில் சனி இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும். 5-ல் கேதுவும், 10-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். 23-ஆம் தேதி  முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். விழிப்புடன் இருக்கவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 20, 21, 23.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு. 

எண்கள்: 4, 5, 6, 9.

தனுசு: 

உங்கள் ராசிநாதன் குரு 9-ல் பலமுடன் சஞ்சரிப்பதாலும் செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் ஏற்படும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மக்களால் ஓரிரு எண்ணங்களும் நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள்.

வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு உபதேசம் பெறச் சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். உயர் பதவி, பட்டங்கள் தேடிவரும். கலைஞர்களது நிலை உயரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 4-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். 23-ஆம் தேதி  முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். பங்குவர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் பெருகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 20, 21, 23.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு…

எண்கள்: 3, 4, 6, 9. 

மகரம்: 

உங்கள் ராசி அதிபதி சனி 11-ல் இருக்கிறார். சுக்கிரன் 10-ல் இருந்தாலும் நலம் புரிவார். கேது 3-ல் இருப்பது சிறப்வ்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் மூலம் வருவாய் கிடைத்துவரும். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். உழைப்பு வீண் போகாது.

தொழிலாளர்களது நிலைமையில் வளர்ச்சி தெரியவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பால் அதிகம் அனுகூலம் இராது. அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும்.

அரசு அபராதம் கட்ட நேரலாம். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் சோதனைகள் சூழும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 23-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். எடுத்த காரியங்கள் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: டிச. 20, 21, 23.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 6, 7, 8..

கும்பம்: 

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், குரு, சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். மன மகிழ்ச்சி பெருகும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும்.

அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் கொண்டுவரும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உழைப்பு வீண்போகாது. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
23-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறி, சுக்கிரனுடன் கூடுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். மதாபிமானம் கூடும். மதச் சடங்குகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டத்தேதி: டிச. 20, 21, 23.

திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு. . .

எண்கள்: 1, 3, 5, 6, 8..

மீனம்:

சுக்கிரன் 8-ல் தன் சொந்த வீட்டில் உலவுவது சிறப்பாகும். 10-ல் சூரியனும் புதனும் இணைந்திருப்பதும் நல்லது. இதனால் உங்கள் அறிவாற்றல், தோற்றப்பொலிவு, தொழில் நுட்பத்திறமை எல்லாம் வெளிப்படும். குடும்பநலம் சீராகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். தந்திஅயால் அனுகூலம் ஏற்படும். குரு 6-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

23-ஆம் தேதி  முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். அவர்களது  முன்னேற்றம் பாதிக்கும். தொழில் சார்ந்த வழக்கு, வியாஜ்ஜியங்களில் சிலர் ஈடுபட வேண்டிவரும். கடன் தொல்லை கூடும். சிக்கனமாக இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 20, 21, 23.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6.

Margali Madha Rasipalan | மார்கழி மாத ராசிபலன்கள் 17-12-2015 முதல் 14-01-2016 வரை

Margali Madha Rasipalan | மார்கழி மாத ராசிபலன்கள் 17-12-2015 முதல் 14-01-2016 வரை

மேஷம்

செயல்பாடுகளில் வேகம் கூடும். திட்டமிட்டு நிலுவையில் இருந்த காரியங்களை முடிக்க நேரம் சாதகமாக அமையும். எடுத்த செயல்களில், நினைத்த காரியங்களில் வெற்றி உறுதியாகும். திட்டங்களை நிறைவேற்றும் வரை ஓய்வில்லாமல் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். வரவு சிறக்கும். சேமிப்பும் உயரும். பேச்சால் மதிப்பு உயரும். அதே நேரம் மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவர். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை குறைக்கும். அடுத்த வீட்டாரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. மாணவர்கள் செய்முறைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களது செயல்களில் முன்னோர்களின் சாயல் தெரியும். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு அவரது பணிகளுக்கும் பக்கபலமாய்த் துணையிருப்பீர்கள். தொழிலில் நெடுநாளைய திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். சுயதொழிலில் அதிகாரம் நிறைந்த பேச்சுகள் உங்கள் வெற்றிக்கு வலிமை சேர்க்கும். முன்னேற்றம் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 6, 7

