ஸ்ரீ தற்சமயம் ஸ்டான்போர்ட் வானொலியில் (KZSU 90.1 FM) வாரம் தோறும் இந்திய நிகழ்ச்சிகளை சிறப்புடன் ‘itsdiff radio’ (http://www.itsdiff.com) என்ற பெயரில் நடத்தி வருகிறார். பே ஏரியாவில் (Bay Area) வசிக்கும் நண்பர்கள் மற்றும், ஆவல் நிறைந்த திறமைசாலிகளின் உதவியுடன் சேவை மனப்பான்மையோடு கர்நாடக சங்கீதம், சிறப்பு நேர்காணல் மற்றும் நேயர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். க்ரியா கிரியேஷன்ஸ், பாரதி நாடக மன்றம் மற்றும் பே ஏரியா தமிழ் மன்றம் நடத்தும் சிறப்பு நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். கலாகேந்திரா திரு.கோவிந்தராஜன் அவர்களிடம் “நகைச்சுவையாளர்” நினைவுப்பட்டத்தைப் பெற்றவர். சிலிகான் வேலியில் “ப்ரோக்ராம் மானேஜராக” பணியாற்றி வருகிறார். தற்போது அதிகாலை.காமிற்காக அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தை வாரந்தோறும் ஒலிவடிவில் வழங்குகிறார்.பொன்னியின் செல்வன் : முதல் பாகம்: புது வெள்ளம்




