
திருப்புத்தூர்: உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது. இக்கோயிலில் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் கொடி மரம் முன்பு கோயில் அறங்காவலர்கள் பெரியகருப்பன், மாணிக்கவாசகன் முன்னிலையிலும், கோயில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் தலைமையில் சோமசுந்தர குருக்கள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், தனபூஜை, கஜபூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜையை செய்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ப்ரவேசபலி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளும் துவங்கியது.ஏப்.30ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து பிள்ளையார்பட்டி கோயில் குடைமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
Source: Dinakaran