பரிகாரம்: பழனி ஆண்டவனை வணங்கி வாருங்கள்

ரிஷபம்

நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் இழுபறி தரும். முக்கியமான பணிகளை உடனடியாக முடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக உயர்வடையும். பேச்சில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் கருத்துகள் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது அவசியம். வாகனங்களால் ஆதாயம் கிட்டும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டு படிப்பதில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் மனநிலையை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். கூடுதல் அலைச்சலால் உடல்நல பாதிப்பை தடுக்க வேளைக்கு உணவருந்துவது அவசியம். வாழ்க்கைத்துணையோடு கலந்தாலோசிக்கும் நேரம் குறையும். குடும்பப் பெரியோர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலக பணியை முடிக்க இயலாமல் தடுமாற நேரிடும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 8, 9

பரிகாரம்: வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் தரிசனம் மன நிம்மதி தரும்.

மிதுனம்

மனமகிழ்ச்சி கூடும். நற்பலன்கள் ஏற்படும். நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். முக்கியமான பணிகளை உடனடியாக செய்துமுடிப்பது அவசியம். உறவினர்கள் வழியில் இடைஞ்சல்கள் வரும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். பெற்றோர் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. கவுரவ செலவுகள் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவப் போய் தர்மசங்கடமான சூழல் ஏற்படும். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து பாதிப்பு ஏற்படுத்தும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது உத்தமம். உறவினர்களிடம் இருந்து சற்று விலகியிருப்பது நன்மை தரும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் அவசியம். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. வாகன பராமரிப்பு செலவு உயரும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மனவருத்தம் தரும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் அலைச்சல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில போராட்டமான சூழல் நிலவும். எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 10, 11, 12

பரிகாரம்: காளிகாம்பாள் வழிபாடு கவலையைத் தீர்க்கும்.

கடகம்

எளிதில் முடிய வேண்டிய பணிகளுக்கும் கூடுதல் அலைச்சல் இருக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகளும் விரைவாக நடந்தேறும். வெளிநாட்டில் ேவலை கிடைக்குமா என்று ஏங்கி தவித்தவர்களுக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற வகையில் பணவரவும் தொடரும். பேச்சில் அன்போடு அதிகாரத்தையும் கலந்து வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். உறவினர் வழியில் வரும் பிரச்னைகளை நிதானத்தோடு அணுகுவது அவசியம். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்குப் பெருமை தேடித் தரும். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அனுசரணையான அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதிற்குள் வந்து போகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். தொழில்முறையில் அயராத உழைப்பால் சிறப்பான தனலாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்புயரும். காரியவெற்றி தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 17, 18, ஜனவரி 13, 14

பரிகாரம்: மார்கழி அமாவாசை நாளன்று அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.

சிம்மம்

திட்டமிட்ட பணிகள் எளிதாகும். உங்கள் செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். இக்கட்டான சூழலில் உங்களது விவேகமான செயல்பாடுகள் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கும். திறமையான பேச்சால் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதே நேரத்தில் முன்பின் தெரியாத பெண்களால் பிரச்னைகள் உருவாகலாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறி இருக்கும். அந்நிய மனிதர்களின் தலையீடு குடும்ப பிரச்னைகளைப் பெரிதாக்கும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமை கூடும். ஆயினும் வீண் வம்பு விவகாரங்கள் வரும் நேரம் இது என்பதால் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் அலட்சியம் காட்டாது அதிக கவனம் செலுத்துவது அவசியம். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். வீண்வாதத்தால் வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான நேரம். சுயதொழில் செய்வோருக்கு தனலாபம் கிட்டும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 19, 20

பரிகாரம்: பிரதி செவ்வாய், சனிகிழமைகளில் யோகநரசிம்மரை வணங்கி வாருங்கள்.

