தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று அழைக்கப் படுபவர் யார்
அநுத்தமா
திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் யார்
ஜெக வீரபாண்டியர்
செல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்
ரா.பி. சேதுப்பிள்ளை
திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர் யார்
சி.வை.தாமோதரம்பிள்ளை
செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்ட்து
1903
திருத்தொண்டர் திருவந்தாதி யார் பாடியது
நம்பியாண்டார் நம்பி
சேக்கிழார் இயற்பெயர் என்ன
அருண்மொழித் தேவர்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்
நாதமுனிகள்
திருமழிசை யாழ்வார் இயற்பெயர் யாது
பக்திசாரர்
கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்
சீத்தலைச்சாத்தனார்
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர்
கேளாய் என்று கூறும் நூல் எது
மணிமேகலை
நரி விருத்தம் யார் பாடிய நூல்
திருத்தக்கதேவர்
கம்பரை ஆதரித்த வள்ளல் யார்
சடையப்பவள்ளல்
நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்
குணவீரபண்டிதர்
நளவெண்பா இயற்றியவர் யார்
புகழேந்திப்புலவர்
நன்னூல் யாரால் எழுதப் பெற்றது
பவணந்திமுனிவர்
ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது யார்
சிந்தாதேவி
சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்ளது.
புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் எது
பன்னிருபடலம்
யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்
அமிதசாகரர்
தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது
பொய்யா மொழிப் புலவர்
பெண்களின் பருவங்கள் எத்தனை
ஏழு
மூவருலா பாடியவர் யார்
ஒட்டக்கூத்தர்
கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை
18