Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்
# மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
# கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது – கரும்பு
கரையான் பூச்சி
# முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது – சைகோட்
# நெல்லில் காணப்படும் கனி வகை – காரியாப்சிஸ்
# ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்
கோமோஸ் விதைகள்
# படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி – ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
# மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் – நெருப்புக்கோழி
# அக்ரோசோமின் முக்கியப் பணி – அண்டத்தினுள் நுழைதல்
# இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்
ஹீமோபாயிடிக் செல்கள்
# பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்
ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
# ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை – டாக்டர். சாமுவேல் ஹென்மென்
# 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் – மூன்று
# கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் – ஜே.சி. போஸ்
# மார்சீலியா என்பது –நீர்த்தாவரம்
# தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
# ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
# வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
# தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
# அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்
சூரியன்
# உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
# நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
# கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.
# நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
# தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
# மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை
எனப்படும்.
# மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது
மண்புழு உரம்
# இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்
சின்னமால்டிஹைடு
# வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு
பாரமானி
# எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்