கன்னி

அற்புதமான பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள். எதிர்காலம் உங்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. மன உறுதி அதிகரிக்கும். வாழ்க்கை தரம் உயர்வடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் கருத்துகள் இருக்கும். எதிலும் உங்களுக்கு சரியென்று பட்டதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி அளித்தாலும் சுபவிரயமும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். உடன்பிறந்தோருடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். மாணவர்களின் எழுத்து வேகம் முன்னேற்றம் காணும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் மன நிலையை புரிந்துகொண்டு உங்கள் பணிகளுக்கு துணை நிற்பார். பொருளிழப்பை தடுக்க பண விவகாரங்களை கையாளும்போது அதிக கவனம் தேவை. அதிகம் பேசாது உங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நல்லது. சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 21, 22

பரிகாரம்: புதுவருடப்பிறப்பு நாளன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.

துலாம்

மனோதைரியம் கூடும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் அசாத்தியமான மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெற துவங்கும். கன்னிப்பெண்களுக்கு திருமண யோகம் கூடிவரும். நல்ல காரியங்களில் அடுத்தவர்கள் பேச்சை பொருட்படுத்தாது மனதிற்கு சரியென்று பட்டதைத் தயங்காமல் செய்யுங்கள். காரிய வெற்றி சாத்தியமாகும். வேகத்தை விடுத்து விவேகத்துடன் செயல்படுவது அவசியம். வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருடன் மனஸ்தாபம் உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் செயலிழந்து சங்கடம் தரும். அண்டை வீட்டுக்காரர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். எதிர்பாராத திடீர் பிரயாணம் இருக்கும். வாகனங்களால் ஆதாயம் கிட்டும். பிள்ளைகளின் விவேகம் நிறைந்த செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சற்றே சிரமப்பட நேரிடும். தான, தரும காரியங்களில் அளவோடு செலவிடுவது நல்லது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்பான பணிகளால் முக்கியத்துவம் பெறுவர். சுயதொழில் செய்வோர் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான நேரம் இது. தன்னம்பிக்கையால் வெற்றி காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 23, 24

பரிகாரம்: மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம் கூடும்.

விருச்சிகம்

சுகமான சூழல் உருவாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் பிரயாணம் இருக்கும். சிந்தனை திறன் கூடும். செயல்களில் விவேகம் வெளிப்படும். உங்களை அறிந்தவர்களும், நண்பர்களும் தங்கள் பிரச்னைக்கு ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி கிட்டும். பணவரவு சிறப்பாகி சேமிப்பு உயர்வடையும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். இருப்பினும் எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தோருக்கு உதவி செய்வதில் திருப்தி கிடைக்கும். அண்டை, அயலாரின் துணையோடு பொதுப்பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள். மாணவர்கள் வகுப்பில் முதலிடம் பிடிப்பர். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் சிறப்பான முன்னேற்றம் காணும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணைபுரியும். ஆன்மிகத்தின் பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியோடு நல்லுறவு நீடிக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 25, 26

பரிகாரம்: தினசரி ஆண்டாள் பாசுரங்களை படித்து வரலாம். சனிக்கிழமைகளில் பெருமாள் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

தனுசு

திட்டமிட்டு, விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி எளிதாகும். நிலுவையில் இருந்த காரியங்கள், கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக உள்ளது. தங்க, வெள்ளி பொருட்கள் சேரும். கடன் சுமைகள் குறைந்து சேமிப்புகள் உயர்வடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். சொல்ல நினைப்பதை நகைச்சுவை கலந்து கறாராகச் சொல்லிவிடுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். இருந்த இடத்தில் இருந்தே சரியான நபர்களை இயக்கி காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் கலகங்கள் உண்டாகலாம். திருமணக்கனவில் உள்ளவர்களுக்கு யோகம் கூடிவரும். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. வாழ்க்கைத்துணை உங்களின் வேகமான செயல்களுக்கு பக்கபலமாய்த் துணைநிற்பார். அவரது வார்த்தைகள் உங்கள் வெற்றிக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். பூர்வீக சொத்துகளினால் ஆதாயம் கிட்டும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. சுயதொழில் செய்வோருக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு காண்பர். வெற்றி தரும் மாதமிது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 27, 28

பரிகாரம்: ஆருத்ரா தரிசன நாளில்(டிச.26) அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.

