Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் – ஜே.இ. பர்கின்ஜி.
# புரோட்டோ என்றால் முதன்மை
# பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
# பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
# சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
# செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு(நியூக்ளியஸ்)
# உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
# உட்கருவில் காணப்படுபவை – உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
# உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
# செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
# மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
# செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) – மைட்டோகாண்ட்ரியா.
# கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
# உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது – கோல்கை உறுப்புகள்.
# உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
# தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
# செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது – எண்டோபிளாச வலை.
# ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
# செல்லின் புரதத்தொழிற்சாலை – ரிபோசோம்கள்
# புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
# லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
# செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
# செல்லின் தற்கொலைப் பைகள் – லைசோசோம்கள்.
# செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது – லைசோசோம்கள்.
# விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை – சென்ட்ரோசோம்
# சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
# சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
# செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
# செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
# வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை – நுண் குமிழ்கள்
# செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் – நுண் குமிழ்கள்.
# தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.