முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு ஜூன் 1ல் தண்ணீர் திறக்கவில்லை : விவசாயிகள் வேதனை

0
9
Share on Facebook
Tweet on Twitter

சின்னமனூர்: ஏமாற்றி வரும் தென்மேற்கு பருவ மழையால் நம்பிக்கை குறைந்து வருகின்றது. ஜூன் 1ம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 15 ஏக்கர் வயல்வெளிகளுக்கு வருடம் தோறும் நடக்கும் இருபோகம் நெல் விளைச்சலுக்கு முல்லை பெரியாற்றின் பாசனம் பிரதானமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் முதல்போகம் அரைகுறையாகவும் 2ம் போகமும் தரிசான நிலையும் கம்பம் பள்ளத்தாக்கு கண்டது. பருவமழைகள் தொலைந்துவிட்டதாலும், அணையின் நீர்மட்டம் சரிந்ததாலும் பாசன பற்றாக்குறைவாகி போனதால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை இதோ துவங்குகிறது அதோ வந்துவிட்டது என அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. அதேபோல் வானமும் கருமேகங்களை கொண்டும் சில்லென காற்றும் வீசி பரவசம் அடையும் நிலை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது. ஆனால் அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது வழக்கமாக கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படும். தவறினால் 20 நாட்கள் இடைவெளியிலாவது திறந்து விடுவதால் முதல் போகத்திற்கு விவசாயிகள் தயாராகி விடுவார்கள். ஆனால் தற்போது இருபோகம் துவங்கும் இந்த நடப்பாண்டிற்கு தென்மேற்கு பருவ மழையாக வருகின்ற வருண பகவான் கண் திறப்பாரா… விவசாயிகளின் கவலைகளை தீர்ப்பாரா? வழக்கமாக ஜூன் 1ந் தேதி தண்ணீர் திறக்காததால் தற்போது கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் எப்படியும் தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற அபார நம்பிக்கையும் விவசாயிகள் மனதில் பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Source: Dinakaran

Leave a Reply