மகரம்

சங்கடத்துடன் துவங்கினாலும் சிறப்பான நற்பலன்களைத் தரும். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது உங்களை பொறுத்த வரை உண்மையாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கத் தடுமாறினாலும் உரிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். சேமிப்பு முயற்சிகள் சிரமம் தரும். பேச்சில் வெளிப்படும் கறாரான கருத்துகள் மற்றவர் மனதைப் புண்படுத்தலாம். உடன்பிறந்தோர் பண உதவி கேட்டு உங்களை நாடி வரலாம். அண்டை, அயலாருக்கு உதவபோய் நேரமிழப்போடு தர்மசங்கடத்திற்கும் ஆளாவீர்கள். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் ஆலோசனைகள் பயன்தரும். மாணவர்கள் கடும் உழைப்பினால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அதிக அலைச்சலால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு வாழ்க்கைத்துணை தக்க ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனநிம்மதி காண்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு நற்சிந்தனை தரும். எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழிலில் அலைச்சல் கூடும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 29, 30, 31

பரிகாரம்: வியாழன்தோறும் நவக்கிரக குரு பகவானுக்கு நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.

கும்பம்

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். இருப்பினும் நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக அமைந்து மனவருத்தம் இருக்கும். எனினும் சுற்றியுள்ளோரை மனமகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார சிக்கல் இருக்கும். உங்கள் பணிகளுக்கு உடன்பிறந்தோர் உதவுவர். செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வீண் அலைச்சலை தவிர்த்து உதவிகரமாக இருக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு கூடிவரும். திருமணம், சந்தான பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கழிவறை, குளியலறை போன்ற தண்ணீர் புழங்கும் இடங்களில் நடக்கும்போது அதிக கவனம் தேவை. குதிகால் வலி, பாதத்தில் பித்த வெடிப்புகள் போன்ற பிரச்னைகளால் நடக்க சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டு துணைநிற்பார். கவுரவ செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு இருக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்வோருக்கு அதிக அலைச்சல் இருந்தாலும் அதற்குரிய தனலாபம் உடனுக்குடன் கிட்டும். தடைகளைத் தாண்டி வெற்றி காணவேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 1, 2

பரிகாரம்: ஐஸ்வர்யேஸ்வரருக்கு பூஜை செய்து வாருங்கள்.

மீனம்

சிறப்பான செயல்பாடு வெற்றி தேடித்தரும். அவ்வப்போது குழப்பம், மன சஞ்சலம் இருந்தாலும் காரியவெற்றி சஞ்சலத்தை போக்கும். நண்பர்களின் ஆதரவும், விடாமுயற்சியும் உங்கள் வெற்றிக்குத் துணைநிற்கும். நிதி நிலை உயரத் துவங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் அறிவுரை நிறைந்த கருத்துக்களை நகைச்சுவையோடு வெளிப்படுத்தி நற்பெயர் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழிலில் மிகுந்த பயன் தரும். புதிய நண்பர்களின் இணைவு உங்கள் செயல்திட்டங்களுக்கு உதவியாய் அமையும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலை கண்டு பெருமிதம் கொள்வீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதிற்குள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி எதிர்பாராத பயணம் செய்ய நேரிடும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுயதொழில் செய்வோர் சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நேரம் சாதகமாக இருக்கும். திடீர் பணவரவு உண்டு. விடாமுயற்சியாலும், உண்மையான உழைப்பாலும் வெற்றி காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 3, 4, 5

பரிகாரம்: நாகாபரண சிவபெருமானை வணங்கி வாருங்கள்.

இந்த வார ராசிபலன் 10-12-2015 முதல் 16-12-2015 | Weekly astrology forecast

வார ராசிபலன் 10-12-2015 முதல் 16-12-2015 வரை

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுகிறார். குரு, ராகு, ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் தெய்வானுகூலம் உண்டாகும். சாதுக்கள், மகான்களின் ஆசிகள் கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். எதிர்பாராத பொருட்சேர்க்கையும் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும்.

செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாக பாடுபடுபவர்களுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும். நிலபுலங்களால் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டாகும். வாரப்பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சோதனையானவை. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

வேலையாட்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். கறுப்பு நிறமுள்ளவரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 13, 15, .

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு.. .

‎நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம். .. .

எண்கள்: 3, 4, 9. ‎

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவதால் நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி கான வாய்ப்புக் கூடிவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது.

மக்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக்கொடுத்துப் பழகுவது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கலைஞர்கள், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். வாரப் பின்பகுதியில் ஒரு காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் அளவோடு உதவுவார்கள். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஆராய்ச்சிகளில் ஈடுபாட உண்டாகும்.

கூட்டாகத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை நம்பி முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிச 10, 15, .

திசை: வடமேற்கு, வடக்கு .

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது. ஏழைப் பெண்களுக்கு நல் உதவி செய்யவும்.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் வலுத்திருப்பது விசேடமாகும். சூரியன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். பண வரவு சற்று அதிகரிக்கும். உழைப்பாளர்களுக்குளௌரிய ஊதியம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். 4-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் நிலபுலங்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். குரு பலம் குறைந்திருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பெண்களால் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சீராகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள் டிசம்பர் 10, 13.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, கிழக்க

நிறங்கள்: நீலம், மெரூன், ஆரஞ்ச

எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு குரு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாயும் ராகுவும் 4-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் ஈடேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். மாணவர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். சுகமும் சந்தோஷமும் பெருகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 10, 13. 15.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு,பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பாகும்.இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்ல்து. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பேச்சிலும் செயலிலும் வேகம் கூடாது. குடும்ப நலனில் கவனம் தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். குரு 5, 7, 9-ஆம் இடங்க்ளைப் பார்ப்பதால் மக்கள் நலம் சீராக இருந்துவரும்.

வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உந்தாகும். தொழில் கூட்டாளிகளும், உடன்பணிபுரிபவர்களும் ஓரளவு உதவுவார்கள். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தகவல் தொடர்பு இனங்களால் வருவாய் கிடைத்துவரும். 4-ல் சனி இருப்பதால் உறவினர்களாலும் நண்பர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியக் காண்பார்கள். .

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 10, 13, 15.

திசைகள்: தென்கிழக்கு..வடக்கு.

நிறங்கள்: வான்நீலம், வெண்மை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசி அதிபதி புதன் 4-லும், சுக்கிரன் 2-லும் உலவுவது விசேடமாகும். சூரியன், சனி ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நிர்வாகத்திறமை கூடும். அரசியல்வாதிகளுக்கும் பொது நலப்பணியாளர்களுக்கும் நற்பெயர் கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும்.

மாணவர்களது நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். மக்களால் சுபச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

தந்தையால் அனுகூலம் ஏற்படும். அரசு உதவி கிடைக்கும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிக்ள்: டிசம்பர் 10, 13, 15.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் ஜன்ம ராசியில் வலுத்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் குரு உலவுவதும் சிறப்பாகும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் அளவோடு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களாலும் ஓரளவு நலம் உண்டாகும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வீண்வம்பு அடியோடு கூடாது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 12-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 10, 13, 15. .

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்..

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. திருமுருகனையும், துர்கை அம்மனையும் தொடர்ந்து வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருப்பது விசேடமாகும். புதன் 2-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதும் நல்லது. ராகு 11-ல் உலவுவதும் சிறப்பாகும். உயர் பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். போட்டி, பந்தயம், விளையாட்டு, விநோதம், வழக்கு, வியாஜ்ஜியம் ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். அதனால் அனுகூலமும் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். 5-ல் கேதுவும் 10-ல் குருவும் இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். ஜன்மச் சனியின் காலமிது என்பதால் உழைப்பு அதிகரிக்கவே செய்யும். அதனால் உடல் சோர்வும் உண்டாகும். வாழ்க்கைத்துண நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 10, 13, 15.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: ஏழைகளுக்கும் கால் ஊனமுள்ளவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்வது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி குரு 9-ல் பலம் பெற்றிருக்கிறார். செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் சுபகாரியங்கள் நிகழும். நல்ல எண்ணங்கள் மனத்தில் உருவாகும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். மன மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். நல்ல தகவல் வந்துசேரும்.

