Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
# செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
# செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
# செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
# தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
# விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
# தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
# விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
# தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
# விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
# தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
# விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
# கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
# கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
# தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
# குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி – குளோரோஃபில் – பச்சை நிற நிறமி.
# குளோரோபிளாஸ்ட் பணி – தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
# குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் – ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் – மஞ்சள் நிற நிறமி.
# குரோமோபிளாஸ்ட் பணி – பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
# லியூக்கோபிளாஸ்ட் பணி – தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
# செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
# நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
# மிகவும் நீளமான செல் நரம்புசெல்
# நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
# இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
# விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
# விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
# இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
# எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
# மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.
# பெளர்ணமி எப்போது தோன்றும் – பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.
# புராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் – தியோடோசியஸ்
# சூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன – செவ்வாய், வியாழன்
# விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது – முளைக்குருத்து
# ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது – கேரட்
# ஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ருட்
# தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி – பூக்கள்
# எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து – அசிட்டோதையாமிடின் AZT
# பாரமீசியம் – சீலியோபோரா வகையைச் சேர்ந்தது