செயலில் வேகம் பிறக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். எதிரிகள் பயந்து நடுங்குவார்கள். வழக்கிலும், போட்டிகளிலும், விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். மக்களால் நலம் பெருகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

12-ல் சனியும் சூரியனும் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் வார முன்பகுதியில் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 13, 15.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம். பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: சனிக்கும் சூரியனுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது. தந்தை வழி உறவினர்களுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 10-ல் சுக்கிரனும், 11-ல் சூரியன், புதன், சனி ஆகியோரும் உலவுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் பெறலாம். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். அரசாங்கத்த்தாரால் அனுகூலம் உண்டாகும்.

நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். பழைய நண்பர்களது சந்திப்பு நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உருவாகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். 12-ல் புதன் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. மக்களால் மன வருத்தம் உண்டாகும்.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். சுபகாரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியாகளுக்கும் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்:, டிசம்பர் 10, 15.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: புதன், குரு ஆகியோருக்கு அர்ச்சனை செய்து வழிபடடுவது நல்லது. பச்சைப் பயிறு தானம் செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 10-ல் உலவுகிறார். சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். உற்சாகம் பெருகும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். அரசு உதவி கிடைக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரம் செழிக்கும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே களிப்புறவு கூடும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் யோசித்து, நிதானமாக ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 10, 13.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 8 .

பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மக்களால் அளவோடு அனுகூலம் ஏற்படும். கற்பனை ஆற்றல் வெளிப்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞஞானம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குரு பலம் குறைந்திருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். கெட்டவர்களின் சகவாசம் கூடாது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 10, 13, 15. .

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை, வான் நீலம்.

எண்கள்: 2, 5, 6.

பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது. வேதம் பயில்பவர்களுக்கு உதவி செய்யவும்.

இந்த வார ராசிபலன் | Weekly astrology forecast

வார ராசிபலன் 03-12-2015 முதல் 09-12-2015 வரை

மேஷ ராசி வாசகர்களே!

ராசிநாதன் செவ்வாய் 6-ல் இருப்பது விசேஷமாகும். குரு பலமும் இருப்பதால் மனதுக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு வார முன் பகுதியில் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணத்தால் நலமுண்டாகும்.

கணவன்-மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். புதிய நிலபுலன்கள் சேரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையும் நிகழும். 8-ல் சூரியன், சனி இருப்பது சிறப்பாகாது. கடுமையாக உழைக்க வேண்டிவரும். அரசாங்கம் மூலம் சில பிரச்சினைகள் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு

‎நிறங்கள்: பொன்நிறம், சிவப்பு, புகை நிறம், வெண்மை.

எண்கள்: 2, 3, 4, 9. ‎

பரிகாரம்: சனிப் பீரிதி செய்துகொள்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிப்பது சிறப்பாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அன்றாடப் பணிகளில் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள், உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். 5-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. அவர்களது நடத்தையில் கவனம் செலுத்திவருவது நல்லது. சுக்கிரன் 6-ம் இடத்திலும், சூரியன் சனி ஆகியோர் 7-ம் இடத்திலும் இருப்பதால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும்.

பக்குவமாகச் சமாளித்துவருவது நல்லது. கேளிக்கை உல்லாசங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். தீயவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. மாணவர்களது நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடக்கு, வடமேற்கு

‎நிறங்கள்: மெரூன், பச்சை

எண்கள்: 5, 7

பரிகாரம்: சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது நல்லது. துர்க்கையையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் பலமுடன் சஞ்சரிக்கிறார். இதனால் மன உற்சாகம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவ்றறின் சேர்க்கை நிகழும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறப்பாக இருந்துவரும். நல்ல ஒரு தகவல் வந்துசேரும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள்.

4-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். சிறு விபத்துகள் உண்டாக நேரலாம். சூரியன், சனி ஆகியோர் 6-ம் இடத்தில் இருப்பதால் அரசு உதவி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு வந்துசேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு

‎நிறங்கள்: இளநீலம், வெண்மை

எண்கள்: 1, 6, 7, 8

பரிகாரம்: செவ்வாய்க்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாய், ராகு ஆகியோரும் 4-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் சஞ்சரிப்பது விசேஷமாகும். வார ஆரம்பத்தில் பொருள் வரவு அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து உபசாரங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதில் வெற்றியும் கிடைக்கும். பயணத்தின் மூலம் ஓர் எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். 5-ல் சூரியனும் சனியும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் வாரமிது. பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு

‎நிறங்கள்: பொன்னிறம், சிவப்பு, வெண்மை

எண்கள்: 3, 4, 6, 9

பரிகாரம்: சனிப் பிரீதி செய்துகொள்ளவும்.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சுக்கிரன் உலவுவது சிறப்பானதாகும். இதர கிரகங்களும் சஞ்சாரம் விசேஷமாக இல்லை. சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக்கொள்வது அவசியம். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போது கவனத்துடன் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம்.

குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்பு தேவை. சினிமா, நாடகம், நாட்டியம் போன்ற கலைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். வார நடுப்பகுதியில் நல்லதொரு தகவல் வந்துசேரும். வாரக் கடைசியில் அலைச்சல் சற்று அதிகமாகும். நண்பர்கள், உறவினர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசை: தென்கிழக்கு

‎நிறங்கள்: இளநீலம், வெண்மை | எண்கள்: 6

பரிகாரம்: செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி புதன் 4-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது விசேஷமாகும். சூரியன், சுக்கிரன், சனி ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சுபகாரிய செலவுகளைச் செய்வீர்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களுக்குச் சென்று வருவீர்கள். பேச்சில் இனிமை தவழும்.

முக வசீகரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். புதிய துறைகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். பொது நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசை: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு

‎நிறங்கள்: நீலம், பச்சை, கருப்பு

எண்கள்: 5, 6, 8

பரிகாரம்: துர்க்கையையும் முருகனையும் வழிபடவும்.

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ராசியிலேயே பலமுடன் சஞ்சரிக்கிறார். குரு, கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவுநிலை திருப்திகரமாக இருந்துவரும்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு

‎நிறங்கள்: பொன்னிறம், இளநீலம், மெரூன்

எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: முருகனையும் துர்க்கையையும் வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது விசேஷமாகும். புதன் 2-ல் அமர்ந்து குரு பார்வையைப் பெறுகிறார். சுக்கிர பலம் கூடியிருக்கிறது. இதனால் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகளின் கரம் வலுக் குறையும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். சிலருக்கு வெற்றியும் கிடைக்கும்.

பொருளாதார நிலை அதிகரிக்கும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ள செலவு செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களால் நலம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பயணம் சார்ந்த இனங்களால் வருவாய் அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினியர்களுக்கும் சுபிட்சம் கூடும். வாரப் பின்பகுதியில் அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு

‎நிறங்கள்: சிவப்பு, பச்சை, புகை நிறம்

எண்கள்: 4, 5, 9

பரிகாரம்: ஜென்ம சனிக்கு பிரிதீ பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் குரு 9-ல் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்ப்பது விசேஷமாகும். செவ்வாய், ராகு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கூடிவரும்.

எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பெற்றோரால் மக்களுக்கு அனுகூலம் ஏற்படும். 4-ல் கேதுவும் 12-ல் சூரியன், சனி ஆகியோரும் உலவுவதால் தாய் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு

‎நிறங்கள்: பொன்னிறம், சிவப்பு, வெண்மை

எண்கள்: 3, 4, 6, 9

பரிகாரம்: விரய சனிக்குப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. பார்வையற்றவர்களுக்கும் கால் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் புகழும் உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். தொலைதூரத் தொடர்பு நலம் தரும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வருவாய் கூடும்.

பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் பொருட்களால் ஆதாயம் அதிகம் கிடைக்கும். அரசாங்கம் மூலம் அனுகூலம் பெற வாய்ப்பு கூடிவரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வந்தால் சரிவு நிலைக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு

‎நிறங்கள்: நீலம், ஆரஞ்சு

எண்கள்: 1, 6, 7, 8

பரிகாரம்: புதன், குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் வலுத்திருக்கிறார். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் விசேஷமாகும். தேக ஆரோக்கியம் சீராக இருந்துவரும். புகழும் மதிப்பும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். தொலைதூரப் பயணம் பயன் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். 8-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தவர்களது நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் சேர்க்கை நிகழும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். நிலபுலன்களின் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 8, 9

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு, வடக்கு

‎நிறங்கள்: பொன்னிறம், நீலம், பச்சை, ஆரஞ்சு

எண்கள்: 1, 3, 5, 6

பரிகாரம்: சர்ப்பசாந்தி செய்து கொள்ளவும், முருகனை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடமுண்டு. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் உங்கள் தொழிலுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவுநிலை சீராகும். கணிதம், எழுத்து, தரகு, பத்திரிகை, கமிஷன் ஏஜென்ஸி போன்ற இனங்களால் வருவாய் அதிகமாகும்.

மாணவர்கள் தங்கள் திறமைக்கு உரிய வளர்ச்சியைக் காண்பார்கள். குருபலம் குறைந்துவிட்டதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவருவது நல்லது. பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. சுபகாரியங்கள் நிகழ ஜாதக பலம் அவசியம் தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்திவருவது நல்லது. எக்காரியத்திலும் அவசரம் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 6, 7

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு

‎நிறங்கள்: பச்சை, இளநீலம்

எண்கள்: 5, 6

பரிகாரம்: குருப் பிரீதி செய்துகொள்ளவும்.

Weekly astrology forecast | இந்த வார ராசிபலன்

மேஷம்:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை 30ம் தேதி ஏழாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அரசு தொழில் சம்பந்தமாக பிரயாணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக பூமியில் இருந்து பணவரவு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 30ம் தேதி ஆறாமிடத்திற்கு மாறுகிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் கிடைக்கும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக கடன் வாங்க்கும் நிலை உருவாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சுகபோகம் அதிகரிக்கும் 30ம் தேதி ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார் வீட்டை அழகு படுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியடையும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வகைகளில் லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். 30ம் தேதி நான்காமிடத்திற்கு மாறுகிறார் வாகன யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் மந்த நிலை உருவாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பணியிட மாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அண்ணன் தம்பி வகையில் பண வரவு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் அமைதி நிலவும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும் 30ம் தேதி மூன்றாம் இடத்திற்கு மாறுகிறார் வெளியூர் பயணம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உருவாகும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பம் அதிகரிக்கும்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும். 30ம் தேதி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் வகையில் பண வரவு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக இயந்திரம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வ வளம் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். 30ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு மாறுகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விவாதத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசித தன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். 30ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்க்கு மாறுகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
27-11-2015 அன்று பகல் 02-50 மணி முதல் 29-11-2015 அன்று இரவு 07-26 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளை பராமரிப்பீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். 30ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கையிருப்பு கரையும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் போட்டி அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
29-11-2015 அன்று இரவு 07-26 மணி முதல் 01-12-2015 அன்று அதிகாலை 04-01 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பங்கு வர்த்தகம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் 30ம் தேதி பத்தாமிடத்திற்கு மாறுகிறார் தொழிலில் மேன்மை நிலை உருவாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்க்களில் வெற்றி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். 01-12-2015 அன்று அதிகாலை 04-01 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஆசிரியர் தொழிலில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்க்கு மாறுகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எடுக்கும் காரியங்கள் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தான தர்மம் செய்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் லாபத்தைத் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் முறை நண்பர்களால் நன்மை உண்டாகும் 30ம் தேதி எட்டாமிடத்திற்க்கு மாறுகிறார் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பகைமை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.